புதிய ஹோண்டா சிவிக் காரில் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்?

ஐரோப்பாவில் விற்பனை செய்யப்படும் புதிய ஹோண்டா சிவிக் காரில் 1.6 லிட்டர் டீசல் எஞ்சினுடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

By Saravana Rajan

ஐரோப்பாவில் விற்பனை செய்யப்படும் புதிய ஹோண்டா சிவிக் காரில் 1.6 லிட்டர் டீசல் எஞ்சினுடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதே மாடல் இந்தியாவிலும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஹோண்டா சிவிக் காரில் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்?

கடந்த பிப்ரவரியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் 10வது தலைமுறையாக வெளியிடப்பட்ட புதிய ஹோண்டா சிவிக் கார் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. அப்போதே, இந்தியர்கள் மத்தியில் இந்த கார் ஆவலைத் தூண்டியது. இந்த நிலையில், இந்த காரில் அசத்தலான பல தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற இருப்பது தெரிந்தது.

புதிய ஹோண்டா சிவிக் காரில் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்?

இந்தநிலையில், இந்தியா வரும் புதிய ஹோண்டா சிவிக் காரின் டீசல் மாடலில் 9 ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த காரில் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன் பயன்படுத்தப்பட இருப்பதாக தெரிகிறது.

புதிய ஹோண்டா சிவிக் காரில் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்?

குறிப்பாக 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் இந்த புதிய தலைமுறை சிவிக் காரிலும் இடம்பெற இருக்கிறது. இந்த டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். டீசல் ஆட்டோமேட்டிக் மாடல் 0 - 100 கிமீ வேகத்தை 11 வினாடிகளில் எட்டிவிடும் திறன் பெற்றிருக்கும்.

புதிய ஹோண்டா சிவிக் காரில் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்?

புதிய சிவிக் காரில் கொடுக்கப்படும் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மிகச் சிறப்பான செயல்திறனை வழங்கும் என்று ஹோண்டா தெரிவிக்கிறது. கியர் ரேஷியோ சரியான விகிதத்தில் கொடுக்கப்பட்டு இருப்பதால், சீரான பவர் டெலிவிரியையும், ஸ்மூத்தான கியர் மாற்றத்தையும் வழங்கும் என்று தெரிவித்துள்ளது.

புதிய ஹோண்டா சிவிக் காரில் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்?

புதிய தலைமுறை ஹோண்டா சிவிக் காரில் எல்இடி ஹெட்லைடடுகள், எல்இடி டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. புதிய அலாய் வீல்கள் வசீகரத்தை கூட்டுகின்றன. வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி அசிஸ்ட், டிராக்ஷன் கன்ட்ரோல், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், இபிடி மற்றும் ஏர்பேக்குகள் என ஏராளமான பாதுகாப்பு வசதிகளை பெற்றிருக்கிறது.

புதிய ஹோண்டா சிவிக் காரில் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்?

ரூ.15 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் விற்பனைக்கு வரும்போது ஸ்கோடா ஆக்டேவியா, ஹூண்டாய் எலான்ட்ரா மற்றும் டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் ஆகிய கார் மாடல்களுடன் போட்டி போடும்.

புதிய ஹோண்டா சிவிக் காரில் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்?

ஐரோப்பாவில் விற்பனை செய்யப்படும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் துருக்கியில் உள்ள ஹோண்டா ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு ஐரோப்பாவில் விற்பனை செய்யப்படுகிறது.

Most Read Articles
English summary
Honda showcased the tenth-generation Civic at Auto Expo 2018. For the first time, the Japanese carmaker is offering an automatic gearbox option in the Civic's diesel variant. The interesting bit is that the car will be getting a new 9-speed automatic transmission.
Story first published: Friday, July 27, 2018, 11:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X