ஃபோர்டு ஆஸ்பயர் கார் உற்பத்தி இந்தியாவில் நிறுத்தம்... காரணம் என்ன?

ஃபோர்டு ஆஸ்பயர் காரின் உற்பத்தி இந்தியாவில் நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதனையடுத்து, விரைவில் புதிய மாடல் வருவது உறுதியாகி இருக்கிறது.

By Saravana Rajan

காம்பேக்ட் செடான் கார் மார்க்கெட்டில் சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட மாடலாக ஃபோர்டு ஆஸ்பயர் விளங்குகிறது. இந்த நிலையில், புதிய மாருதி டிசையர், ஹூண்டாய் எக்ஸ்சென்ட் மற்றும் விரைவில் வர இருக்கும் புதிய ஹோண்டா அமேஸ் கார்களால் ஃபோர்டு ஆஸ்பயர் காருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் ஃபோர்டு ஆஸ்பயர் கார் உற்பத்தி நிறுத்தம்... காரணம்?

இதனை மனதில் வைத்து மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ஆஸ்பயர் காரை அறிமுகம் செய்ய ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும், புதிய மாடல் வரும் ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஓவர்ட்ரைவ் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

இந்தியாவில் ஃபோர்டு ஆஸ்பயர் கார் உற்பத்தி நிறுத்தம்... காரணம்?

இதனால், தற்போதைய மாடலின் உற்பத்தி நிறுத்தப்பட்டு இருக்கிறது. குஜராத் மாநிலம், சனந்த் தொழிற்பேட்டையில் உள்ள ஃபோர்டு ஆலையிலிருந்து வெளிவந்த கடைசி ஃபோர்டு ஆஸ்பயர் காருக்கு ஊழியர்கள் விடை கொடுக்கும்போது எடுக்கப்பட்ட படங்களும் வெளியாகி இருக்கின்றன.

இந்தியாவில் ஃபோர்டு ஆஸ்பயர் கார் உற்பத்தி நிறுத்தம்... காரணம்?

தற்போதைய மாடலைவிட புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களை பெற்றிருக்கும். முன்புறத்திலும், பின்புறத்திலும் புதிய பம்பர் அமைப்பு இடம்பெற இருக்கிறது.

இந்தியாவில் ஃபோர்டு ஆஸ்பயர் கார் உற்பத்தி நிறுத்தம்... காரணம்?

இதுதவிர, பின்புறத்தில் டெயில் லைட் மற்றும் பூட் ரூம் மூடி பகுதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதுடன், புதிய அலாய் வீல்களும் பொருத்தப்பட்டு இருக்கும்.

இந்தியாவில் ஃபோர்டு ஆஸ்பயர் கார் உற்பத்தி நிறுத்தம்... காரணம்?

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரில் தொடுதிரை வசதியுடன் புதிய இன்ஃஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெறும் என்பதுடன், SYNC3 என்ற அதிநவீன தொடர்பு சாஃப்ட்வேர் கொடுக்கப்பட்டு இருக்கும். ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேர்களையும் இந்த சாதனம் சப்போர்ட் செய்யும்.

இந்தியாவில் ஃபோர்டு ஆஸ்பயர் கார் உற்பத்தி நிறுத்தம்... காரணம்?

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரில் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இடம்பெற இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 121 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

இந்தியாவில் ஃபோர்டு ஆஸ்பயர் கார் உற்பத்தி நிறுத்தம்... காரணம்?

டீசல் மாடலில் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 98.9 பிஎச்பி பவரையும், 215 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

இந்தியாவில் ஃபோர்டு ஆஸ்பயர் கார் உற்பத்தி நிறுத்தம்... காரணம்?

வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் பல புதிய மாற்றங்களுடன் வரும் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் போட்டியாளர்களைவிட சற்றே பிரிமியம் அம்சங்களை பெற்றிருக்கும் என்பதால், காம்பேக்ட் செடான் கார் மார்க்கெட்டில் போட்டி அதிகரிக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 28, 2018, 11:20 [IST]
English summary
In the past few days, an image of a Ford Aspire has been doing the rounds on the internet stating that the production of the sedan has been stopped. Yes, the production of the current-gen Aspire has come to an end.
மேலும்... #ford
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+