புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு புக்கிங் குவிகிறது!

அண்மையில் இந்த புதிய சான்ட்ரோ காருக்கு முன்பதிவு துவங்கப்பட்டது. ரூ.11,100 முன்பணத்துடன் ஆன்லைன் மூலமாக முன்பதிவு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னரே, புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு முன்பதிவு குவிந்து வருகிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு புக்கிங் குவிகிறது!

இந்திய கார் சந்தையில் பெரும் வெற்றியை ருசித்த ஹூண்டாய் சான்ட்ரோ காரின் புதிய தலைமுறை மாடல் நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. பழைய மாடலிலிருந்து முற்றிலும் புதிய மாடலாக வடிவமைக்கப்பட்டு இருப்பதுடன், ஏராளமான தொழில்நுட்ப அம்சங்களுடன் வர இருக்கிறது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு புக்கிங் குவிகிறது!

இந்த நிலையில், அண்மையில் இந்த புதிய சான்ட்ரோ காருக்கு முன்பதிவு துவங்கப்பட்டது. ரூ.11,100 முன்பணத்துடன் ஆன்லைன் மூலமாக முன்பதிவு ஏற்றுக் கொள்ளப்பட்டது. முன்பதிவு துவங்கிய முதல் 9 நாட்களில் 14,208 பேர் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு முன்பதிவு செய்துள்ளதாக கார் அண்ட் பைக் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு புக்கிங் குவிகிறது!

குறிப்பாக, அனைத்து வசதிகளும் கொண்ட அஸ்ட்டா என்ற விலை உயர்ந்த வேரியண்ட்டுக்குத்தான் அதிக முன்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அத்துடன், ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலின் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்டிற்கும் அதிக அளவில் முன்பதிவு செய்யப்பட்டு வருவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு புக்கிங் குவிகிறது!

மற்றொரு முக்கிய விஷயம், புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு தமிழகம், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய தென் மாநிலங்களிலிருந்துதான் அதிக அளவில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாம். முன்பதிவு துவங்கிய கடந்த 10ந் தேதி முதல் அக்டோபர் 17 வரையிலான முன்பதிவு நிலவரமாக இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு புக்கிங் குவிகிறது!

இதில், மற்றொரு விஷயம், ஆன்லைன் மூலமாகவே முன்பதிவு பெறப்பட்டு வருகிறது. டீலர்களில் நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதற்கு பின்னரே முன்பதிவு துவங்கும் என தெரிகிறது. எனினும், சில டீலர்களில் ரகசியமாக நேரடி முன்பதிவு பெற்றிருக்க அதிக வாய்ப்பு இருப்பதால், முன்பதிவு இன்னும் கணிசமான எண்ணிக்கையில் இருக்க வாய்ப்புள்ளது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு புக்கிங் குவிகிறது!

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு இந்தளவுக்கு முன்பதிவு இருப்பதற்கு முக்கிய காரணம், பட்ஜெட் கார் மார்க்கெட்டில் சிறந்த டிசைனில் வரும் மாடல் என்பது முக்கிய காரணமாக இருக்கிறது. டால் பாய் டிசைன் கான்செப்ட்டில் வடிவமைக்கப்பட்டு இருப்பதால், அதிக ஹெட்ரூம் இடவசதியையும் பெற்றிருக்கும்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு புக்கிங் குவிகிறது!

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரில் கருப்பு மற்றும் பீஜ் வண்ணத்திலான இரட்டை வண்ண இன்டீரியர் தீம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரின் டாப் வேரியண்ட்டில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றம் ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு புக்கிங் குவிகிறது!

பின் இருக்கை பயணிகளுக்கு தனி ஏசி வென்ட்டுகள், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட வசதியுடன் சைடு மிரர்கள், ரியர் வைப்பர் ஆகியவையும் முக்கிய வசதிகளாக இருக்கும்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு புக்கிங் குவிகிறது!

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரில் ஓட்டுனருக்கான ஏர்பேக், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை முக்கிய பாதுகாப்பு வசதிகளாக இருக்கும். ரிவர்ஸ் கேமரா மற்றும் முன் இருக்கை பயணிக்கான ஏர்பேக் ஆப்ஷனலாக கொடுக்கப்படும்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு புக்கிங் குவிகிறது!

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் ரூ.3.8 லட்சம் விலையில் வர இருப்பதா செய்திகள் கசிந்துள்ளன. இந்த சூழலில், நாளை முறைப்படி புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் மார்க்கெட்டிற்கு வர இருக்கிறது. மாருதி செலிரியோ, ரெனோ க்விட் கார் மற்றும் டாடா டியாகோ கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

Article Published On: Monday, October 22, 2018, 12:09 [IST]
English summary
Hyundai will launch the all-new Santro in the Indian market on October 23. 2018 and online bookings are already open. Now, CarandBike reports that the new Hyundai Santro has received over 14,000 bookings ahead of its launch. The booking numbers clearly reflect the popularity of the new Hyundai Santro 2018.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+