மின்சார வாகன விற்பனையில் கால்பதிக்கும் ஹூண்டாய்; கோனா எலெக்ட்ரிக் கார் அறிமுக டீசரை வெளியிட்டது..!!

மின்சார வாகன விற்பனையில் கால்பதிக்கும் ஹூண்டாய்; கோனா எலெக்ட்ரிக் கார் அறிமுக டீசரை வெளியிட்டது..!!

By Azhagar

மத்தியரசு மின்சார வாகன கட்டுமானத்திற்கான பணிகளை இதுவரை தொடங்கவில்லை என்றாலும், வாகன தயாரிப்பு நிறுவனங்கள் சும்மா இல்லை.

கோனா மின்சார கார் டீசரை வெளியிட்ட ஹூண்டாய்..!!

மாருதி சுஸுகி, ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்டா ஆகிய நிறுவனங்கள் மின்சார வாகன உற்பத்தியில் ஏற்கனவே கால்பதித்து விட்டன.

இந்நிலையில் இந்த வரிசையில் புதியதாக இணைந்துள்ளது ஹூண்டாய். அது தயாரிக்கும் மின்சார வாகனம் தான் கோனா எலெக்ட்ரிக் கார்.

கோனா மின்சார கார் டீசரை வெளியிட்ட ஹூண்டாய்..!!

ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் மின்சார வாகனமாக தயாராகியுள்ள கோனா எஸ்யூவி-யின் முதல் பார்வை டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

வரும் 27ம் தேதி உலக பார்வைக்கு அறிமுகமாகும் ஹூண்டாய் கோனா மின்சார கார் 470 மற்றும் 500 கி.மீ என இருவித திறன்களில் வெளிவருகிறது.

கோனா மின்சார கார் டீசரை வெளியிட்ட ஹூண்டாய்..!!

ஜெனீவா மோட்டார் கண்காட்சியில் இதற்கான அறிமுக விழா நடத்தப்படும் என்றும், கோனா காரின் விவரங்கள் இம்மாதம் இறுதிக்குள் தெரிவிக்கப்படும் என ஹூண்டாய் தகவல் கூறியுள்ளது.

கோனா மின்சார கார் டீசரை வெளியிட்ட ஹூண்டாய்..!!

உலகளவில் பல நாடுகள் தங்களது வாகன பயன்பாட்டை மின்சார ஆற்றலுக்கு மாற்ற தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதில் ஹூண்டாய் கோனா கார் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video

Under-Aged Rider Begs The Policewomen To Spare Him - DriveSpark
கோனா மின்சார கார் டீசரை வெளியிட்ட ஹூண்டாய்..!!

இந்தியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த 2018 ஆட்டோ எக்ஸ்போவில் ஹூண்டாய் நிறுவனம் ஐயோனிக் என்ற மின்சார கார் மாடலை அறிமுகம் செய்தது.

எக்ஸ்போவில் பலரது கவனத்தை ஈர்த்த இந்த கார் பல்வேறு கனெக்ட்டிவிட்டி மற்றும் பாதுகாப்பு டிரைவிங் அம்சங்களை பெற்றிருக்கும் என தெரிகிறது.

கோனா மின்சார கார் டீசரை வெளியிட்ட ஹூண்டாய்..!!

ஐயோனிக் மின்சார கார் தயாரிப்பில் ஹூண்டாய் எல்.ஜி உடன் இணைந்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளன. இந்த காரின் பேட்டரி 40 கிலோ வாட் மற்றும் 60 கிலோ வாட் பேட்டரி பேக்-அப்புகளை பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோனா மின்சார கார் டீசரை வெளியிட்ட ஹூண்டாய்..!!

தற்போது ஹூண்டாயின் கோனா எஸ்யூவி கார் எஞ்சின் தேர்வுகளிலும் தயாராகியுள்ளது. இது விரைவில் அமெரிக்காவில் விற்பனைக்கு வருகிறது.

பெட்ரோல், டீசல் என இருவேறு எஞ்சின்களை பெற்றுள்ள இந்த கார் முன்பக்க வீல் டிரைவ் மற்றும் பின் பக்க வீல் டிரைவ் என இரண்டு தேர்வுகளிலும் கிடைக்கும்.

கோனா மின்சார கார் டீசரை வெளியிட்ட ஹூண்டாய்..!!

ஹூண்டாய் கோனா பெட்ரோல் கார், 2 லிட்டர் திறனுடன் 147 பிஎச்பி பவர் மற்றும் 179 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

மேலும் இதனுடைய 1.6 லிட்டர் டர்போசார்ஜிடு டீசல் வேரியன்ட் 175 பிஎச்பி பவர் மற்றும் 265 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

கோனா மின்சார கார் டீசரை வெளியிட்ட ஹூண்டாய்..!!

பெட்ரோல் மாடல் கோனா கார் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுடனும், டீசல் மாடல் கோனா கார் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடனும் தயாராகியுள்ளது.

கோனா மின்சார கார் டீசரை வெளியிட்ட ஹூண்டாய்..!!

இதுதவிர 1 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் தேர்விலும் கோனா எஸ்யூவி காரை வெளியிடுகிறது ஹூண்டாய். இது 118 பிஎச்பி பவர் மற்றும் 172 டார்க் திறனை வெளிப்படுத்தும். இதில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு உள்ளது.

கோனா மின்சார கார் டீசரை வெளியிட்ட ஹூண்டாய்..!!

இந்தியாவில் எஞ்சின் திறன் பெற்ற கோனா எஸ்யூவி கார் விற்பனைக்கு வருமா என்பது குறித்து ஹூண்டாய் தகவல் தெரிவிக்கவில்லை. எனினும் கோனா மின்சார மாடல் கார் நம் நாட்டில் விற்பனைக்கு வருவது உறுதி என்பது பலரது கருத்தாக உள்ளது.

கோனா மின்சார கார் டீசரை வெளியிட்ட ஹூண்டாய்..!!

ஹூண்டாய் கோனா மின்சார கார் அறிமுகமானால் அது கேம் சேஜிங் தயாரிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அதை இந்தியாவில் ஹூண்டாய் அறிமுகம் செய்திட அதிக வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது.

கோனா மின்சார கார் டீசரை வெளியிட்ட ஹூண்டாய்..!!

மின்சார வாகன விற்பனையில் கால்பதிக்கும் ஹூண்டாய், முதல் தயாரிப்பாக எஸ்யூவி காரை வெளியிடவுள்ளது பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

கோனா மின்சார கார் டீசரை வெளியிட்ட ஹூண்டாய்..!!

அதே நேரத்தில் இந்திய அரசு மின்சார வாகன பயன்பாட்டிற்கான கட்டமைப்புகளை நம் நாட்டில் தொடங்கினால் மட்டுமே ஹூண்டாய் போன்ற நிறுவனங்கள் அதில் கால்பதிக்கும் என வாகன ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

கோனா மின்சார கார் டீசரை வெளியிட்ட ஹூண்டாய்..!!

மின்சார வாகன தேர்வோடு வரும் ஹூண்டாய் கோனோ திறன் மற்றும் கட்டமைப்புகளில் டெஸ்லா நிறுவனத்தின் மாடல் எஸ் மற்றும் மாடல் எக்ஸ் கார்களுக்கு போட்டியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

கோனா மின்சார கார் டீசரை வெளியிட்ட ஹூண்டாய்..!!

டெஸ்லா நிறுவனத்தின் சந்தையை கைப்பற்ற ஹூண்டாய் இவ்வாறு யோசித்தால், டெல்ஸா மற்றும் ஹூண்டாய்யை அலேக்காக சாப்பிட நிஸான் 2018 லீஃப் என்ற காரை அறிமுகம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Read in Tamil: New Hyundai Kona Electric Vehicle Teased Ahead Of Debut; Expected Launch Date, Specs & Features
Story first published: Friday, February 16, 2018, 13:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X