பார்ச்சூனருக்கு போட்டியாக புதிய எஸ்யூவி காரை களமிறக்குகிறது மஹிந்திரா.. மிரண்டு கிடக்கும் டொயோட்டா
டொயோட்டா பார்ச்சூனர் காருக்கு போட்டியாக புத்தம் புதிய எஸ்யூவி காரை மஹிந்திரா நிறுவனம் களமிறக்குகிறது.
டொயோட்டா பார்ச்சூனர் காருக்கு போட்டியாக புத்தம் புதிய எஸ்யூவி காரை மஹிந்திரா நிறுவனம் களமிறக்குகிறது. சாதாரண வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அந்த கார் லான்ச் ஆகவுள்ள நாள், சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவை சேர்ந்த முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று மஹிந்திரா. மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ உள்ளிட்ட எஸ்யூவி வகை (Sport Utility Vehicle-SUV) கார்கள், விற்பனையில் சக்கை போடு போட்டு வருகின்றன.

இந்த சூழலில், புத்தம் புதிய எஸ்யூவி வகை கார் ஒன்றை, இந்தியாவில் லான்ச் செய்யும் பணிகளில் மஹிந்திரா நிறுவனம் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தற்போது நடந்து வரும் 2018ம் ஆண்டில், வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள காராக இது கருதப்படுகிறது.

இந்த புத்தம் புதிய எஸ்யூவி காரின் பெயரை மஹிந்திரா நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. என்றாலும் தற்போதைக்கு Y400 (ஒய்400) என்ற குறியீட்டு பெயரில் (Code Name), இந்த கார் அழைக்கப்பட்டு வருகிறது.

வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மஹிந்திரா Y400 எஸ்யூவி கார், வரும் நவம்பர் மாதம் 19ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. நாட்கள் நெருங்கி வருவதால், இந்த காரை லான்ச் செய்வதற்காக பணிகளை மஹிந்திரா நிறுவனம் முடுக்கி விட்டுள்ளது.

டொயோட்டா பார்ச்சூனர், ஹோண்டா சிஆர்-வி, ஃபோர்டு எண்டெவர் உள்ளிட்ட எஸ்யூவி வகை கார்களுக்கு, மஹிந்திரா Y400 கடுமையான போட்டியை வழங்கவுள்ளது. மஹிந்திரா நிறுவனம் தற்போது XUV500 (எக்ஸ்யூவி500) காரை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

இந்த XUV500 காருக்கு மேலாக Y400 எஸ்யூவி கார் நிலை நிறுத்தப்படவுள்ளது. எனவே Y400 காரானது, XUV700 (எக்ஸ்யூவி700) என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் என தெரிகிறது. அதே நேரத்தில் இந்த புதிய காரில், 2.2 லிட்டர், 4 சிலிண்டர், டீசல் இன்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 187 பிஎச்பி பவர் மற்றும் 420 என்எம் டார்க் திறனை உருவாக்கி, சாலைகளில் சீறிப்பாயும் வல்லமை வாய்ந்தது. 7 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் இந்த இன்ஜின் இணைக்கப்படவுள்ளது.

மஹிந்திரா நிறுவனத்தின் மிகவும் சக்தி வாய்ந்த இன்ஜின்களில் ஒன்றாக இது இருக்கும். பெரிய 9.2 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் உள்பட வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளும் இந்த காரில் கட்டாயம் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

World of SUVs (வேர்ல்டு ஆப் எஸ்யூவி-ஸ்) எனப்படும் ப்ரைம் டீலர்ஷிப் செக்ஸன் மூலமாகவே இந்த புத்தம் புதிய எஸ்யூவி கார் விற்பனை செய்யப்படும் என மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஸ்பெஷல் செக்ஸனை ஏற்படுத்தும் பணியில் மஹிந்திரா நிறுவன டீலர்ஷிப்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றன.

மஹிந்திரா நிறுவனத்தின் இந்த புதிய எஸ்யூவி கார் ரூ.20-25 லட்சம் வரையிலான எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மஹிந்திரா நிறுவனத்தின் விலை உயர்ந்த கார்களில் ஒன்றாக இது திகழும். இந்த காருக்கான புக்கிங் வெகு விரைவில் தொடங்கவுள்ளது.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான அரசியல்வாதிகள் பலர் தற்போது டொயோட்டா பார்ச்சூனர் காரைதான் பயன்படுத்தி வருகின்றனர். அந்த டொயோட்டா பார்ச்சூனருக்கு போட்டியாகதான் இந்த புதிய எஸ்யூவி காரை மஹிந்திரா நிறுவனம் களமிறக்கவுள்ளது.

எனவே சாதாரண வாடிக்கையாளர்களுடன் சேர்த்து நாட்டை ஆளும் அரசியல்வாதிகள் பலரையும் மஹிந்திராவின் புதிய எஸ்யூவி கவர்ந்திழுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அவர்கள் எல்லாம் பார்ச்சூனரில் இருந்து மஹிந்திராவின் புதிய எஸ்யூவி காருக்கு மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மஹிந்திரா நிறுவனம் கடந்த செப்டம்பர் மாத முதல் வாரத்தில் புத்தம் புதிய மராஸ்ஸோ எம்பிவி ரக காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் மாருதி சுஸுகி எர்டிகா ஆகிய கார்களுக்கு போட்டியாக மஹிந்திரா மராஸ்ஸோ களமிறக்கப்பட்டுள்ளது.
மஹிந்திரா மராஸ்ஸோ காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.


Click it and Unblock the Notifications