ஏர்பேகுகள், வார்னிங் அலெர்ட் என புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் களமிறங்கும் மஹிந்திரா பொலேரோ கார்

ஏர்பேகுகள், வார்னிங் அலெர்ட் என புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் களமிறங்கும் மஹிந்திரா பொலேரோ எஸ்யூவி கார்..!!

By Azhagar

இந்தியாவில் அதிக விற்பனை திறனை பெற்ற எஸ்யூவி கார்களில் பிரபலமான ஒன்று பொலேரோ. மஹிந்திராவின் கார்களிலேயே பெரியளவில் வாடிக்கையாளர் வட்டத்தை பெற்ற கார்களில் ஒன்றாகவும் இது உள்ளது.

புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவரும் மஹிந்திரா பொலேரோ..!!

இந்நிலையில் பொலேரோ எஸ்யூவி காரின் அப்டேட் மாடலை மஹிந்திரா வெளியிடவுள்ளது. இந்த புதிய மாடலில் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவரும் மஹிந்திரா பொலேரோ..!!

அதன்படி ஆண்டி-லாக் பிரேக்கிங் அமைப்பு, ஏர்பேகுகள் உள்ளிட்ட அம்சங்களோடு புதிய பொலேரோ காரை மஹிந்திரா இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவரும் மஹிந்திரா பொலேரோ..!!

2019 ஜூலை முதல் இந்தியாவில் விற்பனையாகும் கார்கள் புதிய மதிப்பீடுகளின் படி தயாரிக்கப்பட்டு இருக்க வேண்டும் என மத்தியரசு வாகன பாதுகாப்பு மதிப்பீட்டை வகுத்துள்ளது.

புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவரும் மஹிந்திரா பொலேரோ..!!

அதன்படி இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து கார்களிலும் எச்சரிக்கை விளக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஏர்பேகுகள், சீட்பெல்ட் வார்னிங் லைட், ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை அடிப்படை பாதுகாப்பு அம்சங்களாக இடம்பெற்றிருக்க வேண்டும்.

Recommended Video

New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவரும் மஹிந்திரா பொலேரோ..!!

இந்த மதிப்பீடுகளை பின்பற்றி உருவாக்கப்பட்ட காராக இந்த புதிய பொலேரோ இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய வாகன பாதுகாப்பிற்கான மதிப்பீடுகளை இந்தியரசு கட்டாயமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவரும் மஹிந்திரா பொலேரோ..!!

இதுப்பற்றி பேசிய மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், மஹிந்திரா தயாரித்த கார்களிலேயே ஏர்பேகுகள் மற்றும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்படாத காராக பொலேரோ இருந்து வந்தது.

புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவரும் மஹிந்திரா பொலேரோ..!!

தற்போது இதிலுள்ள இந்த நிலையை மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இவை அனைத்து 2019 ஜூலை மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும் என்று கூறினார்.

புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவரும் மஹிந்திரா பொலேரோ..!!

ஏர்பேகுகள், ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் போன்ற அம்சங்கள் மட்டுமே பொலேரோ காரில் வழங்கப்படமால் உள்ளது. இவை அனைத்தும் இந்த காரில் பொருத்தப்பட்ட பின், மஹிந்திரா பொலேரோ அதிக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த காராக மாறிவிடும்.

புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவரும் மஹிந்திரா பொலேரோ..!!

ஊரக பகுதிகளுக்கு ஏற்ற எஸ்யூவி காராக வலம் வரும் பொலரோ, புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் விற்பனைக்கு வந்தபிறகு இந்தியாவின் இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் அதிக விற்பனையை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவரும் மஹிந்திரா பொலேரோ..!!

தற்போது விற்பனையில் உள்ள மஹிந்திரா பொலேரோ எஸ்யூவி காரில் சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், பவர் வின்டோ, கீலெஸ் என்ட்ரி, ஆர்ம்ரெஸ்ட் போன்றவை உள்ளது.

புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவரும் மஹிந்திரா பொலேரோ..!!

தொழில்நுட்ப கட்டமைப்புகளில் ப்ளுடூத் வசதி கொண்ட எம்3 பிளேயர், ஓட்டுநர் வசதிக்கான டிஸ்பிளே, ரியர் வாஷர், சென்ட்ரல் பெசல் மற்றும் வைப்பர் ஆகியவை இடம்பெற்றுள்ளது.

புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவரும் மஹிந்திரா பொலேரோ..!!

தற்போது பயன்பாட்டில் உள்ள இந்த அம்சங்களுடன், புதிய பாதுகாப்பு கட்டமைப்புகளில் மஹிந்திரா பொலேரோ கார் வெளியானால் அது எஸ்யூவி நிலையிலிருந்து எம்.யூ.வி வாகனமாக மாறிவிடும்.

புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவரும் மஹிந்திரா பொலேரோ..!!

4 மீட்டர் பவர் பிளஸ் மற்றும் ஸ்டார்ன்டர்டு என இரண்டு மாடல்களில் மஹிந்திரா பொலேரோ விற்பனையில் உள்ளது.

1.5 லிட்டர் டீசல் மற்றும் எம்2டிஐசிஆர் 2.5 டீசல் ஆகிய எஞ்சின் தேர்வுகளில் இந்தியாவில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது.

புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவரும் மஹிந்திரா பொலேரோ..!!

1.5 லிட்டர் கொண்ட மஹிந்திரா பொலேரோ வேரியன்ட் 70 பிஎச்பி பவர் மற்றும் 195 என்.எம் டார்க் திறனை வழங்கும். அதேபோல 2.5 லிட்டர் யூனிட் 63 பிஎச்பி பவர் மற்றும் 180 என்.எம் டார்க் திறனை வழங்கும். இந்த இரண்டு எஞ்சின் தேர்வுகளுமே 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேவையை கொண்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, February 23, 2018, 16:21 [IST]
English summary
Read in Tamil: Mahindra Bolero With New Safety Features To Launch Soon. Click for Details...
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+