புதிய ஃபோர்டு ஆஸ்பயர் இடைசீர்த்திருத்த மாடலுக்கு முன்பதிவு ஆரம்பம்!!

இடைசீர்த்திருத்த பணிகள் செய்யப்பட்டு வரும் அக்டோபர் 6ல் விற்பனைக்கு வர இருக்கும் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காருக்கு டீலர்களில் முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. ரூ.11,000 முன்பணத்துடன் முன்பதிவு ஏற்றுக்

இடைசீர்த்திருத்த பணிகள் செய்யப்பட்டு விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காருக்கு டீலர்களில் முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் இடைசீர்த்திருத்த மாடலுக்கு முன்பதிவு ஆரம்பம்!!

வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்ட புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் வரும் அக்டோபர் 4ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முற்றிலும் புதிய மாடலாக அல்லாமல், இடைசீர்த்திருத்த பணிகள் செய்யப்பட்டு இந்த கார் களமிறக்கப்பட இருக்கிறது.

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் இடைசீர்த்திருத்த மாடலுக்கு முன்பதிவு ஆரம்பம்!!

விரைவில் விற்பனைக்கு களமிறக்கப்பட இருக்கும் நிலையில், இந்த காருக்கு முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. ரூ.11,000 செலுத்தி இந்த காருக்கு முன்பதிவு செய்து கொள்ளலாாம். இந்த காரின் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் இடைசீர்த்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் இடைசீர்த்திருத்த மாடலுக்கு முன்பதிவு ஆரம்பம்!!

முன்புறத்தில் புதிய க்ரில் அமைப்பு, புதிய பம்பர் மற்றும் C வடிவிலான பனி விளக்குகளுக்கான அலங்கார வேலைப்பாடு, ஹெட்லைட்டுகளின் பின்னணியில் கரும் பூச்சு கொடுக்கப்பட்டிருப்பது முக்கிய மாற்றங்களாக இருக்கின்றன. இந்த காரில் 15 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் இடைசீர்த்திருத்த மாடலுக்கு முன்பதிவு ஆரம்பம்!!

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரின் உட்புறத்தில் கருப்பு- பீஜ் வண்ண தீம் இடம்பெற்றிருக்கும். 6.5 அங்குல ஃப்ளோட்டிங் தொடுதிரையுடன் கூடிய பொழுதுபோக்கு மற்றும் தகவல் தொழில்நுட்ப சாதனம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த சாதனம், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட மொபைல்போன் செயலிகளுடன் இயைந்து செயல்படும்.

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் இடைசீர்த்திருத்த மாடலுக்கு முன்பதிவு ஆரம்பம்!!

இந்த காரில் சிங்க்-3 தொழில்நுட்பம் சேர்க்கப்பட இருக்கிறது. ஸ்டார்ட் - ஸ்டாப் பட்டன், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் வசதி, ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் வசதி மற்றும் யுஎஸ்பி போர்ட்டுகள் உள்ளிட்டவை முக்கிய வசதிகளாக விலை உயர்ந்த வேரியண்ட்டில் இடம்பெற்றுள்ளன.

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் இடைசீர்த்திருத்த மாடலுக்கு முன்பதிவு ஆரம்பம்!!

இந்த காரில் 1.2 லிட்டர் டிராகன் சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 95 பிஎச்பி பவரையும், 120 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வருகிறது. டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுக்கு பதிலாக சாதாரண ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் பெட்ரோல் மாடலில் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் இடைசீர்த்திருத்த மாடலுக்கு முன்பதிவு ஆரம்பம்!!

டீசல் மாடலில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படும். இந்த எஞ்சின் 98.6 பிஎச்பி பவரையும், 215 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் ஆப்ஷனில் டீசல் மாடல் கிடைக்கும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பின்னர் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் இடைசீர்த்திருத்த மாடலுக்கு முன்பதிவு ஆரம்பம்!!

ஃபோர்டு ஆஸ்பயர் கார் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கிறது. வடிவமைப்பு மாற்றங்களும், சிங்க்-3 தொழில்நுட்பமும், புதிய பெட்ரோல் எஞ்சின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் முக்கிய மாற்றங்களாக இருக்கும்.

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் இடைசீர்த்திருத்த மாடலுக்கு முன்பதிவு ஆரம்பம்!!

ஃபோர்டு ஆஸ்பயர் பெட்ரோல் மாடல் ரூ.5.72 லட்சத்திலிருந்தும், டீசல் மாடல் ரூ.6.89 லட்சத்திலிருந்தும் விற்பனை செய்யப்படுகிறது. இதைவிட சற்றே கூடுதல் விலையில் இடைசீர்த்திருத்த மாடல் எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் கார்களில் புதிய தலைமுறை மாடல்கள் வந்ததையடுத்து, இந்த இடைசீர்த்திருத்த மாடல் அவசியமாகி இருக்கிறது.

Article Published On: Tuesday, September 25, 2018, 11:19 [IST]
English summary
Ford India is all set to launch the new Aspire facelift in the country on October 4, 2018. Ahead of that, the company has opened the bookings for the upcoming Ford Aspire facelift. The new Ford Aspire facelift will feature subtle changes to the design and will come with a host of new features.
மேலும்... #ஃபோர்டு
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+