எஸ்யூவி கார்களுக்கே சவால் விடும் வகையில் பிரம்மாண்டமாக வருகிறது புதிய மாருதி சுஸுகி வேகன் ஆர்...

எஸ்யூவி கார்களுக்கே சவால் விடும் வகையில் உற்பத்தி செய்யப்படவுள்ள புதிய தலைமுறை மாருதி சுஸுகி வேகன் ஆர் கார் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்? என்ற தகவல் தற்போது வெளியே கசிந்துள்ளது.

எஸ்யூவி கார்களுக்கே சவால் விடும் வகையில் உற்பத்தி செய்யப்படவுள்ள புதிய தலைமுறை மாருதி சுஸுகி வேகன் ஆர் கார் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்? என்ற தகவல் தற்போது வெளியே கசிந்துள்ளது.

புதிய தலைமுறை மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் அறிமுக விபரம் கசிந்தது... சான்ட்ரோ, டியாகோவுக்கு செக்

புதிய தலைமுறை 2019 மாருதி சுஸுகி வேகன் ஆர் ஹேட்ச்பேக் கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கார் இந்தியாவில் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது? என்பது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

புதிய தலைமுறை மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் அறிமுக விபரம் கசிந்தது... சான்ட்ரோ, டியாகோவுக்கு செக்

இதன்படி புதிய தலைமுறை 2019 மாருதி சுஸுகி வேகன் ஆர் கார், 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் அதாவது அடுத்த மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. எனவே அடுத்த மாத முதல் வாரத்தில், இந்த காரினுடைய உற்பத்தி தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய தலைமுறை மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் அறிமுக விபரம் கசிந்தது... சான்ட்ரோ, டியாகோவுக்கு செக்

ஹரியானா மாநிலம் மனேசர் நகரில் இயங்கி வரும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் தொழிற்சாலையில், புதிய தலைமுறை 2019 வேகன் ஆர் கார் உற்பத்தி செய்யப்படவுள்ளது. உற்பத்தி தொடங்கிய உடனேயே நாடு முழுவதும் உள்ள டீலர்ஷிப்களுக்கு கார்கள் அனுப்பி வைக்கப்படும்.

புதிய தலைமுறை மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் அறிமுக விபரம் கசிந்தது... சான்ட்ரோ, டியாகோவுக்கு செக்

தற்போது விற்பனையில் உள்ள வேகன் ஆர் காரை காட்டிலும், புதிய தலைமுறை 2019 வேகன் ஆர் காரானது, நீளமாகவும், அகலமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் பயணிகளுக்கு உட்புறத்தில் நல்ல இடவசதி கிடைக்கும்.

புதிய தலைமுறை மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் அறிமுக விபரம் கசிந்தது... சான்ட்ரோ, டியாகோவுக்கு செக்

புதிய தலைமுறை 2019 வேகன் ஆர் காரின் முன்புற மற்றும் பின்புற லுக் மாற்றம் செய்யப்பட்டிருப்பது, சமீபத்தில் வெளியான அதன் ஸ்பை படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதன் டாப் எண்ட் வேரியண்ட், ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் மற்றும் எல்இடி டிஆர்எல்கள் உடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தலைமுறை மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் அறிமுக விபரம் கசிந்தது... சான்ட்ரோ, டியாகோவுக்கு செக்

முன்பகுதியில் புதிய பம்பர் உடன் புதிய க்ரிலும் இடம்பெறவுள்ளது. ஒட்டுமொத்தத்தில் புதிய தலைமுறை 2019 வேகன் ஆர் காரானது, மினி எஸ்யூவி போன்று காட்சியளிக்கவுள்ளது. இந்த காரினுடைய உட்புறத்தில் ட்யூயல் டோன் ஃபினிஷ் இடம்பெறலாம்.

புதிய தலைமுறை மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் அறிமுக விபரம் கசிந்தது... சான்ட்ரோ, டியாகோவுக்கு செக்

ஸ்டியரிங் மவுண்டட் கன்ட்ரோல்ஸ், பவர் விண்டோஸ் மற்றும் ஆட்டோ ஏசி உள்ளிட்ட வசதிகளும், புதிய தலைமுறை 2019 மாருதி சுஸுகி வேகன் ஆர் காரில் இடம்பெறவுள்ளன. இதன் இருக்கைகள் அதிக சௌகரியம் அளிக்கும் வகையில், பெரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தலைமுறை மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் அறிமுக விபரம் கசிந்தது... சான்ட்ரோ, டியாகோவுக்கு செக்

புதிய தலைமுறை 2019 மாருதி சுஸுகி வேகன் ஆர் காரில், அப்டேட் செய்யப்பட்ட 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இடம்பெறவுள்ளது. அதிக பவர் மற்றும் மைலேஜை வழங்கும் வகையில் இந்த இன்ஜின் ட்யூன் செய்யப்படவுள்ளது. அத்துடன் சிஎன்ஜி, எல்பிஜி என ட்யூயல் ப்யூயல் ஆப்ஷனும் வழங்கப்படவுள்ளது.

புதிய தலைமுறை மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் அறிமுக விபரம் கசிந்தது... சான்ட்ரோ, டியாகோவுக்கு செக்

ஆனால் டீசல் ஆப்ஷன் வழங்கப்படாது. பாதுகாப்பு என்ற விஷயத்தில், அனைத்து புதிய தலைமுறை மாருதி சுஸுகி கார்களை போல், வேகன் ஆர் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் ட்யூயல் ஏர் பேக்குகள் மற்றும் ஏபிஎஸ் ஆகியவை ஸ்டாண்டர்டாக வழங்கப்படவுள்ளன.

புதிய தலைமுறை மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் அறிமுக விபரம் கசிந்தது... சான்ட்ரோ, டியாகோவுக்கு செக்

ஹூண்டாய் சான்ட்ரோ மற்றும் டாடா டியாகோ உள்ளிட்ட கார்களுடன், புதிய தலைமுறை 2019 மாருதி சுஸுகி வேகன் ஆர் கார் போட்டியிடும். இதன் விலை ரூ.4.3 லட்சம் முதல் ரூ.5.5 லட்சம் வரையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
New Generation Maruti Suzuki WagonR To Launch On January 2019 In India. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X