இந்தியாவில் பிஎஸ் 6 எஞ்சின் விதிக்கு மாறும் புதிய மாருதி ஆல்டோ கார்: முழு தகவல்கள்..!!

இந்தியாவில் பிஎஸ் 6 எஞ்சின் விதிக்கு மாறும் புதிய மாருதி ஆல்டோ கார்; விலை, சிறப்பம்சங்கள் உள்ளிட்ட முழு தகவல்கள்..!!

By Azhagar

உலகளவில் அதிக விற்பனை திறன் எட்டும் மாருதி சுஸுகி கார்களில் ஆல்டோ தான் முதலிடத்தில் உள்ளது. இதுவரை சுமார் 35 லட்சத்திற்கும் அதிகமான ஆல்டோ கார்களை அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

பிஎஸ் 6 விதிக்கு மாறும் புதிய மாருதி ஆல்டோ கார்; முழு தகவல்கள்..!!

பிஎஸ்4 கொள்கையில் இயங்கும் 800 சிசி மற்றும் 1000 சிசி எஞ்சின்களில் வெளிவரும் இந்த கார், இந்தியாவின் ஹேட்ச்பேக் கார் சந்தையில் முன்னணியில் உள்ளது.

பிஎஸ் 6 விதிக்கு மாறும் புதிய மாருதி ஆல்டோ கார்; முழு தகவல்கள்..!!

வாகன எஞ்சின்கள் பிஎஸ் 6 விதியின் கீழ் இயங்கும் புதிய உத்தரவை மத்தியரசு பிறப்பித்துள்ளது. இதற்கு 2020ம் ஆண்டு வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ் 6 விதிக்கு மாறும் புதிய மாருதி ஆல்டோ கார்; முழு தகவல்கள்..!!

தற்போது காலக்கெடு நெருங்கி வருவதால், மாருதி சுஸுகி ஆல்டோ காரில் பிஎஸ்6 விதியின் கீழ் இயங்கும் எஞ்சினை பொருத்துவதற்கான பணியை மேற்கொண்டு வருகிறது.

பிஎஸ் 6 விதிக்கு மாறும் புதிய மாருதி ஆல்டோ கார்; முழு தகவல்கள்..!!

இதுப்பற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா 2020 ஏப்ரல் முதல் பிஎஸ் 6 எஞ்சின் பெற்ற ஆல்டோ கார்கள் விற்பனைக்கு வரும் என மாருதி சுஸுகியின் மூத்த நிர்வாக அதிகாரி ஆர்.எஸ். கால்சி கூறியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

பிஎஸ் 6 விதிக்கு மாறும் புதிய மாருதி ஆல்டோ கார்; முழு தகவல்கள்..!!

ஆல்டோவின் 800சிசி மற்றும் 1000சிசி திறன் பெற்ற பெட்ரோல் எஞ்சின்கள் பிஎஸ் 6 விதியில் இயங்கும். இதன் காரணமாக கார்பன் நைட்ரஸ் ஆக்சைடு நச்சுவாயு வெளியேறும் அளவும் மேலும் குறையும்.

பிஎஸ் 6 விதிக்கு மாறும் புதிய மாருதி ஆல்டோ கார்; முழு தகவல்கள்..!!

ஆல்டோ காரில் பிஎஸ் 6 எஞ்சின் பொருத்தப்பட்ட பிறகு, மாருதி சுஸுகி தனது அனைத்து மாடல் கார்களிலும் பிஎஸ் 6 எஞ்சின் விதியை அமல்படுத்தும் முயற்சியில் ஈடுபடும் என தெரிகிறது.

பிஎஸ் 6 விதிக்கு மாறும் புதிய மாருதி ஆல்டோ கார்; முழு தகவல்கள்..!!

தவிர தற்போது விற்பனையாகும் விலையிலிருந்து பிஎஸ் 6 விதியின் கீழ் இயங்கும் புதிய ஆல்டோ கார்களின் விலை ரூ. 10, 000 முதல் ரூ. 20,000 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பிஎஸ் 6 விதிக்கு மாறும் புதிய மாருதி ஆல்டோ கார்; முழு தகவல்கள்..!!

இந்தியாவில் விற்பனையாகும் மாருதி சுஸுகி ஆல்டோ கார்கள் ரூ. 2.51 லட்சம் ஆரம்ப விலையில் தொடங்கி ரூ. 4.19 லட்சம் வரை விற்பனையில் உள்ளது. இங்கு விலை அனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் மதிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

பிஎஸ் 6 விதிக்கு மாறும் புதிய மாருதி ஆல்டோ கார்; முழு தகவல்கள்..!!

தொடர்ந்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு மாருதி சுஸுகி நிர்வாகி ஆர்.எஸ். கல்சி தெரிவித்துள்ள தகவலில் ஆல்டோ காரில் மின்சார திறன் பெற்ற மாடல் வெளிவராது என தெரிவித்துள்ளார்.

பிஎஸ் 6 விதிக்கு மாறும் புதிய மாருதி ஆல்டோ கார்; முழு தகவல்கள்..!!

ஆல்டோ காரை மின்சார ஆற்றலில் தயாரிக்கும் போது, அதனுடைய மொத்த கட்டமைப்புமே புதுமையாக மாற்றவேண்டும். இதற்கென மாருதி சுஸுகி பெரிய தொகையை ஒதுக்க நேரிடும்.

பிஎஸ் 6 விதிக்கு மாறும் புதிய மாருதி ஆல்டோ கார்; முழு தகவல்கள்..!!

மேலும், மாருதி சுஸுகி 2020ம் ஆண்டின் புதிய மின்சார கார் செக்மென்டை இந்தியாவில் வெளியிடுகிறது.

இவ்வேளையில் ஆல்டோ கார் மின்சார ஆற்றலில் வெளியிடுவதை பெரிய செலவீனமாக அந்நிறுவனம் கருதுகிறது.

பிஎஸ் 6 விதிக்கு மாறும் புதிய மாருதி ஆல்டோ கார்; முழு தகவல்கள்..!!

2000ம் ஆண்டில் இந்தியாவில் முதன்முறையாக கால்பதித்த ஆல்டோ கார் தொடர்ந்து 14 ஆண்டுகளாக இந்தியாவின் என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தியது.

பிஎஸ் 6 விதிக்கு மாறும் புதிய மாருதி ஆல்டோ கார்; முழு தகவல்கள்..!!

மாருதி சுஸுகி ஆல்டோ காரின் 800சிசி எஞ்சின் திறன் பெற்ற 47 பிஎச்பி பவர் மற்றும் 69 என்.எம் டார்க் திறனை வழங்கும். இதில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

பிஎஸ் 6 விதிக்கு மாறும் புதிய மாருதி ஆல்டோ கார்; முழு தகவல்கள்..!!

அதேபோல 1000சிசி பெட்ரோல் எஞ்சினை பெற்ற மாடல் 67 பிஎச்பி பவர் மற்றும் 90 என்.எம் டார்க் திறனை வழங்கும். இது 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

பிஎஸ் 6 விதிக்கு மாறும் புதிய மாருதி ஆல்டோ கார்; முழு தகவல்கள்..!!

மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு உலகளவில் அதிகமான விற்பனை திறனை வழங்கும் மாடலாக இன்றும் இருப்பது ஆல்டோ ஹேட்ச்பேக் கார் தான்.

இதை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள, ஆல்டோ காருக்கு பிஎஸ் 6 விதியை பெற்ற எஞ்சினை பொருத்தும் மாருதி சுஸுகியின் முயற்சி வரவேற்பையே பெற்று தரும்.

Most Read Articles
English summary
Read in Tamil: BS VI Compliant New Maruti Alto Launch In India Expected Price, Specifications. click for More...
Story first published: Monday, March 5, 2018, 13:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X