புதிய ஹோண்டா அமேஸ் காரின் உற்பத்தி துவங்கியது: 16ந் தேதி விற்பனைக்கு வருகிறது

By Saravana Rajan

வரும் 16ந் தேதி புதிய ஹோண்டா அமேஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், உற்பத்தி துவங்கப்பட்டு இருக்கிறது. இதனால், விற்பனைக்கு வந்தவுடன் டெலிவிரி கொடுக்கும் பணிகளும் துவங்கப்பட்ட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

புதிய ஹோண்டா அமேஸ் காரின் உற்பத்தி துவங்கியது: 16ந் தேதி விற்பனைக்கு வருகிறது

தற்போதைய மாடலிலிருந்து வடிவமைப்பு மற்றும் வசதிகளில் முற்றிலும் புதிய கார் மாடலாக மாறி இருக்கிறது ஹோண்டா அமேஸ். புதிய முகப்பு, எல்இடி பகல்நேர விளக்குகள், க்ரில் அமைப்பு ஆகியவை வலிமையான செடான் கார் தோற்றத்தை வழங்குகிறது.

புதிய ஹோண்டா அமேஸ் காரின் உற்பத்தி துவங்கியது: 16ந் தேதி விற்பனைக்கு வருகிறது

பக்கவாட்டு தோற்றத்திற்கு15 அங்குல அலாய் சக்கரங்கள் வலு சேர்க்கின்றன. பின்பக்க டிசைன் கவர்ச்சிகரமாக மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. எல்இடி டெயில் லைட் க்ள்ஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா அமேஸ் காரின் உற்பத்தி துவங்கியது: 16ந் தேதி விற்பனைக்கு வருகிறது

உட்புறத்தில் இரட்டை வண்ண டேஷ்போர்டு அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. 7 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. ஸ்டார்ட்- ஸ்டாப் பட்டன் வசதி இருக்கிறது. சிவிடி மாடலில் பேடில் ஷிஃப்ட் வசதியும் உள்ளது.

புதிய ஹோண்டா அமேஸ் காரின் உற்பத்தி துவங்கியது: 16ந் தேதி விற்பனைக்கு வருகிறது

புதிய ஹோண்டா அமேஸ் காரில் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ஷார்க் ஆன்டென்னா, இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்க் பார்க்கிங் கேமரா ஆகிய வசதிகள் உள்ளன.

புதிய ஹோண்டா அமேஸ் காரின் உற்பத்தி துவங்கியது: 16ந் தேதி விற்பனைக்கு வருகிறது

புதிய ஹோண்டா அமேஸ் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் தக்க வைக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் எஞ்சின் 89 பிஎச்பி பவரையும், 110 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 100 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

புதிய ஹோண்டா அமேஸ் கார் இ, எஸ், வி மற்றும் விஎக்ஸ் ஆகிய 4 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். முதலில் முன்பதிவு செய்யும் 20,000 வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு அறிமுக விலையில் கிடைக்கும்.

புதிய ஹோண்டா அமேஸ் காரின் உற்பத்தி துவங்கியது: 16ந் தேதி விற்பனைக்கு வருகிறது

புதிய ஹோண்டா அமேஸ் கார் தற்போதைய மாடலைவிட சற்று கூடுதல் விலையில் கிடைக்கும். மாருதி டிசையர், ஹூண்டாய் எக்ஸென்ட் உள்ளிட்ட கார் மாடல்களுக்கு நேரடி போட்டியாக வர இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 3, 2018, 17:39 [IST]
English summary
Honda is all set to launch new Amaze in the Indian market on May 16, 2018. Now, Honda has commenced the production of the second-gen Amaze at its Tapukara manufacturing facility in Rajasthan. The new Amaze features a new design and comes with a host of new features.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+