புதிய மாருதி எர்டிகா காருக்கு அமோக வரவேற்பு: காத்திருப்பு காலமும் அதிகரிப்பு!
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 10,000 பேர் புதிய மாருதி எர்டிகா காருக்கு முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்பதிவு உயர்ந்து வருவதால், தற்போது இந்த புதிய மாடலுக்கான காத்திருப்ப
புதிதாக அறிமுகமாகும் மாருதி கார்களுக்கான வரவேற்பும், முன்பதிவும் கார் மார்க்கெட்டையே திரும்பி பார்க்க வைப்பது வழக்கம். அந்த வகையில், நேற்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய மாருதி எர்டிகா காருக்கான முன்பதிவு ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 10,000 பேர் புதிய மாருதி எர்டிகா காருக்கு முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்பதிவு உயர்ந்து வருவதால், தற்போது இந்த புதிய மாடலுக்கான காத்திருப்பு காலம் வேரியண்ட் மற்றும் வண்ணத்தை பொறுத்து குறைந்தது 4 வாரங்கள் முதல் 8 வாரங்கள் வரை நீண்டுள்ளது.

புதிய மாருதி எர்டிகா காருக்கு ரூ.11,000 முன்பணத்துடன் டீலர்களில் முன்பதிவு ஏற்கப்பட்டு வருகிறது. புதிய மாருதி எர்டிகா காரின் டீசல் மாடலைவிட, பெட்ரோல் மாடலுக்கு அதிக வரவேற்பு இருப்பதாக டீலர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான முக்கிய காரணம், 103 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருப்பதோடு, மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இதுவே, பெட்ரோல் மாடலுக்கு அதிக முன்பதிவை பெற்றுத் தருவதற்கு காரணம். எதிர்காலத்தில் டீசல் கார்களுக்கு 10 ஆண்டுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது என்ற தடை விதிக்கப்பட்டால், சிக்கலாகிவிடும். ஆனால், டீசல் மாடல்களுக்கான வரவேற்பும் குறிப்பிடத்தக்க அளவிலேயே இருந்து வருகிறது.

பழைய மாடலைவிட அதிக இடவசதி, தொழில்நுட்ப சிறப்பம்சங்கள் மற்றும் சரியான விலை தேர்வில் வந்துள்ளதால், வழக்கம்போல் புதிய எர்டிகா காருக்கு வரவேற்பு எதிர்பார்த்தது போலவே அமைந்துள்ளது. இதில், ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

புதிய மாருதி எர்டிகா காரில் டூயல் ஏர்பேக்குகள், இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக கொடுக்கப்படுகிறது. இதுதவிர, வேரியண்ட்டை பொறுத்து கூடுதல் பாதுகாப்பு வசதிகளை பெறும் வாய்ப்பும் இருக்கிறது.
Recommended Video


புதிய மாருதி எர்டிகா கார் ரூ.7.44 லட்சம் முதல் ரூ.10.90 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. மஹிந்திரா மராஸ்ஸோ மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா உள்ளிட்ட போட்டியாளர்களைவிட மிக சவாலான விலையில் தனது இடத்தை தக்க வைக்கிறது புதிய மாருதி எர்டிகா.


Click it and Unblock the Notifications








