ரூ.3.89 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார்!

ரூ.3.89 லட்சம் என்ற சவாலான ஆரம்ப விலையில் புதிய தலைமுறை ஹூண்டாய் சான்ட்ரோ கார் இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எரிபொருள் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

ரூ.3.89 லட்சம் என்ற சவாலான ஆரம்ப விலையில் புதிய தலைமுறை ஹூண்டாய் சான்ட்ரோ கார் இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த இதற்கான நிகழ்ச்சியிலிருந்து எமது செய்தியாளர் ஸ்டீபன் நீல் தரும் தகவல்கள், படங்களை இந்த செய்தியில் காணலாம்.

ரூ.3.89 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார்!

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் அறிமுக விழாவில், அதன் விளம்ப தூதராக நீண்ட காலமாக பணியாற்றி வரும் பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் மற்றும் ஹூண்டாய் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஏராளமான தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் மிகச் சரியான பட்ஜெட்டில், மிகச் சிறந்த பட்ஜெட் கார் தேர்வாக வந்துள்ள புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் அறிமுக நிகழ்விலிருந்து முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ரூ.3.89 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார்!

வேரியண்ட்டுகள் விபரம்

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எரிபொருள் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் மாடலின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் வசதிகளை பொறுத்து டிலைட், எரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ் மற்றும் அஸ்ட்டா ஆகிய 5 வேரியண்ட்டுகளில் வந்துள்ளது. ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலும், சிஎன்ஜி மாடலும் மேக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகிய 2 வேரியண்ட் தேர்வுகளில் மட்டுமே கிடைக்கும்.

ரூ.3.89 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார்!

பிளாட்ஃபார்ம்

ஹூண்டாய் ஐ10 கார் உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில்தான் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பழைய சான்ட்ரோ காரை போன்று டால் பாய் கான்செப்ட்டில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், முற்றிலும் வேறுபட்ட புதிய வடிவமைப்பில் வந்துள்ளது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார். டால் பாய் டிசைன் காரணமாக, உட்புறத்தில் நல்ல ஹெட்ரூம் இடவசதியை வழங்கும்.

ரூ.3.89 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார்!

முகப்பு வடிவமைப்பு அம்சங்கள்

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரில் அலை பின்னல் போன்று அடுக்கடுக்காக பட்டைகள் கொண்ட பிரம்மாண்ட முகப்பு க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. க்ரில் அமைப்பின் இருபுறத்திலும் பனி விளக்குகள் இடம்பெற்றுள்ளன. க்ரில் அமைப்புக்கு மேலாக ஹெட்லைட் பானட்டிலேயே அமைந்தாற்போல் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ரூ.3.89 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார்!

வடிவமைப்பு அம்சங்கள்

புதிய சக்கர அமைப்பு, டெயில் லைட் க்ளஸ்ட்டர் ஆகியவை புதிய சான்ட்ரோ காருக்கு நவீன யுக மாடல் என்ற தோற்றத்தை தருகிறது. ஒட்டுமொத்தத்தில் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்பதில் ஐயமில்லை.

ரூ.3.89 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார்!

பெட்ரோல் எஞ்சின்

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரில் 1.1 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவரையும், 99 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கும்.

ரூ.3.89 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார்!

சிஎன்ஜி மாடல்

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் பெட்ரோல் எஞ்சின் மட்டுமின்றி, சிஎன்ஜி எரிவாயுவில் இயங்கும் மாடலிலும் வந்துள்ளது. இந்த மாடலில் 1.1 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 58 பிஎச்பி பவரையும், வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் கிடைக்கும்.

ரூ.3.89 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார்!

மைலேஜ்

பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 20.3 கிமீ மைலேஜையும், சிஎன்ஜி மாடல் கிலோவுக்கு 30.48 கிமீ மைலேஜையும் வழங்கும் என அராய் சான்றளித்துள்ளது. நடைமுறையில் இது மிகச் சிறப்பான மைலேஜ் தரும் பட்ஜெட் கார் மாடலாக வந்துள்ளது.

ரூ.3.89 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார்!

உட்புற வடிவமைப்பு

இந்த காரின் உட்புறத்தில் கருப்பு மற்றும் பீஜ் வண்ணத்திலான இரட்டை வண்ண இன்டீரியர் தீம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. சான்ட்ரோ காரின் பச்சை வண்ண மாடலில் மட்டும் உட்புறத்தில் மட்டும் முழுவதும் கருப்பு வண்ண இன்டீரியர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டேஷ்போர்டு மிக சிறப்பாகவும், நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் 2.5 அங்குல டிஜிட்டல் திரை மூலமாக பல தகவல்களை பெற முடியும். அனைத்து வேரியண்ட்டுகளிலும், டாக்கோ மீட்டரும் உண்டு என்பது முக்கிய விஷயமாக கூறலாம்.

ரூ.3.89 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார்!

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். மிரர்லிங்க் வசதியும் இதன் முக்கிய வசதியாக கூறலாம்.

இது போன்ற ஆட்டோமொபைல் செய்திகளை உடனுக்குடன் உங்கள் டெலிகிராம் செயலியில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்

ரூ.3.89 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார்!

வசதிகள்

இந்த காரில் எலெக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதியுடன் சைடு மிரர்கள், பின் இருக்கை பயணிகளுக்கான ரியர் ஏசி வென்ட்டுகள், ரிமோட் பூட் லிட் ஓபன் வசதி, பவர் ஸ்டீயரிங், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் ஆகியவை முக்கிய வசதிகளாக இடம்பெற்றுள்ளன.

ரூ.3.89 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார்!

சக்கரங்கள்

இந்த காரின் டாப் வேரியண்ட்டில் 14 அங்குல ஸ்டீல் வீல்களும் 165/70 அளவுடைய டயர்களும் பொருத்தப்பட்டுள்ளன. விலை குறைவான வேரியண்ட்டுகளில் 13 அங்குல ஸ்டீல் வீல்களும் 155/80 டயர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த காரில் அலாய் சக்கரங்கள் இல்லை என்பது குறையாக இருக்கிறது.

ரூ.3.89 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார்!

பாதுகாப்பு வசதிகள்

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரில் அதிக வலுவான, நீடித்த உழைப்பை வழங்கும் ஸ்டீல் பாகங்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதால், மிக வலுவான கட்டுமானத்தை பெற்றிருக்கிறது. இந்த காரில் ஓட்டுனருக்கான ஏர்பேக், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றிருக்கிறது.

ரூ.3.89 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார்!

கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள்

டாப் வேரியண்ட்டில் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ரியர் வைப்பர் மற்றும் வாஷர் உள்ளிட்ட இதர பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரின் மதிப்புக்கு முக்கிய காரணமாக இருக்கும். முன் இருக்கை பயணிக்கான ஏர்பேக் மற்றும் ரிவர்ஸ் கேமரா ஆப்ஷனலாக கிடைக்கும். சிஎன்ஜி மாடலில் தீயணைப்பு உபகரணமும் இடம்பெற்றுள்ளது.

ரூ.3.89 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார்!

வண்ணங்கள்

புதிய சான்ட்ரோ கார் இம்பீரியல் பீஜ், மரினா புளூ, ஃபியரி ரெட், தைபூன் சில்வர், போலார் ஒயிட், ஸ்டார் டஸ்ட் மற்றும் டயானா க்ரீன் ஆகிய 7 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

ரூ.3.89 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார்!

வாரண்டி விபரம்

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு 3 ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் தூரத்திற்கான வாரண்டி வழங்கப்படுகிறது. 3 ஆண்டுகளுக்கான அவசர சாலை உதவி திட்டமும், குறைவான பராமரிப்பு கொண்டதாக இருக்கும் என்று ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

ரூ.3.89 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார்!

விலை விபரம்

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் ரூ.3.89,900 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய டாப் வேரியண்ட் ரூ.6 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கும் என்பது சிறப்பான விஷயமாக இருக்கும்.

ரூ.3.89 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார்!

முன்பதிவு விபரம்

கடந்த 13 நாட்களாக ரூ.11,100 முன்பணத்துடன் ஆன்லைனில் முன்பதிவு ஏற்கப்பட்டு வந்தது. இதுவரை 13 நாட்களில் 23,500 வாடிக்கையாளர்கள் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று விலை அறிவிக்கப்பட்டுவிட்டதால், இந்த எண்ணிக்கை வெகுவாக உயரும் வாய்ப்புள்ளது.

ரூ.3.89 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார்!

போட்டியாளர்கள்

இந்த புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் வருகை டாடா டியாகோ, ரெனோ க்விட், மாருதி வேகன் ஆர் மற்றும் மாருதி செலிரியோ உள்ளிட்ட பட்ஜெட் ரக கார் மாடல்களுக்கு கடும் போட்டியாக இருக்கும்.

ரூ.3.89 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார்!

விலை பட்டியல்

Variants Price
D-Lite Rs 3,89,900
Era Rs 4,24,900
Magna Rs 4,57,900
Magna AMT Rs 5,18,900
Sportz Rs 4,99,900
Sportz AMT Rs 5,64,900
Asta Rs 5,45,900
Magna CNG Rs 5,23,900
Sportz CNG Rs 5,64,900
Most Read Articles
English summary
Hyundai India has launched the all-new Santro in the country. The new Hyundai Santro is launched in India at a starting price of Rs 3.89 lakh ex-showroom (India). The new Hyundai Santro features a new design language and comes loaded with segment-first features.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X