புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் அறிமுக தேதி விபரம் கசிந்தது!!

வரும் செப்டம்பர் மாதம் 23ந் தேதி புதிய தலைமுறை ஹூண்டாய் சான்ட்ரோ கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரில் 1.0 லிட்டர் பெட

By Saravana Rajan

பட்ஜெட் கார் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும், புத்தம் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் அறிமுக தேதி குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் அறிமுக தேதி விபரம் கசிந்தது!!

இந்தியர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ஹூண்டாய் சான்ட்ரோ கார் சில ஆண்டுகளுக்கு முன் விற்பனையில் இருந்து நீக்கப்பட்டது. புதிய கார்களுக்கு வழிவிடும் வகையில், இந்த முடிவை ஹூண்டாய் எடுத்தது. இந்த நிலையில், ஹூண்டாய் விட்டுச் சென்ற இடத்தில் புதிய காரை நிலைநிறுத்த ஹூண்டாய் முடிவு செய்தது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் அறிமுக தேதி விபரம் கசிந்தது!!

மேலும், சான்ட்ரோ பெயரையே அந்த புதிய மாடலுக்கு வைக்கவும் முடிவு செய்திருக்கிறது. இந்த புதிய மாடல் தீவிர சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அடிக்கடி இந்த காரின் ஸ்பை படங்கள் வெளியாகி வருகின்றன.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் அறிமுக தேதி விபரம் கசிந்தது!!

இந்த நிலையில்,புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் வரும் செப்டம்பர் 23ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக யூகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு நாள் குறித்ததற்கு பின்னால் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் அறிமுக தேதி விபரம் கசிந்தது!!

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இதே தேதியில்தான் ஹூண்டாய் சான்ட்ரோ கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், புதிய மாடலையும் அதே தேதியில் அறிமுகம் செய்ய முடிவு செய்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் அறிமுக தேதி விபரம் கசிந்தது!!

சான்ட்ரோ பெயரில் வந்தாலும் புதிய கார் முற்றிலும் வேறுபட்ட டிசைன் தாத்பரியத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பெயர் மட்டுமே பழசாக இருக்கும். வடிவமைப்பு, தொழில்நுட்ப வசதிகளில் இன்றைய தலைமுறை கார்களுடன் போட்டி போடும்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் அறிமுக தேதி விபரம் கசிந்தது!!

முதல்தலைமுறை ஹூண்டாய் ஐ10 காரின் பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய சான்ட்ரோ கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், 2019ம் ஆண்டு இந்தியாவில் நடைமுறைக்கு வர இருக்கும் புதிய கிராஷ் டெஸ்ட் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்ட கட்டுமானத்தையும், பாதுகாப்பு அம்சங்களையும் பெற்றிருக்கும்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் அறிமுக தேதி விபரம் கசிந்தது!!

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட உள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் எதிர்பார்க்கப்படுகிகறது. ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொண்ட கார் மாடலாகவும் இருக்கும்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் அறிமுக தேதி விபரம் கசிந்தது!!

இந்த காரின் உற்பத்தி விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி இருந்தாலும் தீபாவளிக்கு முன்னதாக ஹூண்டாய் சான்ட்ரோ காரின் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கிவிடும் என்று நம்பலாம். டாடா டியாகோ காருக்கு நேரடி போட்டியாக இருக்கும். மறைமுகமாக ரெனோ க்விட் உள்ளிட்ட மாடல்களுக்கு நெருக்கடியை தரும்.

Article Published On: Tuesday, July 10, 2018, 11:13 [IST]
English summary
New Hyundai Santro launch date details.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+