புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் படங்கள், தகவல்கள் வெளியீடு!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும், புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் படங்கள், தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பழைய சான்ட்ரோ காரிலிருந்து முற்றிலும் வேறுபட்ட நவீன மாடலாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறத

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும், புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் படங்கள், தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் படங்கள், தகவல்கள் வெளியீடு!

பழைய சான்ட்ரோ காரிலிருந்து முற்றிலும் வேறுபட்ட நவீன மாடலாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார். முகப்பில் பிரம்மாண்டமான க்ரில் அமைப்பு, அதன் இரு கங்கிலும் கொடுக்கப்பட்டு இருக்கும் பனி விளக்குகள், பானட்டுடன் இணைந்தவாறு வடிவமைக்கப்பட்ட ஹெட்லைட்டுகள் என புதிய டிசைன் தாத்பரியத்தில் வந்துள்ளது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் படங்கள், தகவல்கள் வெளியீடு!

இந்த காரின் பெல்ட் லைன் நேராக இல்லாமல் வளைந்து செல்வதுடன், வீல் ஆர்ச்சுகளுக்கு மேல் மடிப்புகளுடன் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. ஆன்டென்னா கூரையின் முன்பகுதியில் பொருத்தப்பட்டு இருக்கிறது. முழுவதுமாக மறைக்கும் ஃபுல் வீல்கவர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் படங்கள், தகவல்கள் வெளியீடு!

பின்புறத்தில் டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் எளிமையான டிசைன் தாத்பரியத்துடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மொத்தத்தில், புதிய சான்ட்ரோ கார் டிசைன் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என்று சொல்ல முடியும்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் படங்கள், தகவல்கள் வெளியீடு!

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரில் 1.1 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவரையும், 99 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் படங்கள், தகவல்கள் வெளியீடு!

இதே 1.1 லிட்டர் எஞ்சின் சிஎன்ஜி எரிவாயுவில் இயங்கும் மாடலிலும் வர இருக்கிறது. இந்த மாடலானது 58 பிஎச்பி பவரையும், 84 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும். புதிய ஹூண்டாய் சான்டரோ காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 20.3 கிமீ மைலேஜ் தரும் என்றும், சிஎன்ஜி மாடல் கிலோவுக்கு 30.5 கிமீ மைலேஜ் தரும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் படங்கள், தகவல்கள் வெளியீடு!

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் இன்டீரியர் தரம் மிக்கதாக இருக்கும் என்பது எதிர்பார்ப்பு. இந்த காரில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே செயலிகளை சப்போர்ட் செய்யும். மிரர் லிங்க் மற்றும் குரல் வழி உத்தரவு கட்டுப்பாட்டு வசதியையும் இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கும்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் படங்கள், தகவல்கள் வெளியீடு!

டாப் வேரியண்ட்டில் பின்புற பயணிகளுக்கான தனி ஏசி வென்ட்டுகள், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், ரியர் வைப்பர், ரியர் வாஷர் மற்றும் டீஃபாகர், எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதியுடன் சைடு மிரர்கள், யுஎஸ்பி போர்ட் மற்றும் 12V சார்ஜர் உள்ளிட்ட வசதிகளை பெற்றிருக்கும். பாதுகாப்பு வசதிகளிலும் சிறப்பான பட்ஜெட் கார் மாடலாக இருக்கும்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் படங்கள், தகவல்கள் வெளியீடு!

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு நாளை முதல் ஆன்லைனில் முன்பதிவு துவங்கப்பட இருக்கிறது. ரூ.11,100 முன்பணம் செலுத்தி, பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் படங்கள், தகவல்கள் வெளியீடு!

வரும் 23ந் தேதி புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிரது. ரூ.3.5 லட்சம் முதல் ரூ.4 லட்சம் இடையிலான ஆரம்ப விலை நிர்ணயிக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த கார் பட்ஜெட் கார் வாங்க திட்டமிட்டிருப்போருக்கு சிறந்த சாய்ஸாக அமையும்.

Article Published On: Tuesday, October 9, 2018, 13:51 [IST]
English summary
New Hyundai Santro revealed: Hyundai has finally unveiled the all-new Santro ahead of its launch, which is scheduled to take place on October 23, 2018. The new Hyundai Santro comes with an all-new design and gets segment-first features.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+