புது சான்ட்ரோ காரை இப்போ புக் பண்ணா புது வருஷலதான் டெலிவிரி?

முற்றிலும் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் கடந்த மாதம் 23ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. விற்பனைக்கு வருவதற்கு முன்னரே, கடந்த மாதம் 10ந் தேதியே முன்பதிவு துவங்கப்பட்டது.

அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் எதிர்பார்த்தது போலவே, வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், காத்திருப்பு காலமும் எகிறியுள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

புது சான்ட்ரோ காரை இப்போ புக் பண்ணா புது வருஷலதான் டெலிவிரி?

முற்றிலும் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் கடந்த மாதம் 23ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. விற்பனைக்கு வருவதற்கு முன்னரே, கடந்த மாதம் 10ந் தேதியே முன்பதிவு துவங்கப்பட்டது. இந்த சூழலில், முன்பதிவு துவங்கப்பட்டது முதல் கடந்த 22 நாட்களில் இதுவரை 28,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

புது சான்ட்ரோ காரை இப்போ புக் பண்ணா புது வருஷலதான் டெலிவிரி?

இந்த புதிய கார் குறித்து வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் ஷோரூம்களில் விசாரணையும் செய்து வருகின்றனர். இதுவரை 1,25,000 பேர் இந்த கார் குறித்து விபரங்களை கேட்டு சென்றுள்ளதாக ஹூண்டாய் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புது சான்ட்ரோ காரை இப்போ புக் பண்ணா புது வருஷலதான் டெலிவிரி?

இதனால், இந்த முன்பதிவு எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, சில வேரியண்ட்டுகளுக்கு அதிகபட்சமாக 3 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் நிலவுகிறது.

புது சான்ட்ரோ காரை இப்போ புக் பண்ணா புது வருஷலதான் டெலிவிரி?

இதனால், புத்தாண்டில் கார் வாங்க விரும்புவோர் இப்போதே முன்பதிவு செய்து கொள்வது நல்லதாக இருக்கும். இப்போது முன்பதிவு செய்தால்தான் ஜனவரி அல்லது பிப்ரவரி துவக்கத்தில் டெலிவிரி பெற முடியும். ஆனால், குறிப்பிட்ட வேரியண்ட்டுகளுக்கு மட்டுமே இது பொருந்தும்.

புது சான்ட்ரோ காரை இப்போ புக் பண்ணா புது வருஷலதான் டெலிவிரி?

ஹூண்டாய் கார்களுக்குரிய முத்தாய்ப்பான டிசைன் தாத்பரியங்களுடன் வந்த ஹூண்டாய் கார் இதன் ரகத்தில் சற்று பெரிய கார் போன்ற தோற்றத்தை பெற்றிருக்கிறது. பழைய சான்ட்ரோ கார் போலவே, டால் பாய் டிசைன் கான்செப்ட்டிப்ல வடிவமைக்கப்பட்டு இருப்பதால், உட்புற இடவசதியும் சிறப்பாக இருக்கிறது.

புது சான்ட்ரோ காரை இப்போ புக் பண்ணா புது வருஷலதான் டெலிவிரி?

உட்புறத்தில் மிக தரமான பாகங்களுடன் கூடிய இன்டீரியர் வாடிக்கையாளர்களை கவரும் விஷயமாக இருந்து வருகிறது. அத்துடன், 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், பின் இருக்கை பயணிகளுக்காக ரியர் ஏசி வென்ட்டுகள் போன்றவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

புது சான்ட்ரோ காரை இப்போ புக் பண்ணா புது வருஷலதான் டெலிவிரி?

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரில் 1.1 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவரையும், 99 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கிறது. இந்த எஞ்சின் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமின்றி, ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கிறது.

புது சான்ட்ரோ காரை இப்போ புக் பண்ணா புது வருஷலதான் டெலிவிரி?

ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் ஏஎம்டி மாடல் என்பதுடன், இந்த ஏஎம்டி கியர்பாக்ஸ் மிக மென்மையான அனுபவத்தை தருவது வாடிக்கையாளர்களை கவரும் விஷயமாக இருக்கிறது. இந்த கார் சிஎன்ஜி எரிபொருள் ஆப்ஷனிலும் கிடைக்கிறது.

புது சான்ட்ரோ காரை இப்போ புக் பண்ணா புது வருஷலதான் டெலிவிரி?

பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 20.3 கிமீ மைலேஜை தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படும் நிலையில், நடைமுறையில் சராசரியாக லிட்டருக்கு 17 கிமீ வரை மைலேஜ் தரும். இந்த காரின் சிஎன்ஜி மாடல் கிலோவுக்கு 30.5 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

புது சான்ட்ரோ காரை இப்போ புக் பண்ணா புது வருஷலதான் டெலிவிரி?

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் ரூ.3.89 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து கிடைக்கிறது. இந்த ரகத்தில் போட்டியாளர்களைவிட சிறப்பான தேர்வாக இருக்கிறது. இதனால், முன்பதிவில் அசத்தி வருகிறது. டாடா டியாகோ மற்றும் மாருதி செலிரியோ போன்ற கார்களுக்கு கடும் நெருக்கடியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Hyundai India launched the all-new Santro in the country on October 23, 2018, at a starting price of Rs 3.89 lakh ex-showroom (India). Now, the new Hyundai Santro has received over 28,000 bookings in just 22 days. Hyundai had opened the online bookings for the new Santro from October 10, 2018.
Story first published: Friday, November 2, 2018, 13:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X