கேரளாவின் சாலைகளில் புதிய ஸ்விஃப்ட் காரை சுற்றவைத்த மாருதி சுஸுகி.... காரணம் இதுதான்..!!

Written By:
Recommended Video - Watch Now!
Bangalore Bike Accident At Chikkaballapur Near Nandi Upachar - DriveSpark

இந்தியா மட்டுமில்லாமல் உலகளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் புதிய தலைமுறைக்கான ஸ்விஃப்ட் காரை வெளியிட மாருதி சுஸுகி தீவிரமாக தயாராகி வருகிறது.

கேரளாவில் சுற்றிவரும் புதிய தலைமுறைக்கான ஸ்விஃப்ட் கார்..!!

2018 ஸ்விஃப்ட் காரின் தோற்றம் மற்றும் வடிவமைப்பு புதுமையாக அமைந்துள்ள நிலையில், அது தொடர்பாக வெளியான புகைப்படங்கள் ஏற்கனவே வாடிக்கையாளர்கள் மத்தியில் வைரலாகி உள்ளன.

கேரளாவில் சுற்றிவரும் புதிய தலைமுறைக்கான ஸ்விஃப்ட் கார்..!!

இந்தாண்டிற்கான ஆட்டோ எக்ஸ்போ வரும் பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது. அந்த நிகழ்வில் புதிய தலைமுறைக்கான ஸ்விஃப்ட் காரை மாருதி சுஸுகி அறிமுகம் செய்கிறது.

கேரளாவில் சுற்றிவரும் புதிய தலைமுறைக்கான ஸ்விஃப்ட் கார்..!!

இந்நிலையில், புதிய ஸ்விஃப்ட் கார் கேரளாவின் கொச்சி நகரத்தில் சுற்றி வருவதாக கூறி டீம் பிஹெச்பி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

சிவப்பு நிறத்திலான அந்த கார் பார்க்க மிகவும் அட்டகாசமாகவும், அதே சமயத்தில் பதிவு எண்களை பெற்றிருக்காமல் உள்ளது.

கேரளாவில் சுற்றிவரும் புதிய தலைமுறைக்கான ஸ்விஃப்ட் கார்..!!

இந்த காரின் முன்பக்கத்தில் பெரிய கிரில், புதிய வடிவமைப்பை பெற்ற முகப்பு விளக்குகள், ஸ்போர்ட்டி பம்பர் மற்றும் வட்டவடிவிலான ஃபாக் விளக்குகள் ஆகியவை புதிய ஸ்விஃப்ட் காருக்கான புத்தம் புதிய தோற்றப்பொலிவை அளிக்கின்றன.

கேரளாவில் சுற்றிவரும் புதிய தலைமுறைக்கான ஸ்விஃப்ட் கார்..!!

மேலும் காரின் முன்பகுதியில் ப்ரொஜெக்டர் விளக்குகள், எல்.இ.டி பகல்நேர விளக்குகள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. இது புதிய ஸ்விஃப்ட் காருக்கான மேம்படுத்தப்பட்ட மாற்றங்களை வழங்கியுள்ளது.

Trending On Drivespark Tamil:

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளின் லிமிடேட் எடிசன் அறிமுகம்!

புதிய ஸ்விஃப்ட் மாடல் விற்பனைக்கு வருவதற்கு முன்னரே ரூ. 17000 வரை கார்கள் விலையை உயர்த்திய மாருதி..!

கேரளாவில் சுற்றிவரும் புதிய தலைமுறைக்கான ஸ்விஃப்ட் கார்..!!

புதிய ஸ்விஃப்ட் காருக்கான பக்கவாட்டில், அந்த மாடலுக்கே உரித்தான செங்குத்தான கூரை வடிவமைப்பு, இந்த புதிய தலைமுறை தயாரிப்பிலும் தொடர்கிறது.

கேரளாவில் சுற்றிவரும் புதிய தலைமுறைக்கான ஸ்விஃப்ட் கார்..!!

தவிர, கார்களின் கதவுகள், பின்புற பகுதிகள் மற்றும் கார் கண்ணாடிகளின் அமைப்பு ஆகியவை செங்குத்தான கூரை வடிவமைப்பிற்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டுள்ளன.

கேரளாவில் சுற்றிவரும் புதிய தலைமுறைக்கான ஸ்விஃப்ட் கார்..!!

புதியதாக வடிவமைக்கப்பட்ட எல்.இ.டி டெயில் விளக்குகள், சிறியதாக மாற்றம் செய்யப்பட்ட டெயில்கேட் மற்றும் பம்பர் ஆகியவை 2018 ஸ்விஃப்ட் கார் ரியர் பகுதிக்கான கவனிக்கத்தக்க அம்சங்களாக உள்ளன.

கேரளாவில் சுற்றிவரும் புதிய தலைமுறைக்கான ஸ்விஃப்ட் கார்..!!

தொடர்ந்து நாம் உற்றுநோக்க வேண்டியவற்றில் நெக்ஸா ஸ்டைல் பேட்ஜிங் இந்த புதிய தலைமுறைக்கான ஸ்விஃப்ட் காரில் உள்ளது.

இதன் காரணமாக இந்த மாடல் நெக்ஸா டீலர்ஷிப் மூலம் இந்தியாவில் விற்பனை செய்யப்பட வாய்ப்புள்ளது.

கேரளாவில் சுற்றிவரும் புதிய தலைமுறைக்கான ஸ்விஃப்ட் கார்..!!

மூன்றாவது தலைமுறையாக தயாரிக்கப்பட்டுள்ள ஸ்விஃப்ட் கார் ஹார்டெக்ட் பிளாட்ஃபாரமின் கீழ் தயாராகியுள்ளது.

டிசையர் மற்றும் பலேனோ மாடல்கள் தயாரிக்கப்பட்ட அதே உயர்தர உலோகத்தால் தான் புதிய ஸ்விஃப்ட் காரும் உருவாக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் சுற்றிவரும் புதிய தலைமுறைக்கான ஸ்விஃப்ட் கார்..!!

ஹார்டெக்ட் பிளாட்ஃபாரமில் தயாராகியுள்ளதால், தற்போதைய மாடலை விட 2018 ஸ்விஃப்ட் மிகவும் எடை குறைவாக இருக்கும். மேலும் இதை கையாள்வது எளிதாக இருக்கும்.

கேரளாவில் சுற்றிவரும் புதிய தலைமுறைக்கான ஸ்விஃப்ட் கார்..!!

எரிவாயு கொள்ளவையும் கூடுதலாக வழங்கும் இந்த கார் தற்போதைய தேவைகளை கருதி மிகவும் உயர்தர வடிவமைப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் காரின் உட்புறத்திலும் இடவசதி அதிகமாக உள்ளது.

கேரளாவில் சுற்றிவரும் புதிய தலைமுறைக்கான ஸ்விஃப்ட் கார்..!!

புதிய ஃபிளாட்-பாட்டம் ஸ்டீயரிங் வீல், தொடுதிரைக்கொண்ட இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ட்வின் பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை ஸ்விஃப்ட் காரின் உள்கட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன.

கேரளாவில் சுற்றிவரும் புதிய தலைமுறைக்கான ஸ்விஃப்ட் கார்..!!

1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என இருவேறு தேர்வுகள் கொண்ட எஞ்சினில் இந்த கார் வெளிவருகிறது. எஞ்சின் தேர்வுகளுக்கு ஏற்றவாறு 82 பிஎச்பி மற்றும் 74 பிஎச்பி ஆற்றலை இது வழங்கும்.

கேரளாவில் சுற்றிவரும் புதிய தலைமுறைக்கான ஸ்விஃப்ட் கார்..!!

5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ள புதிய ஸ்விஃப்ட் கார் ஏஎம்டி தேவையிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர ஆட்டோ கியர் ஷிஃப்ட், ஏபிஸ் மற்றும் முன்பக்க இருக்கைகளில் ஏர்பேகுகள் என பாதுகாப்பு கட்டமைப்புகளும் இந்த காரில் கவனமீர்க்கின்றன.

Trending On Drivespark Tamil:

ரயிலின் கடைசிப்பெட்டிய கவனிச்சா பின்னாடி 'X'-ன்னு வரையப்பட்டுயிருக்கும்... அது ஏன் தெரியுமா..??

ரூ.3 கோடி விலையில் புதிய லம்போர்கினி உரஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

கேரளாவில் சுற்றிவரும் புதிய தலைமுறைக்கான ஸ்விஃப்ட் கார்..!!

2018 ஸ்விஃப்ட் காரில் இடம்பெற்றுள்ள அனைத்து வடிவமைப்பு அம்சங்களும் புதுமையாக உள்ளன. ஆனால் பழைய மாடல்களில் இடம்பெற்றிருந்த அதே ஸ்டைலிங் இதிலும் பின்பற்றப்பட்டுள்ளது.

கேரளாவில் சுற்றிவரும் புதிய தலைமுறைக்கான ஸ்விஃப்ட் கார்..!!

மேலும் தற்போது டீம் பிஹெச்பி இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின்படி, புதிய தலைமுறைக்கான ஸ்விஃப்ட் கார் நெக்ஸா டீலர்ஷிப்புகளில் விற்பனை செய்யப்படும் என்று தெரிகிறது.

கேரளாவில் சுற்றிவரும் புதிய தலைமுறைக்கான ஸ்விஃப்ட் கார்..!!

ஃபோர்டு ஃபிகோ மற்றும் ஹூண்டாய் கிரான்டு ஐ10 கார்களுக்கு போட்டியாக இந்தியாவில் வெளிவரும் புதிய ஸ்விஃப்ட் கார் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்படுகிறது.

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

English summary
Read in Tamil: 2018 Maruti Swift Spotted In India Ahead Of Launch. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark