மாருதி சியாஸ் காரில் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அறிமுகமாகிறது!

Written By:

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய புதிய மாருதி சியாஸ் கார் கடந்த மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவிலேயே பார்வைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அங்கு பார்வைக்கு வராமல் ஏமாற்றம் தந்தது.

சக்திவாய்ந்த புதிய டீசல் எஞ்சினுடன் வருகிறது மாருதி சியாஸ்!

இந்த நிலையில், புதிய மாருதி சியாஸ் கார் வரும் ஆகஸ்ட் மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. வரும் ஜூலை மாதத்தில் இருந்து புதிய மாருதி சியாஸ் காருக்கு முன்பதிவு துவங்கப்படும் என்பது இப்போது கிடைத்திருக்கும் தகவல்.

சக்திவாய்ந்த புதிய டீசல் எஞ்சினுடன் வருகிறது மாருதி சியாஸ்!

தற்போது மாருதி சியாஸ் கார் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில்,1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஃபியட் நிறுவனத்திமிருந்து சப்ளை பெற்று பொருத்தப்படுகிறது.

சக்திவாய்ந்த புதிய டீசல் எஞ்சினுடன் வருகிறது மாருதி சியாஸ்!

இந்த நிலையில், மாருதி சியாஸ் காரின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு விடை கொடுக்க மாருதி முடிவு செய்திருக்கிறது. புதிய சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சக்திவாய்ந்த புதிய டீசல் எஞ்சினுடன் வருகிறது மாருதி சியாஸ்!

வெளிப்புறம் மற்றும் உட்புற வடிவமைப்பில் மாற்றங்களுடன் புதிய மாருதி சியாஸ் கார் விற்பனைக்கு வர இருக்கிறது. தற்போது ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஆனால், புதிய மாடலின் விலை சற்றே அதிகரிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.

சக்திவாய்ந்த புதிய டீசல் எஞ்சினுடன் வருகிறது மாருதி சியாஸ்!

2014ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுவரை எந்தவொரு மாற்றமும் இல்லாமல் மாருதி சியாஸ் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய ஹோண்டா சிட்டி மற்றும் புதிய ஹூண்டாய் வெர்னா கார்களின் வரவால் மாருதி சியாஸ் காருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

சக்திவாய்ந்த புதிய டீசல் எஞ்சினுடன் வருகிறது மாருதி சியாஸ்!

டொயோட்டா நிறுவனம் யாரிஸ் செடான் காரையும் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. இதனை போக்கிக் கொள்ளும் விதத்தில் வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்டு வருகிறது மாருதி சியாஸ்.

சக்திவாய்ந்த புதிய டீசல் எஞ்சினுடன் வருகிறது மாருதி சியாஸ்!

போட்டி அதிகரித்தாலும், மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வரும் புதிய மாருதி சியாஸ் கார் நிச்சயம் வாடிக்கையாளர்களிடம் சிறப்பான வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Maruti Suzuki was expected to unveil the facelifted Ciaz sedan at Auto Expo 2018. Instead, the carmaker chose to focus on the launch of the new Maruti Swift.
Story first published: Friday, March 2, 2018, 11:47 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark