புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் முக்கிய விபரங்கள் வெளியானது!

புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட ஹூண்டாய் க்ரெட்டா காரின் புரோஷர் இணையதளங்களில் வெளியாகி இருக்கிறது. மொத்தம் 6 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வருகிறது. புதிதாக கையில் கட்டிக் கொள்வதற்கான சாவி கொடுக்கப்பட

By Saravana Rajan

புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட ஹூண்டாய் க்ரெட்டா காரின் புரோஷர் இணையதளங்களில் வெளியாகி இருக்கிறது. இதன்மூலமாக, ஹூண்டாய் க்ரெட்டா காரில் இடம்பெற இருக்கும் அனைத்து முக்கிய அம்சங்கள் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் முக்கிய விபரங்கள் வெளியானது!

வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்ட புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் விரைவில் வர இருக்கிறது. இந்த காரின் அறிமுக தேதி குறித்த தகவலை வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில், இந்த காரின் முக்கிய அம்சங்கள் குறித்த விபரக் குறிப்பேடு இணையதளம் ஒன்றின் மூலமாக கசிந்துள்ளது.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் முக்கிய விபரங்கள் வெளியானது!

புதிய ஹூண்டாய் காரின் மிக முக்கிய அம்சமாக கைக்கடிகாரம் போல கட்டிக் கொள்ளும் ஸ்மார்ட் சாவி வளையம் கொடுக்கப்பட இருக்கிறது. கீ பேண்ட் என்று குறிப்பிடப்படும் இந்த ஸ்மார்ட் சாவியின் மூலமாக காரின் கதவுகளை திறப்பதற்கும், எஞ்சினை புஷ் பட்டன் மூலமாக ஸ்டார்ட் செய்வதற்கும் உதவும்.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் முக்கிய விபரங்கள் வெளியானது!

இதுதவிர, மாடிப்படிகளில் ஏறுவது, எவ்வளவு நடந்துள்ளோம், எத்தனை கலோரி செலவாகியிருக்கும் என்பது போன்ற உரிமையாளரின் உடல்நலக் குறிப்பை வழங்கும் வசதியையும் இந்த ஸ்மார்ட் சாவி வழங்கும்.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் முக்கிய விபரங்கள் வெளியானது!

கீ பேண்டுடன் ஸ்மார்ட்போனை புளுடூத் மூலமாக இணைத்துக் கொண்டால், அழைப்பு வருவது மற்றும் குறுந்தகவல்கள் வருவது குறித்தும் எச்சரிக்கை செய்யும். இது நிச்சயம் புதிய ஹூண்டாய் க்ரெட்டா வாடிக்கையாளர்களுக்கு மிக மிக பயனுள்ள கருவியாக இருக்கும்.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் முக்கிய விபரங்கள் வெளியானது!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரில் புதிய க்ரில் அமைப்பு, பை- புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய ரூஃப் ரெயில்கள், இரட்டை வண்ண தேர்வு மற்றும் ரியர் வியூ மிரர்களில் எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் முக்கிய விபரங்கள் வெளியானது!

புதிய க்ரெட்டா காரின் உட்புறத்தில் புதிய அப்ஹோல்ஸ்ட்டரி பயன்படுத்தப்பட்டு புதுப்பொலிவு பெற்றிருக்கிறது. எலக்ட்ரிக் சன்ரூஃப், வயர்லெஸ் மொபைல்போன் சார்ஜர், ஓட்டுனர் இருக்கையை 6 நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், கருப்பு வண்ண இன்டீரியர் அமைப்பு, புஷ் பட்டன் ஸ்டார்ட் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் முக்கிய விபரங்கள் வெளியானது!

புதிய ஹூண்டடாய் க்ரெட்டா காரில் ஆட்டோ லிங்க் என்ற தொழில்நுட்ப வசதி இடம்பெற இருக்கிறது. இந்த அப்ளிகேஷன் மூலமாக காரின் இயக்கம், ஓட்டுதல் முறை மற்றும் சர்வீஸ் செய்வதற்கான முன்பதிவு உள்ளிட்டவற்றை செய்ய முடியும். சாலை அவசர உதவியையும் இந்த அப்ளிகேஷன் மூலமாக பெற முடியும்.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் முக்கிய விபரங்கள் வெளியானது!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் வசதிகளை பொறுத்து E, E+, S, SX, SX Dual Tone மற்றும் SX(O)ஆகிய வேரியண்ட்டுகளில் வர இருக்கிறது. புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரில் பேஷன் ஆரஞ்ச், மரினா புளூ மற்றும் பேஷன் ஆரஞ்ச் மற்றும் ஃபேன்டம் பிளாக் என்ற இரட்டை வண்ணக் கலவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் முக்கிய விபரங்கள் வெளியானது!

மேற்கண்ட புதிய வண்ணங்கள் தவிர்த்து, பியர்ல் ஒயிட், ஸ்லீக் சில்வர், ஸ்டார்டஸ்ட், ஃபியரி ரெட், ஃபேன்டம் பிளாக் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும். தவிரவும், பியர்ல் ஒயிட்- ஃபேன்டம் பிளாக் கொண்ட இரட்டை வண்ணக் கலவையிலும் கிடைக்கும்.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் முக்கிய விபரங்கள் வெளியானது!

பழைய மாடலில் இருக்கும் அதே எஞ்சின் ஆப்ஷன்கள்தான் புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரில் தக்க வைக்கப்பட்டுள்ளது. 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 121 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 126 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 88 பிஎச்பி பவரையும், 220 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் முக்கிய விபரங்கள் வெளியானது!

1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும். 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும்.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் முக்கிய விபரங்கள் வெளியானது!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரையிலான கூடுதல் விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த புதிய மாடலுக்கு வழக்கம்போல் பிரம்மாண்ட வரவேற்பு தொடரும் என்று நம்பலாம்.

Source: TeamCarDelight

Article Published On: Saturday, May 19, 2018, 14:59 [IST]
English summary
The brochure for the new Hyundai Creta 2018 facelift has been leaked ahead of its launch. TeamCarDelight has got hold of the brochure, which showcases all the details of the new 2018 facelift Creta offering from Hyundai.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+