மஹிந்திராவின் புதிய பிரிமீயம் எஸ்யூவியின் அறிமுக தேதி மற்றும் பெயர் விபரம்!

மஹிந்திரா ஒய்-400 எஸ்யூவியானது அல்டூராஸ் என்ற பெயரில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வரும் 26ந் தேதி இந்த புதிய எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியா

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய பிரிமீயம் எஸ்யூவியின் பெயர் மற்றும் அறிமுக தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மஹிந்திராவின் புதிய பிரிமீயம் எஸ்யூவியின் அறிமுக தேதி மற்றும் பெயர் விபரம்!

தென்கொரியாவை சேர்ந்த சாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனம் மஹிந்திராவின் கீழ் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் ரெக்ஸ்டன் எஸ்யூவியை இந்தியாவில் தனது விற்பனையகங்கள் மூலமாக விற்பனை செய்து வந்தது மஹிந்திரா.

மஹிந்திராவின் புதிய பிரிமீயம் எஸ்யூவியின் அறிமுக தேதி மற்றும் பெயர் விபரம்!

இந்த நிலையில் புதிய தலைமுறை சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவியை இந்தியாவில் ரீபேட்ஜ் செய்து தனது சொந்த பிராண்டில் விற்பனைக்கு கொண்டு வர முடிவு செய்தது மஹிந்திரா. அதன்படி, கடந்த பிப்ரவரியில் நடந்த ஆட்டோமொபைல் கண்காட்சியில், Y-400 என்ற பெயரில் புதிய தலைமுறை ரெக்ஸ்டன் மாடலானது மஹிந்திரா பிராண்டு சின்னத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

மஹிந்திராவின் புதிய பிரிமீயம் எஸ்யூவியின் அறிமுக தேதி மற்றும் பெயர் விபரம்!

இந்த நிலையில், தற்போது இந்த புத்தம் புதிய பிரிமீயம் எஸ்யூவி மஹிந்திரா அல்டூராஸ் என்ற பெயரில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வரும் 21ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக முன்பு தகவல்கள் வெளியான நிலையில், தற்போது வரும் 26ந் தேதி இந்த புதிய எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மஹிந்திராவின் புதிய பிரிமீயம் எஸ்யூவியின் அறிமுக தேதி மற்றும் பெயர் விபரம்!

புதிய சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவியின் முகப்பு க்ரில் அமைப்பு உள்ளிட்டவற்றில் மஹிந்திராவின் டிசைன் தாத்பரியங்களுடன் மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதுடன், மஹிந்திரா லோகோவும் கொடுக்கப்பட்டு இந்தியாவில் களமிறக்கப்பட இருக்கிறது.

மஹிந்திராவின் புதிய பிரிமீயம் எஸ்யூவியின் அறிமுக தேதி மற்றும் பெயர் விபரம்!

மஹிந்திரா கார்களின் பெயர்களின் இறுதி எழுத்தின் உச்சரிப்பு ஆங்கில எழுத்தான ஓ என்ற உச்சரிப்புடன் முடியும் வகையில் இருக்கும். அதன்படி, இந்த புதிய எஸ்யூவி மாடலானது எக்ஸ்யூவி700 அல்லது இன்ஃபர்னோ ஆகிய பெயர்களில் வரும் என்று யூகங்கள் றெக்கை கட்டி பறந்தன.

மஹிந்திராவின் புதிய பிரிமீயம் எஸ்யூவியின் அறிமுக தேதி மற்றும் பெயர் விபரம்!

ஆனால், தற்போது அல்டூராஸ் என்ற பெயரில் புதிய தலைமுறை ரெக்ஸ்டன் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. அல்டூராஸ் என்பதற்கு உயரம் என்று பொருள்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்திராவின் புதிய பிரிமீயம் எஸ்யூவியின் அறிமுக தேதி மற்றும் பெயர் விபரம்!

இந்த எஸ்யூவியில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 180.5 பிஎச்பி பவரையும், 450 என்எம் டார்க் திறனையும் வழங்கும் திறன் கொண்டதாக இருக்கும். மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இமைக்கப்பட்டு இருக்கும். மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் இருக்காது.

மஹிந்திராவின் புதிய பிரிமீயம் எஸ்யூவியின் அறிமுக தேதி மற்றும் பெயர் விபரம்!

இந்த எஸ்யூவி 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் மாடல்களில் வருகிறது. இந்த எஸ்யூவியானது 244 மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் கொண்டிருப்பதுடன், 5.5 மீட்டர் டர்னிங் ரேடியஸ் கொண்டதாகவும் வர இருக்கிறது. இதன் ரகத்தில் மிக நீளமான மாடலாகவும் இருக்கும்.

மஹிந்திராவின் புதிய பிரிமீயம் எஸ்யூவியின் அறிமுக தேதி மற்றும் பெயர் விபரம்!

மஹிந்திராவின் மிக விலை உயர்ந்த மாடலாகவும், அதிக பிரிமீயம் வசதிகளுடன் வர இருப்பதால் வாடிக்கையாளர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அடுத்த, டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாகவும், விலை குறைவாகவும் இருக்கும் என்பதால் வரவேற்பை பெறும் வாய்ப்புள்ளது.

Article Published On: Saturday, November 3, 2018, 16:51 [IST]
English summary
New Mahindra Alturas SUV To Launch In India On Nov 26, 2018.
மேலும்... #மஹிந்திரா
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+