புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு ஆன்லைனில் முன்பதிவு துவங்கியது!

வரும் 23ந் தேதி புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த புதிய மாடல் பெட்ரோல், சிஎன்ஜி, கியர்பாக்ஸ் ஆப்ஷனை பொறுத்து 8 வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

பட்ஜெட் கார் பிரியர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும், ஆன்லைனில் முன்பதிவு துவங்கி இருக்கிறது. மேலும், புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் வேரியண்ட் விபரங்கள் வெளியாகி இருக்கின்றன.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு ஆன்லைனில் முன்பதிவு துவங்கியது!

வரும் 23ந் தேதி புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த புதிய மாடலின் வேரியண்ட் விபரங்கள் குறித்த தகவலை ஆட்டோகார் இந்தியா தளம் வெளியிட்டு இருக்கிறது. அதில், பெட்ரோல், சிஎன்ஜி, கியர்பாக்ஸ் ஆப்ஷனை பொறுத்து 8 வேரியண்ட்டுகளில் கிடைக்கும். டிலைட், எரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ் மற்றும் அஸ்ட்டா என்ற வேரியண்ட் பெயர்களில் வர இருக்கின்றன.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு ஆன்லைனில் முன்பதிவு துவங்கியது!

விலை குறைவான வேரியண்ட்டுகள் உள்பட அனைத்து வேரியண்ட்டுகளிலும் ஓட்டுனர் பக்கத்திற்கான ஏர்பேக், சீட்பெல்ட் ரிமைன்டர் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு ஆன்லைனில் முன்பதிவு துவங்கியது!

விலை உயர்ந்த வேரியண்ட்டில் முன் இருக்கை பயணிக்கான ஏர்பேக்,ரியர் பார்க்கிங் கமரா, ரியர் பார்க்கிங் சென்சார்கள், ரியர் வைப்பர், ரியர் ஏசி வென்ட்டுகள், பவர் அட்ஜெஸ்ட் சைடு மிரர்கள், ஓட்டுனர் இருக்கை உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி இடம்பெறும்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு ஆன்லைனில் முன்பதிவு துவங்கியது!

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே செயலிகளை இது சப்போர்ட் செய்யும்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு ஆன்லைனில் முன்பதிவு துவங்கியது!

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரில் 1.1 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவரையும், 99 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற இருக்கிறது. ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு ஆன்லைனில் முன்பதிவு துவங்கியது!

ஏஎம்டி கியர்பாக்ஸ் மேக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்டுகள் மட்டுமே கிடைக்கும். அனைத்து வசதிகளும் கொண்ட, அஸ்ட்டா என்ற டாப் வேரியண்ட்டில் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் கிடைக்காது என்பது ஏமாற்றத்தை தரலாம்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு ஆன்லைனில் முன்பதிவு துவங்கியது!

பெட்ரோல் மாடல் தவிர்த்து சிஎன்ஜி எரிவாயுவில் இயங்கும் மாடலிலும் வர இருக்கிறது. இந்த மாடலில் இருக்கும் அதே 1.1 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 58 பிஎச்பி பவரையும், 84 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் விதத்தில் இருக்கும். மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு ஆன்லைனில் முன்பதிவு துவங்கியது!

பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 20.3 கிமீ மைலேஜையும், சிஎன்ஜி மாடல் கிலோவுக்கு 3.0.5 கிமீ மைலேஜையும் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. நடைமுறையில் சிறப்பான மைலேஜாக இருக்கும். 7 விதமான வண்ணத் தேர்வுகளில் வருகிறது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு ஆன்லைனில் முன்பதிவு துவங்கியது!

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் ரூ.3.70 லட்சம் முதல் ரூ.5.40 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மேனுவல் கியர்பாக்ஸ் மாடலைவிட, ஏஎம்டி மாடல் ரூ.30,000 கூடுதல் விலையில் வர இருக்கிறது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு ஆன்லைனில் முன்பதிவு துவங்கியது!

தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக கார் வாங்க திட்டமிட்டிருப்போருக்கு மிகச் சிறந்த தேர்வாக புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் அமையும். டிசைனிலும், வசதிகளிலும் சிறப்பாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் கண்ணை மூடிக்கொண்டு தேர்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
English summary
According to reports that the new Hyundai Santro will be offered in eight variants which include two gearbox and fuel options. The petrol version of the new Hyundai Santro will be available in six trim levels: DLite, Era, Magna, Sportz and Asta.
Story first published: Thursday, October 11, 2018, 13:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X