புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி வருகை விபரம்!

புதுப்பொலிவுடன் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் வருகை விபரம் வெளியாகி இருக்கிறது.

By Saravana Rajan

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் வருகை குறித்த விபரம் வெளியாகி இருக்கிறது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி வருகை விபரம்!

மஹிந்திரா நிறுவனத்தின் முத்தாய்ப்பான எஸ்யூவி மாடலாக வலம் வரும் எக்ஸ்யூவி500 எஸ்யூவி அந்நிறுவனத்தின் விற்பனையிலும் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த சூழலில், போட்டி அதிகரித்து வருவதை மனதில் வைத்து, பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி வருகை விபரம்!

அடுத்த மாதம் இந்த புதிய எக்ஸ்யூவி500 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக எக்கானாமிக் டைம்ஸ் ஆட்டோ தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி வருகை விபரம்!

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் முன்புறத்தில் க்ரில் அமைப்பு, பம்பர் அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர் மற்றும் புதிய அலாய் வீல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி வருகை விபரம்!

அத்துடன், சக்திவாய்ந்த புதிய எஞ்சின் ஆப்ஷனிலும் வருகிறது. புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் பொருத்தப்பட்டு இருக்கும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் கூடுதல் சக்தியை வெளிப்படுத்தும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி வருகை விபரம்!

இந்த புதிய எஸ்யூவியில் இருக்கும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 170 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாக இருக்கும். இது மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் தோற்றத்திற்கு இணையான சக்தியை வெளிப்படுத்தும் மாடலாக மாற இருக்கிறது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி வருகை விபரம்!

இதுதவிர்த்து, இந்த புதிய மாடலில் இடம்பெற இருக்கும் புதிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனமானது, ஆன்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும்.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி வருகை விபரம்!

டாப் வேரியண்ட்டுகளில் உயர்தர லெதர் இருக்கைகள் மற்றும் சாஃப்ட் டச் எனப்படும் மென்மையான பாகங்கள் உட்புறத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும்.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி வருகை விபரம்!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியானது ரெனோ கேப்ச்சர், ஹூண்டாய் க்ரெட்டா ஆகிய மாடல்களுடன் போட்டி போடும்.

More from DriveSpark

Article Published On: Monday, March 19, 2018, 10:08 [IST]
English summary
Mahindra to launch new XUV500 in April 2018. According to sources from ET Auto, revealed that Mahindra will launch a refreshed version of the XUV500 in the coming month.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+