புதிய மாருதி சியாஸ் காரின் அறிமுக தேதி விபரம் வெளியானது!

வரும் ஆகஸ்ட் 6ந் தேதி புதிய மாருதி சியாஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் மாடல்களில் வருகிறது. 5

By Saravana Rajan

புதிய மாருதி சியாஸ் காரின் அறிமுக தேதி குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய மாருதி சியாஸ் காரின் அறிமுக தேதி விபரம் வெளியானது!

மிட்சைஸ் கார் மார்க்கெட்டில் முன்னிலை வகிக்கும் மாருதி சியாஸ் கார் ஹூண்டாய் வெர்னா மற்றும் ஹோண்டா சிட்டி கார்களால் கடும் போட்டியை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், போட்டியாளர்கள் தரும் நெருக்கடியை சமாளிக்கும் விதமாக, வடிவமைப்பில் சிறிய மாறுதல்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் மாருதி சியாஸ் கார் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய மாருதி சியாஸ் காரின் அறிமுக தேதி விபரம் வெளியானது!

இந்த புதிய மாடல் பண்டிகை காலத்திற்கு முன்னதாக வந்துவிடும் என்று ஏற்கனவே நாம் கூறி இருக்கும் நிலையில், இந்த கார் வரும் ஆகஸ்ட் 6ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது

புதிய மாருதி சியாஸ் காரின் அறிமுக தேதி விபரம் வெளியானது!

புதிய மாருதி சியாஸ் காரின் முன்பக்க க்ரில் அமைப்பு, பம்பர் அமைப்பு மாற்றப்பட்டுள்ளது. புதிய ஹெட்லைட்டுகளுடன் எல்இடி பகல்நேர விளக்குகளும் சேர்க்கப்பட்டு இருக்கிறது. புதிய டிசைனிலான அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. புதிய சியாஸ் காரில் எல்இடி லைட்டுகள் பொருத்தப்பட்ட புதிய டெயில்லைட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பம்பரிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதிய மாருதி சியாஸ் காரின் அறிமுக தேதி விபரம் வெளியானது!

இன்டீரியரில் அதிக மாற்றம் தெரியவில்லை. உட்புறம் பிரிமியமாக இருக்கும் வகையில், மரத் தகடுகளுடன் கூடிய அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், லெதர் சீட்டுகள், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவையும் முக்கிய சிறப்பு தொழில்நுட்ப வசதிகளாக உள்ளன.

புதிய மாருதி சியாஸ் காரின் அறிமுக தேதி விபரம் வெளியானது!

புதிய மாருதி சியாஸ் காரில் முக்கிய மாற்றமாக 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுக்கு பதிலாக புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 103 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. பெட்ரோல் மாடலிலும் SHVS மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்ப வசதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புதிய மாருதி சியாஸ் காரின் அறிமுக தேதி விபரம் வெளியானது!

டீசல் மாடலில் மாற்றம் இல்லை. ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் தக்க வைக்கப்படுகிறது. புதிய மாருதி சியாஸ் காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அனைத்து வேரியண்ட்டுகளிலும் கொடுக்கப்பட இருக்கிறது. பெட்ரோல் மாடலில் ஏற்கனவே இருந்த 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுக்கு பதிலாக புதிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மாருதி சியாஸ் காரின் அறிமுக தேதி விபரம் வெளியானது!

புதுப்பொலிவுடன் வரும் புதிய மாருதி சியாஸ் கார் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறந்த தேர்வாக அமையும் விதத்தில் பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களுடன் வர இருக்கிறது. ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, டொயோட்டா யாரிஸ், ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ மற்றும் ஸ்கோடா ரேபிட் கார்களுக்கு நேரடி போட்டியாக களமிறங்க உள்ளது.

Source: zigwheels

Most Read Articles
English summary
India's leading car maker Maruti Suzuki has been testing the 2018 Ciaz facelift for quite some time on Indian roads. Now, ZigWheels reports that the 2018 Maruti Ciaz facelift will be launched in the Indian market on August 6, 2018. The new Ciaz will feature cosmetic and mechanical updates.
Story first published: Saturday, July 14, 2018, 10:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X