விரைவில் அறிமுகமாகிறது புதிய ஹோண்டா பிரியோ கார்!!

அடுத்த மாதம் இந்தோனேஷியாவில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில், புதிய தலைமுறை ஹோண்டா பிரியோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வடிவமைப்பிலும், வசதிகளிலும் முற்றிலும் புதிய மாடலாக அறிமுகம

By Saravana Rajan

அடுத்த மாதம் இந்தோனேஷியாவில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில், புதிய தலைமுறை ஹோண்டா பிரியோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விரைவில் அறிமுகமாகிறது புதிய ஹோண்டா பிரியோ கார்!!

ஹோண்டா பிரியோ கார் விற்பனையில் சோபிக்காமல் போனதற்கு, அதன் டிசைன் எல்லோரையும் கவரவில்லை. பிரியோ காரில் மாறுதல் செய்து ஹோண்டா வெளியிடும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு உருப்படியாக இதுவரை எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை என்பது ஏமாற்றத்தை தந்தது.

விரைவில் அறிமுகமாகிறது புதிய ஹோண்டா பிரியோ கார்!!

இந்த நிலையில், முற்றிலும் புதிய வடிவமைப்பில் ஹோண்டா பிரியோ கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வரும் ஆகஸ்ட் 2ந் தேதி இந்தோனேஷியாவில் துவங்க இருக்கும் கெய்கிண்டோ இந்தோனேஷியா இன்டர்நேஷனல் ஆட்டோ ஷோவில் புதிய தலைமுறை ஹோண்டா பிரியோ கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

விரைவில் அறிமுகமாகிறது புதிய ஹோண்டா பிரியோ கார்!!

இந்த ஆண்டு துவக்கத்தில் இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்யப்பட்ட, ஹோண்டா ஆர்எஸ் கான்செப்ட் காரின் அடிப்படையில் புதிய பிரியோ கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், ஆர்எஸ் கான்செப்ட்டில் கவர்ச்சிக்காக கொடுக்கப்பட்டு இருந்த பாடி கிட் மற்றும் டிஃபியூசர் உள்ளிட்ட கூடுதல் ஆக்சஸெரீகள் சிலவற்றை நீக்கி புதிய பிரியோ காரை அறிமுகம் செய்ய இருக்கிறது ஹோண்டா.

விரைவில் அறிமுகமாகிறது புதிய ஹோண்டா பிரியோ கார்!!

ஹோண்டா பிரியோ காரின் முன்பக்க க்ரில் அமைப்பு பெரியதாகவும், பார்க்க வசீகரமாகவும் இருக்கும். இந்தோனேஷியாவில் விற்பனை செய்யப்படும் மொபிலியோ எம்பிவி காரின் க்ரில் அமைப்பு அப்படியே பின்பற்றப்பட்டு இருக்கிறது. பியானோ பிளாக் என்ற பளபளப்பான கருப்பு வண்ணம் க்ரில் அமைப்பில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மூன்று பகுதிகளாக காட்சி தரும் ஏர்டேம் பகுதியின் இருமுனைகளிலும் எல்இடி பட்டை கொடுக்கப்பட்டு இருக்கிறது.

விரைவில் அறிமுகமாகிறது புதிய ஹோண்டா பிரியோ கார்!!

ஆர்எஸ் கான்செப்ட் காரின் அடிப்படையிலே பின்புற டிசைன் இருந்தால் சிறப்பாக இருக்கும். ஏனெனில், தற்போதுள்ள மாடலில் பெரிய குறையே, பின்புற டிசைன்தான். இந்த குறை நிச்சயம் நிவர்த்தி செய்யப்பட்டிருக்கும். பூட் ரூம் இடவசதி அதிகரிக்கும் வகையில், சற்று புடைப்பான டெயில் கேட் அமைப்புடன் வரும் என்று எதிர்பார்கக்கப்படுகிறது.

விரைவில் அறிமுகமாகிறது புதிய ஹோண்டா பிரியோ கார்!!

இன்டீரியர் குறித்த தகவல்கள் இல்லை. எனினும், அண்மையில் வந்த புதிய ஹோண்டா அமேஸ் காரின் டேஷ்போர்டு மற்றும் சிறப்பம்சங்களை இந்த புதிய பிரியோ கார் பங்கிட்டுக் கொள்ளும் என நம்பலாம். தொடுதிரை வசதியுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி ஆகியவை டாப் வேரியண்ட்டில் இடம்பெற்றிருக்கும்.

விரைவில் அறிமுகமாகிறது புதிய ஹோண்டா பிரியோ கார்!!

இந்தோனேஷியாவில் ஹோண்டா பிரியோ கார் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தக்க வைக்கப்படும். மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் வரும்.

விரைவில் அறிமுகமாகிறது புதிய ஹோண்டா பிரியோ கார்!!

புதிய ஹோண்டா பிரியோ கார் இந்திய வருகை குறித்து இதுவரை எந்த தகவலையும் ஹோண்டா கார் நிறுவனம் வெளியிடவில்லை. எனினும், அடுத்த ஆண்டு மத்தியில் இந்தியாவில் புதிய பிரியோ கார் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஹூண்டாய் கிராண்ட் 10, மாருதி ஸ்விஃப்ட் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும்.

Source: Autocar India

More from DriveSpark

Article Published On: Tuesday, July 17, 2018, 15:01 [IST]
English summary
Honda Motors is expected to globally unveil their new Brio hatchback at GIIAS 2018 in Jakarta. The Gaikindo Indonesia International Auto Show (GIIAS) is scheduled to start from the 2nd August.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+