ஃபோக்ஸ்வேகன் போலோ கார்கள் திரும்ப பெறப்படுகின்றன...!

சீட் பெல்ட்டில் பிரச்னை இருப்பதால் ஃபோக்ஸ்வேகன் போலோ கார்கள் திரும்ப பெறப்பட்டு, குறைகள் சரி செய்யப்பட்ட பின்பு மீண்டும் வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

By Arun

தொழில்நுட்ப கோளாறுகள்

ஒவ்வொரு நிறுவனத்தின் கார்களும் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்பே வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன. ஆனாலும் பல்வேறு கட்ட சோதனைகளையும் மீறி கார்களில் ஏதேனும் தொழில்நுட்ப கோளாறுகளும், குறைகள் ஏற்பட்டு விடுகின்றன.

ஃபோக்ஸ்வேகன் போலோ கார்கள் திரும்ப பெறப்படுகின்றன...!

திரும்ப பெறப்படும்

அப்படி குறைகள் ஏற்பட்ட கார்களை அந்தந்த நிறுவனங்கள் முதலில் திரும்ப பெறுகின்றன. பின்னர் குறைகளை நிவர்த்தி செய்தபின் மீண்டும் வாடிக்கையாளர்களிடம் திருப்பி வழங்குகின்றன.

ஃபோக்ஸ்வேகன் போலோ கார்கள் திரும்ப பெறப்படுகின்றன...!

மாருதி சுசூகி, ஹோண்டா

இந்த வகையில் முந்தைய காலங்களில் மாருதி சுசூகி, ஹோண்டா உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்களின் கார்களில் குறைகள் இருந்ததால், அவற்றை மொத்தமாக திரும்ப பெற்று, குறைகளை சரி செய்தபின் மீண்டும் வாடிக்கையாளர்களிடம் வழங்கியுள்ளன.

ஃபோக்ஸ்வேகன் போலோ கார்கள் திரும்ப பெறப்படுகின்றன...!

ஃபோக்ஸ்வேகன், சியட்

இந்த வகையில் ஃபோக்ஸ்வேகன், சியட் நிறுவன கார்களில் தற்போது சீட் பெல்ட்களில் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் போலோ கார்கள் திரும்ப பெறப்படுகின்றன...!

போலோ

ஃபோக்ஸ்வேகன் புதிய தலைமுறை போலோ ஹேட்ச்பேக் கார்களிலும், சியட் ஐபிசா மற்றும் அரோனா ஆகிய கார்களிலும்தான் சீட் பெல்ட் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால்தான் அந்த கார்கள் திரும்ப பெறப்படுகின்றன.

ஃபோக்ஸ்வேகன் போலோ கார்கள் திரும்ப பெறப்படுகின்றன...!

எச்சரிக்கை

இதனை மிகப்பெரிய பாதுகாப்பு பிரச்னை என்று சொல்லி விட முடியாது. என்றாலும் குறைகள் நிவர்த்தி செய்து திரும்ப வழங்கப்படும் வரை பின்பக்க மிடில் சீட் பெல்ட் லாக்கை பயன்படுத்த வேண்டாம் என ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் புதிய தலைமுறை போலோ வாடிக்கையாளர்களிடம் கேட்டு கொண்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் போலோ கார்கள் திரும்ப பெறப்படுகின்றன...!

இறுதிகட்ட வெரிபிஷேனுக்காக காத்திருப்பு

சீட் பெல்ட் லாக்கை மறுவடிவமைப்பு செய்வது தொடர்பான இறுதி கட்ட வெரிபிகேஷனுக்காக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தற்போது காத்து கொண்டுள்ளது. அது முடிவடைந்ததும் விற்பனை செய்யப்பட்ட கார்கள் சரி செய்து தரப்படும். அதன்பின்பு புதிய கார்கள் சரியான முறையில் உற்பத்தி செய்யப்படும்.

ஃபோக்ஸ்வேகன் போலோ கார்கள் திரும்ப பெறப்படுகின்றன...!

வாடிக்கையாளர்கள் அணுகலாம்

இதுதொடர்பான அப்ரூவலுக்கு பின், கார்களை திரும்ப பெற்று சரி செய்து தருவது தொடர்பாக ஃவோக்ஸ்வேகன் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும். பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்கள் அப்போது அவர்களை அணுகலாம்.

ஃபோக்ஸ்வேகன் போலோ கார்கள் திரும்ப பெறப்படுகின்றன...!

இலவசம்

அதுமட்டுமின்றி அருகில் உள்ள டீலர்ஷிப்களையும் அணுகலாம். சீட் பெல்ட் ரீப்ளேஸ்மென்டை டீலர்ஷிப் நிறுவனங்கள் இலவசமாக செய்து வழங்கும்.

ஃபோக்ஸ்வேகன் போலோ கார்கள் திரும்ப பெறப்படுகின்றன...!

வாடிக்கையாளர் பாதுகாப்பே முக்கியம்

இந்த பிரச்னை மிகச்சிறியதுதான். இருந்தாலும் கார்களை விற்பனை செய்வதை விட வாடிக்கையாளர்களின் பாதுகாப்பே முதன்மையானது என ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபோக்ஸ்வேகன் போலோ கார்கள் திரும்ப பெறப்படுகின்றன...!

4,11,000 கார்கள்

2,20,000 புதிய போலோ கார்களும், 1,91,000 சியட் கார்களும் என மொத்தம் 4,11,000 கார்கள் திரும்ப பெறப்பட்டு, மீண்டும் வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
New-Gen Volkswagen Polo Recalled Over Seat Belt Issue.read in tamil
Story first published: Saturday, May 12, 2018, 18:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X