புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் படங்கள் வெளியானது!

வரும் 26ந் தேதி விலை அறிவிப்பு வெளியிடப்பட்டு முறைப்படி விற்பனைக்கு களமிறக்கப்பட இருக்கிறது. இந்த சூழலில், டீலரில் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் ஸ்பை படங்கள் வெள

பட்ஜெட் கார் பிரியர்களை ஆவலுடன் காத்திருக்க வைத்திருக்கும் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் படங்கள் வெளியாகி இருக்கின்றன. படங்களையும், கூடுதல் தகவல்களையும் இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் படங்கள் வெளியானது!

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் நாளை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வரும் 26ந் தேதி விலை அறிவிப்பு வெளியிடப்பட்டு முறைப்படி விற்பனைக்கு களமிறக்கப்பட இருக்கிறது. இந்த சூழலில், டீலரில் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் ஸ்பை படங்கள் MYNEWCAR என்ற பேஸ்புக் பக்கத்தில்வெளியாகி இருக்கின்றன.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் படங்கள் வெளியானது!

இந்த படங்களின் மூலமாக வெளிப்புறம் மற்றும் உட்புறம் குறித்த அம்சங்களை உணர்ந்து கொள்ள முடிகிறது. புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் முகப்பு வித்தியாசமாக இருக்கும் வகையில், க்ரில் அமைப்புக்கு இணையாாக இல்லாமல், பானட்டுடன் சேர்ந்தாற்போல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பிரம்மாண்டமான க்ரில் அமைப்பில் ஹெட்லைட்டுகள் பதிலாக பனிவிளக்குகள் சேர்க்கப்பட்டுள்ளது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் படங்கள் வெளியானது!

பின்புறத்தில் கிராண்ட் ஐ10 டிசைன் சற்று எட்டி பார்த்தாலும், டெயில் லைட் க்ளஸ்ட்டர் மூலமாக புதிய சான்ட்ரோ கார் வேறுபடுத்தப்பட்டுள்ளது. பம்பர் அமைப்பு கருப்புத் துணி கொண்டு மூடப்பட்டு இருக்கிறது. ஸ்டாப் லைட்டும் இருப்பதை காண முடிகிறது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் படங்கள் வெளியானது!

பழைய சான்ட்ரோ கார் போலவே, இந்த புதிய மாடலும் 'டால் பாய்' டிசைன் கான்செப்ட்டில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதனால், உட்புறத்தில் ஹெட்ரூம் தலை இடிக்காத அளவுக்கு ஓரளவு சிறப்பாக இருக்கும் என்று நம்பலாம்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் படங்கள் வெளியானது!

புதிய சான்ட்ரோ காரின் இன்டீரியர் பிரிமியமாக தெரிகிறது. டாப் வேரியண்ட்டில் இரட்டை வண்ண இன்டீரியர் கொடுக்கப்பட்டு இருக்கும். இந்த காரில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கும். ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேர்களை இது சப்போர்ட் செய்யும்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் படங்கள் வெளியானது!

புதிய சான்ட்ரோ காரில் முக்கிய அம்சமாக பின் இருக்கை பயணிகளுக்கு தனி ஏசி வென்ட்டுகள் இடம்பெற இருக்கிறது. இந்த காரில் ஓட்டுனர் பக்கத்திற்கான ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், அதிவேக எச்சரிக்கை வசதி, முன்புற இருக்கைகளுக்கான சீட் பெல்ட் எச்சரிக்கை வசதி உள்ளிட்டவை முக்கிய பாதுகாப்பு அம்சங்களாக இருக்கும்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் படங்கள் வெளியானது!

விலை உயர்ந்த டாப் வேரியண்ட்டில் வாடிக்கையாளர்களின் விருப்பத்தின்பேரில் ஓட்டுனர் மற்றும் முன் இருக்கை பயணிக்கான ஏர்பேக்குகள் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமராவை ஆப்ஷனலாக பெறும் வாாய்ப்பும் கொடுக்கப்பட இருக்கிறது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் படங்கள் வெளியானது!

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரில் 1.1 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 68 பிஎச்பி பவரையும், 99 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும். இந்த கார் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் எதிர்பார்க்கப்படுகிறது. ஏஎம்டி கியர்பாக்ஸுடன் வரும் முதல் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் படங்கள் வெளியானது!

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் ரூ.3.5 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. அதிக பிரிமியம் வசதிகள், சிறப்பான டிசைனில் வரும் புதிய சான்ட்ரோ கார் பழைய மாடலை போலவே ஒரு ரவுண்டு வரும் என்று உறுதியாக நம்பப்படுகிறது. டாடா டியாகோ, ரெனோ க்விட், மாருதி வேகன் ஆர் மற்றும் மாருதி செலிரியோ உள்ளிட்ட கார்களின் மார்க்கெட்டை இந்த புதிய மாடல் பதம் பார்க்கும் வாய்ப்புள்ளது.

Article Published On: Monday, October 8, 2018, 10:21 [IST]
English summary
Hyundai is all set to unveil the new Santro in India on October 9, 2018, and it will be followed by the launch on October 26, 2018. Ahead of that the images of the new Hyundai Santro has been leaked on the internet. The leaked images reveal the exterior and interior design of the hatchback.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+