புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் ப்ளஸ், மைனஸ் என்னென்ன?

மிக நெருக்கமான போட்டியாளராக கருதப்படும் டாடா டியாகோ காரைவிட விலை சற்று அதிகமான மாடலாக வந்துள்ளது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார். அனைத்து விதத்திலும், டாடா டியாகோ கார் சிறந்த தேர்வுதான்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் எதிர்பார்த்தபடியே, முன்பதிவில் கலக்கி வருகிறது. நேற்றைய நிலவரப்படி, 25,000 பேர் இந்த புதிய பட்ஜெட் காருக்கு முன்பதிவு செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இந்த காரின் நிறை, குறை அம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் ப்ளஸ், மைனஸ் என்னென்ன?

டிசைன்

ஹூண்டாய் கார்கள் டிசைனில் கலக்கலாக இருக்கும். ஹூண்டாய் ஐ10 கார் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் டிசைன் குறை சொல்ல முடியாத அளவிற்கு வந்துள்ளது. ஃபிட் அண்ட் ஃபினிஷ் மிகச் சிறப்பாக இருக்கிறது. எனினும், பட்ஜெட் கார் என்பதை மனதில் வைத்து, சில ஆக்சஸெரீகள் தவிர்க்கப்பட்டுள்ளதால் பிரிமீயம் லுக் குறைந்துவிட்டது. குறிப்பாக, டாப் வேரியண்ட்டில் கூட அலாய் வீல்கள் கொடுக்கப்படாதது பெருத்த ஏமாற்றமே.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் ப்ளஸ், மைனஸ் என்னென்ன?

இன்டீரியர்

உட்புறத்தில் மாடர்ன் இன்டீரியர் அம்சங்களுடன் சிறப்பாக இருக்கிறது. இந்த காரில் கருப்பு மற்றும் பீஜ் வண்ணத்திலான இரட்டை வண்ண இன்டீரியர் தீம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. டேஷ்போர்டு வடிவமைப்பு மிகச் சிறப்பானதாகவே கூறலாம். ஏசி வென்ட்டுகள் வித்தியாசமாகவும், நவீனத்துவம் நிறைந்த டிசைனில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த இன்டீரியர் வாடிக்கையாளர்களை கவரும்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் ப்ளஸ், மைனஸ் என்னென்ன?

உட்புற இடவசதி

இது டால்பாய் டிசைன் கான்செப்ட்டில் வடிவமைக்கப்பட்டு இருப்பதால் உட்புறம் சற்று அதிக இடவசதி கொண்ட மாடலாக தெரிகிறது. 6 அடி உயரம் கொண்டவர்கள் கூட, சிறப்பாக அமர்ந்து செல்வதற்கான இடவசதியை வழங்குகிறது. ஓட்டுனர் இருக்கையையும், ஹெட்ரெஸ்ட்டையும் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியாது என்பது மைனஸ்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் ப்ளஸ், மைனஸ் என்னென்ன?

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

ஹூண்டாய் சான்ட்ரோ காரின் டாப் வேரியண்ட்டில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை இது சப்போர்ட் செய்யும். இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஸ்மார்ட்போனை இணைக்கும் மிரர்லிங்க் வசதி, வாய்ஸ் கமாண்ட் வசதியும் உண்டு. இந்த காரின் மதிப்பை கூட்டும் முக்கிய விஷயங்களாக கூறலாம்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் ப்ளஸ், மைனஸ் என்னென்ன?

ரியர் ஏசி வென்ட்

இந்த ரக கார்களில் முதன்முறையாக புதிய சான்ட்ரோ காரில் பின் இருக்கை பயணிகளுக்கான தனி ஏசி வென்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தேர்வை வழங்கும் விஷயமாக இருக்கும்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் ப்ளஸ், மைனஸ் என்னென்ன?

பூட்ரூம்

டாடா டியாகோ காரில் 242 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி இருக்கும் நிலையில், புதிய சான்ட்ரோ காரில் 235 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது. இந்த பூட்ரூம் இடவசதி, இதுபோன்ற சிறிய கார்களில் போதுமானதாகவே கூறமுடியும் இந்த விஷயத்தில் போட்டியாளருடன் பெரிய வித்தியாசம் இல்லை.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் ப்ளஸ், மைனஸ் என்னென்ன?

முக்கிய வசதிகள்

புதிய சான்ட்ரோ காரில் தகவல் பெறும் திரை அமைப்பு கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. எலெக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதியுடன் சைடு மிரர்கள், யுஎஸ்பி போர்ட் வசதி, பவர் விண்டோஸ் இடம்பெற்றுள்ளன. முக்கியமாக ரியர் வைப்பர் மற்றும் டீஃபாகர் இந்த கார்களில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய அம்சமாக சான்ட்ரோவில் உள்ளது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் ப்ளஸ், மைனஸ் என்னென்ன?

பாதுகாப்பு அம்சங்கள்

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரில் ஓட்டுனருக்கான ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன் ஆகிய பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன. ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், வேகத்தை உணர்ந்து கதவுகள் தானாக பூட்டிக் கொள்ளும் வசதிகள் உள்ளன. விலை உயர்ந்த மாடலில், ஆப்ஷனலாக முன் இருக்கை பயணிக்கான ஏர்பேக் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா வழங்கப்படுகிறது. அனைத்து வேரியண்ட்டுகளிலும் டூயல் ஏர்பேக்குகள் இடம்பெற்றிருந்தால் மதிப்புவாய்ந்த மாடலாக இருக்கும்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் ப்ளஸ், மைனஸ் என்னென்ன?

எஞ்சின்

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரில் 4 சிலிண்டர்கள் கொண்ட 1.1 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவரையும், 99 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். சிஎன்ஜி மாடலில் இருக்கும் இதே 1.1 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 58 பிஎச்பி பவரையும், 84 என்எம் அளிக்க வல்லதாக இருக்கும்.

போட்டியாளரான டாடா டியாகோ காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 84 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. இந்த விஷயத்தில் சான்ட்ரோ காருக்கு பின்னடைவான விஷயமாக இருக்கிறது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் ப்ளஸ், மைனஸ் என்னென்ன?

மைலேஜ்

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 20.3 கிமீ மைலேஜையும், சிஎன்ஜி மாடல் கிலோவுக்கு 30.5 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நடைமுறையிலும் புதிய சான்ட்ரோ சிறப்பான மைலேஜை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் ப்ளஸ், மைனஸ் என்னென்ன?

ஏஎம்டி மாடல்

ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வந்திருக்கும் முதல் ஹூண்டாய் கார் என்ற பெருமையை புதிய சான்ட்ரோ கார் பெறுகிறது. ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் மேக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் மட்டுமே கிடைக்கிறது. ஏஎம்டி மாடலின் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்டில் டூயல் ஏர்பேக்குகள் கொடுத்திருந்தால் சிறப்பான தேர்வாக இருந்திருக்கும்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் ப்ளஸ், மைனஸ் என்னென்ன?

பிராண்டு மதிப்பு

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு இந்தியாவில் முகவரி கொடுத்த மாடல் என்பதுடன், பல லட்சக்கணக்கான இந்திய வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற பிராண்டு சான்ட்ரோ. அந்த பிராண்டு பெயரில் வந்திருக்கும் இந்த புதிய காரும் வாடிக்கையாளர் மத்தியில் அமோக ஆதரவை பெற்றிருப்பது முன்பதிவு எண்ணிக்கை மூலமாக புரிந்து கொள்ளலாம்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் ப்ளஸ், மைனஸ் என்னென்ன?

விலை

நேரடி போட்டியாளரான டாடா டியாகோ காரின் பெட்ரோல் மாடல் ரூ.3.34 லட்சம் விலையிலிருந்து கிடைக்கிறது. ஆனால், சான்ட்ரோ காரின் பேஸ் மாடல் ரூ.3.89 லட்சம் முதல் கிடைக்கிறது. ஆரம்ப வேரியண்ட்டில் விலை வித்தியாசம் அதிகம் இருந்தாலும், பெரும்பாலானோர் தேர்வு செய்யும் நடுத்தர மற்றும் உயர்ரக வேரியண்ட்டுகளின் விலை வித்தியாசம் சற்று குறைகிறது. சான்ட்ரோ காரின் டாப் வேரியண்ட்டின் ஆன்ரோடு விலை ரூ.6 லட்சத்திற்குள் இருந்திருந்தால் மிக மிகச் சிறந்த தேர்வாக இருந்திருக்கும் என்பது வாடிக்கையாளர்கள் கருத்தாக உள்ளது.

Variants Price
D-Lite Rs 3,89,900
Era Rs 4,24,900
Magna Rs 4,57,900
Magna AMT Rs 5,18,900
Sportz Rs 4,99,900
Sportz AMT Rs 5,64,900
Asta Rs 5,45,900
Magna CNG Rs 5,23,900
Sportz CNG Rs 5,64,900
புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் ப்ளஸ், மைனஸ் என்னென்ன?

நிறைவான மாடலா?

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு டாடா டியாகோ கார் மற்றும் மாருதி செலிரியோ கார்கள் நேரடி போட்டியாக கருதப்படுகிறது. ஆனால், டிசைன், வசதிகள், மைலேஜ், விலை என இந்திய பட்ஜெட் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களையும் எளிதாக நிறைவு செய்கிறது புதிய சான்ட்ரோ கார்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் ப்ளஸ், மைனஸ் என்னென்ன?

குழப்பத்திற்கான தீர்வு

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு மிக நெருக்கமான போட்டியாளராக கருதப்படும் டாடா டியாகோ காரைவிட விலை சற்று அதிகமான மாடலாக வந்துள்ளது. அனைத்து விதத்திலும், டாடா டியாகோ கார் சிறந்த தேர்வுதான். ஆனால், சான்ட்ரோ காரின் பிராண்டு மதிப்புடன் ஒப்பிடும்போது டியாகோ கார் நிச்சயம் பின்தங்கும். எதிர்காலத்தில் விற்பனைக்கு பிந்தைய சேவை மற்றும் மறுவிற்பனை மதிப்பில் டாடா டியாகோ காரைவிட புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் நிச்சயம் கூடுதல் மதிப்பை பெறும் என்று கூறலாம்.

Most Read Articles
English summary
Let's find out in this first look review of the All new Hyundai Santro car.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X