2018 மாருதி எர்டிகா கார் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்!!

புதிய மாருதி எர்டிகா காரின் டிசைன் முற்றிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. சக்திவாய்ந்த புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்தோனேஷியாவில் நடக்கும் ஆட்டோமொபைல் கண்காட்சியில் புத்தம் புதிய மாருதி எர்டிகா கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அந்த கார் சுஸுகி பிராண்டில் அங்கு காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இன்னும் சில மாதங்களில் இந்தியா வர இருக்கும் இந்த எர்டிகா காரின் டாப்- 10 சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய பிளாட்ஃபார்ம்

புதிய பிளாட்ஃபார்ம்

மாருதி நிறுவனத்தின் புதிய கார்கள் உருவாக்கப்பட்டு வரும் ஹார்ட்டெக் என்ற புதிய பிளாட்ஃபார்மில் இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனால், எடை குறைந்திருப்பதுடன் அதிக வலுவான கட்டமைப்பை பெற்றிருக்கிறது. இந்தியாவில் விரைவில் அமலுக்கு வர இருக்கும் புதிய கிராஷ் டெஸ்ட் பாதுகாப்பு தர சோதனைகளுக்கு ஈடுகொடுக்கும் பாதுகாப்பு அம்சங்களையும் பெற்றிருக்கிறது.

இன்னோவா சாயல்

இன்னோவா சாயல்

பானட் மற்றும் முகப்பு விஷயங்கள் முற்றிலும் மாற்றப்பட்டு இருக்கிறது. பானட் உள்ளிட்ட பகுதிகள் இன்னோவா காரின் சாயலையும் பார்க்க முடிகிறது. முகப்பு க்ரில் அமைப்பு முற்றிலும் க்ரோம் பட்டைகளுடன் பின்னப்பட்டு வசீகரிக்கிறது. பம்பர் பகுதியும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை பெற்றிருக்கிறது. டபுள் பேரல் புரொஜெக்டர் ஹெட்லைட் மற்றும் எல்இடி பகல்நேர விளக்குகள் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறது.

 2018 மாருதி எர்டிகா காரின் டாப் -10 சிறப்பம்சங்கள்!!

பக்கவாட்டு டிசைனும் இன்னோவா க்ரிஸ்ட்டா போன்று டிசைன் தாத்பரியங்களை காண முடிகிறது. குறிப்பாக, டி பில்லரின் டிசைன் அப்படியே காட்சி தருகிறது. புதிய எர்டிகா காரில் 15 அங்குல அலாய் வீல்கள் இடம்பெற்றுள்ளன. இன்னும் கூடுதல் விட்டமுடைய சக்கரங்கள் இருந்தால் எர்டிகாவின் கம்பீரம் இன்னும் எடுப்பாக இருந்திருக்கும் என்பது பரவலான கருத்தாக இருக்கிறது.

 2018 மாருதி எர்டிகா காரின் டாப் -10 சிறப்பம்சங்கள்!!

தற்போது விற்பனையில் இருக்கும் எர்டிகா காரின் டெயில் லைட் க்ளஸ்ட்டர் காருக்கு பொருத்தமாக இல்லாமல் அளவில் சிறியதாக தோற்றம் அளிப்பதாக குறை தெரிவிக்கப்பட்டது. இதனை களையும் விதமாக, புதிய எர்டிகா காரில் வி வடிவிலான டெயில் லைட் க்ளஸ்ட்டர் பெரிய அளவில் மாறி இருக்கிறது. வால்வோ எக்ஸ்சி60 மற்றும் வி90 க்ராஸ் கார்களை போல இது ஒத்திருக்கிறது.

மேம்பட்ட இடவசதி

மேம்பட்ட இடவசதி

புதிய மாருதி எர்டிகா கார் நீளத்தில் 99 மிமீ வரையிலும், அகலத்தில் 40 மிமீ வரையிலும், உயரத்தில் 5 மிமீ வரையிலும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், உட்புற இடவசதி மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. குறிப்பாக, பூட் ரூம் இடவசதி பெரும் குறை. 135 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் ரூம் இடவசதி இப்போது 153 லிட்டர் கொள்திறன் கொண்டதாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

 சற்று பெரிய பூட்ரூம்

சற்று பெரிய பூட்ரூம்

புதிய மாருதி எர்டிகா காரில் நடுவில் இருக்கும் இருக்கையை 60:40 என்ற விகிதத்தில் மடக்க முடியும். மூன்றாவது வரிசை இருக்கையை 50:50 என்ற அளவில் மடக்கிக் கொண்டு பொருட்கள் வைப்பதற்கான இடவசதியை அதிகரித்துக் கொள்ள முடியும். இதன்மூலமாக, பொருட்கள் வைத்து எடுத்துச் செல்வதற்கு 800 லிட்டர் கொள்திறன் கொண்ட இடவசதியை அதிகபட்சமாக பெறலாம்.

புதிய டேஷ்போர்டு

புதிய டேஷ்போர்டு

பழைய ஸ்விஃப்ட், டிசையர் கார்களின் டேஷ்போர்டு அமைப்புதான் தற்போதைய எர்டிகா மாடலிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், புதிய மாருதி எர்டிகா காரில் டேஷ்போர்டு முற்றிலும் புதியதாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. பீஜ் வண்ண டேஷ்போர்டில் ஃபாக்ஸ்வுட் மரத் தகடுகளுடன் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கிறது.

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

டேஷ்போர்டின் நடுவே குட்டி டிவி போன்ற 6.8 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் பொருத்தப்பட்டு இருக்கிறது. புளூடூத் வசதி, ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும் வசதியுடன் வருகிறது.

 புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்

புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்

தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங் வீலும் புதிது. ஸ்டீயரிங் வீலில் லெதர் உறை மற்றும் அலங்கார மரத்தகடுகள் பதிக்கப்பட்டு அழகு கூட்டப்பட்டு இருக்கிறது. புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் இரண்டு டயல்களுக்கும் நடுவில் தகவல்களை அளிக்கும் எம்ஐடி என்ற முக்கியத் தகவல்களை காட்டும் டிஜிட்டல் திரை கொடுக்கப்பட்டு இருக்கிறது.

 2018 மாருதி எர்டிகா காரின் டாப் -10 சிறப்பம்சங்கள்!!

தற்போதைய மாடல் போன்றே ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, புஷ் பட்டன் ஸ்டார்ட் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன. ரூஃப் மவுண்ட் ஏசி சிஸ்டமும் தக்க வைக்கப்பட்டு இருக்கிறது. இதனால், மூன்று வரிசை பயணிகளுக்கும் சிறப்பான குளிர்ச்சியை உணர முடியும்.

 2018 மாருதி எர்டிகா காரின் டாப் -10 சிறப்பம்சங்கள்!!

புதிய மாருதி எர்டிகா காரில் முன்புற பயணி மற்றும் ஓட்டுனருக்கு மட்டும் இரண்டு ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. பயணிகளுக்கான கூடுதல் ஏர்பேக் இல்லை. கார் அதிக நிலைத்தன்மையுடன் செல்ல உதவும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், அனைத்து சக்கரங்களுக்கும் பிரேக் பவரை சரியான விகிதத்தில் பிரித்தனுப்பும் இபிடி மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. ரியர் பார்க்கிங் சென்சாரும் வழங்கப்படுகிறது.

 புதிய பெட்ரோல் எஞ்சின்

புதிய பெட்ரோல் எஞ்சின்

தற்போதைய மாடலில் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும் நிலையில், புதிய எர்டிகா காரில் புத்தம் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 102 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். இதனால், சக்திவாய்ந்த பெட்ரோல் மாடலாக மேம்பட்டிருக்கிறது.

 கியர்பாக்ஸ் ஆப்ஷன்

கியர்பாக்ஸ் ஆப்ஷன்

தற்போதைய மாடலில் இருக்கும் அதே 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்தான் தொடர்கிறது. இந்தியாவில் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.

கிரவுண்ட் கிளியரன்ஸ்

கிரவுண்ட் கிளியரன்ஸ்

தற்போதைய மாருதி எர்டிகா கார் 185 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றிருக்கும் நிலையில், புதிய மாருதி எர்டிகா காரின் கிரவுண்ட் க்ளியரன்ஸ் 5 மிமீ குறைக்கப்பட்டு 180 மிமீ ஆக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், டர்னிங் ரேடியஸ் 5.2 மீட்டர் என்ற அளவிலேயே தக்க வைக்கப்பட்டு இருக்கிறது.

வெற்றிகரமான மாடல்

வெற்றிகரமான மாடல்

2011ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட எர்டிகா கார் இதுவரை 7 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கின்றன. இந்த நிலையில், இடைசொருகலாக புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட மாடல் மட்டும் அறிமுகமான நிலையில், தற்போது முற்றிலும் புதிய மாடலாக எர்டிகா தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

நிறைவான மாடல்

நிறைவான மாடல்

வழக்கம்போல் குறைவான பட்ஜெட்டில் நிறைவான அம்சங்களை பெற்றிருக்கும் 7 சீட்டர் எம்பிவி காராக இந்தியர்களை வசீகரிக்கும் என்று ஆணித்தரமாக நம்பலாம். சற்றே கூடுதல் விலையில் புதிய மாருதி எர்டிகா விற்பனைக்கு வர இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, April 21, 2018, 16:36 [IST]
English summary
Suzuki has unveiled the next-gen Ertiga MPV at the Indonesia International Motor Show 2018. The new Maruti Ertiga 2018 features an all-new design language as compared to the outgoing model and looks more premium and elegant.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+