சரக்கு வாகனங்கள் விபத்தில் சிக்குவதால் இவ்வளவு பொருளாதர இழப்பா? வருகிறது புதிய இன்சூரன்ஸ் திட்டம்
இந்தியாவில் ஆண்டுதோறும் நடக்கும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. ஒவ்வொரு ஆண்டும் இதை குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும் பெரிய அளவில் பலன் கிடைப்பதில்லை.
இந்தியாவில் ஆண்டுதோறும் நடக்கும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. ஒவ்வொரு ஆண்டும் இதை குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும் பெரிய அளவில் பலன் கிடைப்பதில்லை.

இவ்வாறான விபத்துக்களில் அதிகம் சிக்குவது சரக்குகளை ஏற்றி செல்லும் லாரிகள்தான். லாரியில் சரக்கு ஏற்றி செல்லும் போது விபத்திற்கு உள்ளாகி லாரியில் உள்ள சரக்கிற்கு பெரும் அளவில் பாதிப்பு ஏற்படுவது என்பது அவ்வப்போது நடந்து வரும் ஒன்றாகவே இருக்கிறது.

இப்படியாக ஆண்டு முழுவதும் நடக்கும் விபத்துக்களால் இந்தியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் வர்த்தக பாதிப்பு ஏற்படுகிறது. இப்படியாக இந்தியாவில் நடக்கும் சரக்கு லாரிகளின் விபத்துக்களை கணக்கிட்டு அதில் சேதமான பொருட்களை மதிப்பிடும் போது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
Recommended Video


இந்தியாவில் விபத்தில் சிக்கி சேதமாகும் சரக்குகளால் இந்தியா ஆண்டுதோறும் 3 சதவீத ஜிடிபியை இழக்கிறது. அதாவது தற்போது இந்தியாவில் ஜிடிபி வளர்ச்சி சுமார் 7 சதவீதமாக உள்ளது. இந்த விபத்துக்கள் தவிர்க்கப்பட்டால் அதை சுமார் 10 சதவீதமாக அதிகரிக்கலாம் என ஒரு கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

ஆனால் விபத்துக்களை தவிர்ப்பது என்பது தற்போது நடக்காத காரியம். அதற்கான எந்த திட்டமும் எந்த நாட்டிடமும் இல்லை. எல்லா நாடுகளிலும் விபத்து என்பது நடந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால் அந்த விபத்தில் இருந்து விபத்தில் சிக்கிய வாகனத்தை மீட்டு எடுத்து அதனால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்து மீண்டும் பழையபடி வாகனங்களை பழைய நிலையில் இயக்குவதற்கான கால அவகாசம்தான் இங்கு விஷயம்.

விபத்தில் சிக்கிய வாகனம் மீண்டும் பழைய நிலைக்கு வர தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு கொண்டேதான் இருக்கிறது. இதை உடனடியாக சரி செய்யும் பட்சத்தில் இந்திய பொருளாதார வளர்ச்சியில் தேவையில்லாமல் ஏற்படும் தொய்வுகளை சரிசெய்ய முடியும்.

விபத்தில் சிக்கிய வாகனத்தை விரைவாக மீட்டு எடுப்பது என்பது எப்படி என்றால் அதற்காக செய்யப்பட்ட இன்சூரன்ஸ்தான் ஒரே வழி. ஒரு வாகனம் விபத்தில் சிக்கினால் அதன் உரிமையாளருக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும். இதை ஈடுகட்டதான் இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது.

ஆனால் இன்றைய நிலையில் விபத்தில் சிக்கிய வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் பணத்தை பெறுவது என்பது பெரும் குதிரை கொம்பான விஷயம்தான். அதற்கான நடைமுறையில் சிறிய பிழை இருந்தால் கூட அதை காரணம் காட்டி இன்சூரன்ஸ் பணம் கிடைக்காமல் போய்விடலாம்.

இதனால் பலர் விபத்து நடந்த பகுதியில் இருந்து வாகனத்தை அகற்றவே அதிகமாக யோசிப்பார்கள். விபத்து நடந்ததற்கான பல ஆதாரங்களை அங்கேயே சேகரிப்பார்கள். அங்கிருந்தே இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு கால் செய்து என்ன செய்ய வேண்டும்? என அப்பொழுது விசாரிப்பார்கள். இவ்வாறான விஷயங்கள் எல்லாம் விபத்து நடந்த இடத்தில் நீங்கள் பார்க்கலாம்.

ஆனால் இந்த நடைமுறைகளில் அதிக நேரம் எடுக்கும் நடைமுறைகளை தளர்த்தி சில நடைமுறைகளை மாற்றியமைத்து விபத்தில் சிக்கிய வாகனங்களுக்கு உடனடியாக பணம் கிடைக்கும் வகையில் பெங்களூருவை சேர்ந்த ஜிங்கா லாகிஸ்டிக் சொலியூசன் மற்றும் ஆக்கோ இன்சூரன்ஸ் நிறுவனம் இணைந்து புதிய விதமான இன்சூரன்ஸ் பாலிசியை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

இந்த இன்சூரன்ஸை பெறுபவர்கள் வாகனம் விபத்தில் சிக்கிய சில மணி நேரங்களிலேயே அதற்கான இன்சூரன்ஸ் பணத்தை பெற முடியும். விபத்து நடந்த பின்பு டிஜிட்டல் முறையில் ஆவணங்களை சமர்பித்தாலே போதும். இன்சூரன்ஸ் பணத்தை கோர முடியும். எல்லாம் டிஜிட்டல் முறையில்தான். இன்சூரன்ஸ் ஆவணத்தின் ஸ்கேன்/டிஜிட்டல் காப்பியோ அல்லது பாலிசி எண்ணையோ எஸ்எம்எஸ் அனுப்பினாலே போதும்.

மேலும் விபத்து நடந்த பகுதிக்கு இன்சூரன்ஸ் நிறுவனத்தார் வந்து வாகனம் உண்மையிலேயே விபத்தில் தான் சிக்கியதா? என்ற நடைமுறை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் விபத்தில் சிக்கிய வாகனத்தை அவர்கள் ஒப்பந்தம் செய்துள்ள அங்கீகரிக்கப்பட்ட அருகில் உள்ள கராஜிற்கு எடுத்து சென்று அதனை ரிப்பேர் செய்ய வேண்டும்.

இதன் மூலம் விபத்தில் சிக்கிய வாகனமும் விரைவாக சர்வீஸ் செய்யப்பட்டு விடும். இதனால் குறைவான வியாபார இழப்பு மட்டுமே ஏற்படும். மேலும் வாகனங்கள் முடிந்த அளவிற்கு விரைவில் தனது பழைய பணியை துவங்கும். மேலும் விபத்து நடந்த இடத்தையும், அங்கீகரிக்கப்பட்ட டீலர் வாகனத்தை விபத்து நடந்த இடத்தில் இருந்து எடுத்த இடத்தையும் ஒரே மாதிரியாக ஜிபிஎஸ் குறிப்புகள் இருப்பதன் மூலம் இந்த விபத்து நடந்த இடத்தை அவர்கள் உறுதி செய்கின்றனர்.

இந்த இன்சூரன்ஸ் பணம் நேரடியாக அங்கீகரிக்கப்பட்ட டீலருக்கு டிஜிட்டல் முறையில் பரிமாற்றம் செய்யப்படும். சில நேரங்களில் விபத்தில் சிக்கிய அதே நாளே இது எல்லாம் நடந்து முடியும் வாய்ப்புகளும் உள்ளது.

இது குறித்து ஜிங்கா லாகிஸ்டிக்கின் பிளாக் பக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராமசுப்பிரமணியம் கூறுகையில்: "இந்த இன்சூரன்ஸ் மூலம் சமூகத்தில் பெரிய மாற்றம் ஏற்படும் என நம்புகிறோம்.

இதன்மூலம் மனித மற்றும் வாகன இழப்புகள் ஈடு செய்யப்படும். வாகனங்களை எந்த விபத்தும் இல்லாமல் இயக்குவது மிகப்பெரிய சாதனைதான். அவர்களை நாங்கள் தலை வணங்குகிறோம்" என பேசினார்.
இது போன்ற செய்திகளை உடனுக்குடன் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்..!

விரைவில் அறிமுகமாகவுள்ள இந்த இன்சூரன்ஸ் குறித்து சரக்கு வாகன உரிமையாளர்கள் அதிகம் பேசி வருகின்றனர். தற்போது சரக்கு வாகனங்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்படும் இந்த திட்டம் விரைவில் பயணிகள் வாகனங்களுக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








