மாருதி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய பெட்ரோல் எஞ்சின் அறிமுகமாகிறது!!

மாருதி சியாஸ் காரில் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய எஞ்சின் 103.2 பிஎச்பி பவரையும், 138.4 எனஅஎம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும்

By Saravana Rajan

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய மாருதி சியாஸ் கார் ஒரு சில மாதங்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. தற்போது தீவிர சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், இந்த காரில் புதிய பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருப்பது குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது.

 மாருதி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய பெட்ரோல் எஞ்சின் அறிமுகமாகிறது!!

விற்பனையில் இருக்கும் மாருதி சியாஸ் காரில் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 91.2 பிஎச்பி பவரையும், 130 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கிறது. போட்டி மிகுந்துவிட்ட நிலையில், கூடுதல் சக்திவாய்ந்த எஞ்சின் அவசியமாகி இருக்கிறது.

 மாருதி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய பெட்ரோல் எஞ்சின் அறிமுகமாகிறது!!

இதன்பொருட்டு, புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனில் புதிய மாருதி சியாஸ் கார் வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 103.2 பிஎச்பி பவரையும், 138.4 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும்.

 மாருதி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய பெட்ரோல் எஞ்சின் அறிமுகமாகிறது!!

தற்போதைய 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சினைவிட புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கூடுதலாக 12 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும். இந்த எஞ்சின் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வர இருக்கிறது.

 மாருதி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய பெட்ரோல் எஞ்சின் அறிமுகமாகிறது!!

இந்தோனேஷியாவில் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்ட புதிய மாருதி எர்டிகா காரில் பயன்படுத்தப்படும் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் இந்த புதிய சியாஸ் காரிலும் பயன்படுத்தப்பட இருக்கிறது.

 மாருதி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய பெட்ரோல் எஞ்சின் அறிமுகமாகிறது!!

டீசல் மாடலிலும் 1.5 லிட்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், தொடர்ந்து ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினை பயன்படுத்த மாருதி முடிவு செய்திருப்பதாக அண்மைத் தகவல் தெரிவிக்கிறது.

 மாருதி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய பெட்ரோல் எஞ்சின் அறிமுகமாகிறது!!

1.3 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சசமாக 88.5 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். வழக்கம்போல் டீசல் மாடலில் ஹைப்ரிட் தொழில்நுட்ப வசதி கொடுக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டும் வர இருக்கிறது.

 மாருதி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய பெட்ரோல் எஞ்சின் அறிமுகமாகிறது!!

டிசைனில் மாற்றங்கள் செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் வருகிறது மாருதி சியாஸ் கார். மேலும், மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் கூடுதல் வசதிகளுடன் புதிய மாருதி சியாஸ் கார் போட்டியாளர்களை வென்று வாடிக்கையாளர் மனதில் இடம்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 மாருதி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய பெட்ரோல் எஞ்சின் அறிமுகமாகிறது!!

வரும் ஆகஸ்ட் மாதம் புதிய மாருதி சியாஸ் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மற்றும் டொயோட்டா யாரிஸ் கார்களுக்கு நேர் போட்டியாக இருக்கும்.

Source: Autocarindia

Article Published On: Saturday, April 28, 2018, 14:15 [IST]
English summary
The new Maruti Ciaz facelift is expected to launch sometime around August 2018. The new Ciaz facelift, once launched might get a larger petrol engine than the one currently in use.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+