புதிய மாருதி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் டீசர் வெளியீடு!!

வடிவமைப்பில் மாற்றங்கள், கூடுதல் சிறப்பம்சங்களுடன் கூடிய புதிய மாருதி சியாஸ் கார் இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் வர இருக்கும் கார் மாடல்களில் முக்கியமான மாடலாக கருதப்படுகிறது. இந்த நிலையில், தற்போது வி

By Saravana Rajan

மாருதி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதனால், இந்த கார் கூடிய விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.

புதிய மாருதி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் டீசர் வெளியீடு!!

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் மாருதி சியாஸ் கார் விற்பனையில் முன்னிலை வகிக்கிறது. ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, டொயோட்டா யாரிஸ் போன்ற போட்டியாளர்களால் இருக்கும் நெருக்கடியை தவிர்த்துக் கொள்வதற்காக சியாஸ் காருக்கு புதுப்பொலிவு கொடுத்துள்ளது மாருதி கார் நிறுவனம்.

புதிய மாருதி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் டீசர் வெளியீடு!!

வடிவமைப்பில் மாற்றங்கள், கூடுதல் சிறப்பம்சங்களுடன் கூடிய புதிய மாருதி சியாஸ் கார் இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் வர இருக்கும் கார் மாடல்களில் முக்கியமான மாடலாக கருதப்படுகிறது. இந்த நிலையில், தற்போது விற்பனைக்கு விரைவில் வருவதை குறிப்பால் உணர்த்தும் விதத்தில், புதிய சியாஸ் காரின் டீசரை மாருதி நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

புதிய மாருதி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் டீசர் வெளியீடு!!

அந்த டீசரில் ஹெட்லைட் மற்றும் க்ரில் அமைப்பில் இருக்கும் மாற்றங்களை தெளிவாக காண முடிகிறது. புதிய ஹெட்லைட் அமைப்பு, எல்இடி பகல்நேர விளக்குகள், தேன்கூடு வடிவ வில்லைகளுடன் கூடிய புதிய க்ரில் அமைப்பு இடம்பெற்றிருக்கிறது. புதிய அலாய் வீல்கள், பின்புற டெயில் லைட் க்ளஸ்ட்டரின் டிசைன் மாற்றங்கள் முக்கியமானதாக இருக்கும். இது ஃபேஸ்லிஃப்ட் என்பதால் டிசைனில் பெரிய மாற்றங்கள் இல்லை.

புதிய மாருதி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் டீசர் வெளியீடு!!

இந்த காரில் புத்தம் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

புதிய மாருதி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் டீசர் வெளியீடு!!

இதுவரை டீசல் மாடலில் மட்டுமே கொடுக்கப்பட்ட சுஸுகி ஹைப்ரிட் வெஹிக்கிள் சிஸ்டம் என்ற மைக்ரோ ஹைப்ரிட் தொழில்நுட்பம் தற்போது இந்த புதிய பெட்ரோல் மாடலிலும் கொடுக்கப்பட இருக்கிறது. இது அதிக எரிபொருள் சிக்கனத்தையும், குறைவான மாசு உமிழ்வு திறனையும் காருக்கு வழங்கும்.

புதிய மாருதி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் டீசர் வெளியீடு!!

டீசல் மாடலில் 1.5 லிட்டர் எஞ்சின் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் தக்க வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

புதிய மாருதி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் டீசர் வெளியீடு!!

புதிய மாருதி சியாஸ் காரில் மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்பட பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகள் இருக்கும். ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற அடிப்படை பாதுகாப்பு அம்சங்களும் அனைத்து வேரியண்ட்டுகளிலும் இடம்பெற்றிருக்கும்.

அடுத்த மாதம் முதல் பாதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா யாரிஸ், ஹோண்டா சிட்டி, ஸ்கோடா ரேபிட், ஹூண்டாய் வெர்னா, ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, July 23, 2018, 11:20 [IST]
English summary
Maruti Suzuki is all set to launch the Ciaz facelift in the Indian market and ahead of that the updated C-segment sedan has been teased. The 2018 Maruti Ciaz facelift has been teased in a new TVC that reveals the front end of the facelifted avatar of the premium sedan.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+