2018 ஹூண்டாய் சான்ட்ரோ காரின் அதிகாரப்பூர்வ வரைபடம் வெளியீடு!!
விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் வடிவமைப்பை பிரதிபலிக்கும் உருவரை படம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. பழைய சான்ட்ரோ மாடலிலிருந்து முற்றிலும் வேறுபட்ட வடிவம
விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் வடிவமைப்பை பிரதிபலிக்கும் உருவரை படம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

நடப்பு பண்டிகை காலத்தில் பட்ஜெட் கார் வாங்க திட்டமிட்டிருப்போர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் மாடல் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ. இந்த கார் ஏஎச்-2 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த கார் அறிமுகத்தை நெருங்குவதை குறிக்கும் விதத்தில், இந்த காரின் வடிவமைப்பு எப்படி இருக்கும் என்பதை பிரதிபலிக்கும் விதத்திலான உருவரை படம் வெளியிடப்பட்டு இருக்கிறது.

சான்ட்ரோ பெயர் பயன்படுத்தப்பட இருப்பதாக சொல்லப்பட்டாலும், பழைய மாடலுக்கும் இந்த புதிய மாடலுக்கும் வடிவமைப்பில் துளியும் சம்பந்தம் இருக்காது. இந்தியர்களுக்கு மிக பரிட்சயமான, நம்பகமான பெயர் என்பதால், அந்த பெயர் பயன்படுத்தப்படுவதற்கு ஹூண்டாய் மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.

அண்மையில் வெளிவந்த தகவல்களின்படி, ஹூண்டாய் இயான் காருக்கு மாற்றாக புதிய சான்ட்ரோ கார் நிலைநிறுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இதுகுறித்து ஹூண்டாய் நிறுவனத்திடமிருந்து உறுதியான தகவல் இல்லை.

நவீன வடிவமைப்பு தாத்பரியங்களுடன் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் வர இருப்பது இந்த உருவரை படம் மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது. அதேநேரத்தில், டால்பாய் கான்செப்ட்டில்தான் இந்த கார் வர இருக்கிறது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரில் கவர்ச்சிகரமான முகப்பு அமைப்பு, பகல்நேர ரன்னிங் விளக்குகள் என அசத்தல் அம்சங்கள் இடம்பெற்றஇருக்கும். பழைய மாடலைவிட அதிக பிரிமியம் அம்சங்களுடன் வருகிறது.

உட்புறத்தில் கருப்பு- பீஜ் வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டு இருக்கும். இரட்டை டயல்களுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவையும் இடம்பெற்றிருக்கும் என்பது கணிப்பு.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த கார் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமின்றி, ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் பண்டிகை காலத்தில் ரூ.3 லட்சம் பட்ஜெட்டில் இந்த கார் எதிர்பார்க்கப்படுகிறது. டாடா டியாகோ, ரெனோ க்விட் மற்றும் மாருதி ஆல்ட்டோ கே10 கார்களுக்கு போட்டியாக இருக்கும். ஹூண்டாய் பிராண்டு மாடல் என்பது கூடுதல் வலு சேர்க்கும்.


Click it and Unblock the Notifications








