2018 ஹோண்டா ஜாஸ் காரின் வேரியண்ட் விபரங்கள் கசிந்தன!

வடிவமைப்பில் மாறுதல்கள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட இந்த புதிய ஹோண்டா ஜாஸ் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. டீலர்களுக்கு இந்த புதிய மாடல் வந்து கொண்டிருக்கிறது. இ

By Saravana Rajan

2018 ஹோண்டா ஜாஸ் காரின் வேரியண்ட் விபரங்கள் கசிந்துள்ளன. அந்த விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

2018 ஹோண்டா ஜாஸ் காரின் வேரியண்ட் விபரங்கள் கசிந்தன!

சந்தைப் போட்டியை எதிர்கொள்ளும் விதத்தில் ஹோண்டா ஜாஸ் கார் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. வடிவமைப்பில் மாறுதல்கள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட இந்த புதிய ஹோண்டா ஜாஸ் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

2018 ஹோண்டா ஜாஸ் காரின் வேரியண்ட் விபரங்கள் கசிந்தன!

புதிய முகப்பு க்ரில், பம்பர் மற்றும் டெயில் லைட்டுகளுடன் புதிய ஹோண்டாஜாஸ் கார் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய 16 அங்குல அலாய் சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், இந்த புதிய காரின் வேரியண்ட்டில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள் விபரங்கள் ஆட்டோமொபைல் தளங்களில் கசிந்துள்ளன.

2018 ஹோண்டா ஜாஸ் காரின் வேரியண்ட் விபரங்கள் கசிந்தன!

புதிய ஹோண்டா ஜாஸ் கார் S, V மற்றும் VX ஆகிய வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. எனினும், பெட்ரோல் மாடலானது வி மற்றும் விஎக்ஸ் ஆகிய 2 வேரியண்ட்டுகளில் மட்டுமே கிடைக்கும்.

2018 ஹோண்டா ஜாஸ் காரின் வேரியண்ட் விபரங்கள் கசிந்தன!

அதேநேரத்தில், டீசல் எஞ்சின் மாடலானது எஸ் என்ற பேஸ் வேரியண்ட் உள்பட வி மற்றும் விஎக்ஸ் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கும். எஸ் வேரியண்ட்டில் முன்புற ஆர்ம் ரெஸ்ட், ஸ்பீடு சென்சிங் டோர் லாக் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள், வேனிட்டி ரியர் வியூ மிரர்கள் இடம்பெற்றுள்ளன.

2018 ஹோண்டா ஜாஸ் காரின் வேரியண்ட் விபரங்கள் கசிந்தன!

புதிய ஹோண்டா ஜாஸ் காரில் பாடி கலர் கைப்பிடிகள், ரியர் வியூ மிரர்கள், ரியர் டீஃபாகர், எல்இடி டெயில் லைட்டுகள், பவர் விண்டோஸ், கீ லெஸ் என்ட்ரி, சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் இடம்பெற்றுள்ளன.

2018 ஹோண்டா ஜாஸ் காரின் வேரியண்ட் விபரங்கள் கசிந்தன!

வி என்ற நடுத்தர விலை வேரியண்ட்டானது பெட்ரோல், டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும். வி வேரியண்ட்டின் பெட்ரோல் மாடலில் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும். இந்த வேரியண்ட்டில் புஷ் பட்டன் ஸ்டார்ட், ஸ்மார்ட் டரங்க் லாக் ஒபன், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. சிவிடி மாடலில் பேடில் ஷிஃப்ட் வசதியும் உண்டு.

2018 ஹோண்டா ஜாஸ் காரின் வேரியண்ட் விபரங்கள் கசிந்தன!

வி வேரியண்ட்டில் கூடுதலாக எலக்ட்ரிக் ஃபோல்டிங் ரியர் வியூ மிரர்கள், 5 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மல்டி வியூ ரியர் பார்க்கிங் கேமரா, பனி விளக்குகள், ரியர் வைப்பர்கள் மற்றும் பீஜ் ஃபேப்ரிக் சீட் அப்ஹோல்ஸ்ட்ரி ஆகிய கூடுதல் அம்சங்களும் உள்ளன.

2018 ஹோண்டா ஜாஸ் காரின் வேரியண்ட் விபரங்கள் கசிந்தன!

விஎக்ஸ் என்ற டாப் வேரியண்ட்டில் 6.9 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி, ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகிய வசதிகளும் உள்ளன. வாய்ஸ் கமாண்ட் வசதி, எல்இடி டெயில் லைட்டுகள், லெதர் உறையுடன் ஸ்டீயரிங் வீல் போன்றவை இதர கூடுதல் அம்சங்களாக இருக்கின்றன.

2018 ஹோண்டா ஜாஸ் காரின் வேரியண்ட் விபரங்கள் கசிந்தன!

வழங்கும். 1.5 லிட்டர் டீசல் எஞ்சினானது அதிகபட்சமாக 98 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கிறது.

2018 ஹோண்டா ஜாஸ் காரின் வேரியண்ட் விபரங்கள் கசிந்தன!

ஹோண்டா ஜாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட இருக்கிறது. சிவிடி கியர்பாக்ஸ் பெட்ரோல் மாடலில் மட்டுமே கிடைக்கும்.

2018 ஹோண்டா ஜாஸ் காரின் வேரியண்ட் விபரங்கள் கசிந்தன!

புதிய ஹோண்டா ஜாஸ் கார் ரேடியண்ட் ரெட், லூனார் சில்வர், ஆர்சர்டு ஒயிட், கோல்டன் பிரவுன் மற்றும் மாடர்ன் ஸ்டீல் ஆகிய 5 விதமான வண்ணங்களில் கிடைக்கும்.

2018 ஹோண்டா ஜாஸ் காரின் வேரியண்ட் விபரங்கள் கசிந்தன!

இந்த மாதத்திலேயே புதிய ஹோண்டா ஜாஸ் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில டீலர்களிலும் டெமோ கார்கள் வந்துவிட்டன. இந்த புதிய ஜாஸ் கார் ஹூண்டாய் எலைட் ஐ20, மாருதி பலேனோ கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 11, 2018, 15:23 [IST]
English summary
The new Honda Jazz facelift variants and features have been leaked ahead of its scheduled launch in India. Honda is expected to launch the facelift version of the Jazz hatchback on 19th July 2018.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+