மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் 9 சீட்டர் காரின் விபரங்கள் கசிந்தது!!
மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் எஸ்யூவியின் முக்கிய விபரங்கள் வெளியாகி இருக்கின்றன.
மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் எஸ்யூவியின் முக்கிய விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த காரின் புரோஷர் இணையதளங்களில் கசிந்துள்ளன. இதனால், இந்த புதிய மாடல் விரைவில் விற்பனைக்கு வருவது உறுதியாகி இருக்கிறது.

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டது. ஆனால், புதிய டியூவி300 ப்ளஸ் மாடலானது 403 மிமீ கூடுதல் நீளம் கொண்டதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதிக வீல் பேஸ் பெற்றிருப்பதால், கூடுதல் இரு்ககைகளை பொருத்த முடியும். இந்த புதிய மாடல் 9 பேர் வரை பயணிப்பதற்கான இருக்கை அமைப்பை பெற இருக்கிறது.

முகப்பில் க்ரில் அமைப்பு, ஹெட்லைட், பம்பர் உள்ளிட்டவற்றின் டிசைனில் மாற்றங்கள் எதுவும் இல்லை. பக்கவாட்டில் சதுர வடிவிலான வீல் ஆர்ச்சுகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. மேலும், புதிய டெயில் லைட் க்ளஸ்ட்டரை பெற்றிருக்கிறது. டெயில் கேட்டில் ஸ்பேர் வீலும் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் எஸ்யூவியானது 4,400மிமீ நீளமும், 1,835மிமீ அகலமும், 1,812மிமீ உயரமும் கொண்டது. மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியை போன்றே, இந்த எஸ்யூவியில் 2,680மிமீ வீல் பேஸ் கொண்டதாக இருக்கிறது.

இந்த எஸ்யூவியில் இரட்டை வண்ண இன்டீரியர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. மூன்றாவது வரிசையில் இரண்டு பக்கமும் தலா இரண்டு பேர் வீதம் நான்கு பேர் அமர்ந்து செல்வதற்கான வசதியை அளிக்கும். டாடா சுமோ, டொயோட்டா குவாலிஸ் போன்ற இருக்கை வசதியை வழங்கும்.

டில்ட் ஸ்டீயரிங் வீல், சென்ட்ரல் லாக்கிங், சீட் பெல்ட் வார்னிங், எஞ்சின் இம்மொபைலைசர், க்ராஷ் டெஸ்ட்டிற்கு ஏதுவான கட்டமைப்பு உள்ளிட்டவற்றை பெற்றிருக்கும்.

புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் எஸ்யூவியானது போல்டு பிளாக், க்ளேசியர் ஒயிட், மெஜஸ்டிக் சில்வர் மற்றும் டைனமோ ரெட் ஆகிய 4 வண்ணங்களில் கிடைக்கும்.

புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் எஸ்யூவியில் 120 பிஎச்பி பவரையும், 280 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறு. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வருகிறது.

வாடிக்கையாளர்களுக்கான புரோஷர் வெளியாகி இருப்பதால் விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா ஸைலோவுக்கு மாற்றாக நிலைநிறுத்தப்பட இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








