இன்னோவா கிரிஸ்டா, மராஸ்ஸோவுக்கு போட்டியாக கம்பீரமாக வருகிறது புதிய மாருதி எர்டிகா.. புக்கிங் ஓபன்

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா மற்றும் மஹிந்திரா மராஸ்ஸோவுக்கு போட்டியாக களமிறங்கும் புதிய மாருதி சுஸுகி எர்டிகா காருக்கான புக்கிங் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது.

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா மற்றும் மஹிந்திரா மராஸ்ஸோவுக்கு போட்டியாக களமிறங்கும் புதிய மாருதி சுஸுகி எர்டிகா காருக்கான புக்கிங் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது.

புதிய எர்டிகா கார் அறிமுக தேதி வெளியானது... மாருதி சுஸுகி டீலர்ஷிப்களில் புக்கிங் தொடக்கம்...

இரண்டாவது தலைமுறை எர்டிகா (2nd-gen Ertiga) காரை இந்திய மார்க்கெட்டில் வருகிற நவம்பர் 21ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்துள்ளது. இது எம்பிவி (MPV) வகையை சேர்ந்த கார் ஆகும்.

புதிய எர்டிகா கார் அறிமுக தேதி வெளியானது... மாருதி சுஸுகி டீலர்ஷிப்களில் புக்கிங் தொடக்கம்...

மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய எர்டிகா கார் புத்தம் புதிய டிசைனுடன் அறிமுகம் செய்யப்படவுள்ளது. உட்புறமும், வெளிப்புறமும் இதன் ஸ்டைல் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஏராளமான கூடுதல் வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

புதிய எர்டிகா கார் அறிமுக தேதி வெளியானது... மாருதி சுஸுகி டீலர்ஷிப்களில் புக்கிங் தொடக்கம்...

புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் புதிய மாருதி சுஸுகி எர்டிகா கார் விற்பனைக்கு வருகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 103 பிஎச்பி பவர் மற்றும் 138 என்எம் டார்க் திறனை உருவாக்கும் வல்லமை வாய்ந்தது.

புதிய எர்டிகா கார் அறிமுக தேதி வெளியானது... மாருதி சுஸுகி டீலர்ஷிப்களில் புக்கிங் தொடக்கம்...

சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட சியாஸ் செடான் காரில் பொருத்தப்பட்டுள்ள அதே இன்ஜின்தான் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் உடனும் புதிய மாருதி சுஸுகி எர்டிகா கார் விற்பனை செய்யப்படவுள்ளது.

புதிய எர்டிகா கார் அறிமுக தேதி வெளியானது... மாருதி சுஸுகி டீலர்ஷிப்களில் புக்கிங் தொடக்கம்...

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவர் மற்றும் 200 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் ட்யூன் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என 2 இன்ஜின் ஆப்ஷன்களிலும், மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஸ்மார்ட் மைல்டு-ஹைபிரிட் டெக்னாலஜி இடம்பெற்றிருக்கும்.

புதிய எர்டிகா கார் அறிமுக தேதி வெளியானது... மாருதி சுஸுகி டீலர்ஷிப்களில் புக்கிங் தொடக்கம்...

முன்னதாக புதிய எர்டிகா காரில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படும் என யூகங்கள் கிளம்பின. ஆனால் அந்த யூகங்கள் பொய்யாக்கப்பட்டுள்ளன. சந்தையை விட்டு வெளியேறவுள்ள பழைய மாடலில் இடம்பெற்றிருக்கும் அதே 1.3 லிட்டர் டீசல் இன்ஜின்தான் புதிய மாடலிலும் வழங்கப்படவுள்ளது.

புதிய எர்டிகா கார் அறிமுக தேதி வெளியானது... மாருதி சுஸுகி டீலர்ஷிப்களில் புக்கிங் தொடக்கம்...

LXi/LDi, VXi/VDi, ZXi/ZDi மற்றும் ZXi+/ZDi+ என 4 பெட்ரோல் மற்றும் 4 டீசல் வேரியண்ட்களில் புதிய எர்டிகா கார் விற்பனை செய்யப்படவுள்ளது. அத்துடன் பெட்ரோல் வெர்ஷனில், VXi மற்றும் ZXi என்ற 2 ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட்களும் விற்பனை செய்யப்படவுள்ளன.

புதிய எர்டிகா கார் அறிமுக தேதி வெளியானது... மாருதி சுஸுகி டீலர்ஷிப்களில் புக்கிங் தொடக்கம்...

சில்வர், ஒயிட், ப்ளூ, க்ரே மற்றும் புதிய பேர்ல் மெட்டாலிக் அப்பர்ன் ரெட் என மொத்தம் 5 வண்ணங்களில் புதிய எர்டிகா கார் கிடைக்கும். அத்துடன் புதிய எர்டிகா காரில், ஏராளமான வசதிகளையும் மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கியுள்ளது.

புதிய எர்டிகா கார் அறிமுக தேதி வெளியானது... மாருதி சுஸுகி டீலர்ஷிப்களில் புக்கிங் தொடக்கம்...

இதில், எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், எல்இடி டிஆர்எல்கள், பெரிய 16 இன்ச் அலாய் வீல்கள், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ உடனான டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை.

புதிய எர்டிகா கார் அறிமுக தேதி வெளியானது... மாருதி சுஸுகி டீலர்ஷிப்களில் புக்கிங் தொடக்கம்...

புதிய மாருதி சுஸுகி எர்டிகா கார், ட்யூயல் டோன் இன்டீரியர்களுடன் வரவுள்ளது. அத்துடன் இதில் புதிய டேஷ்போர்டும் இடம்பெறுகிறது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் புதிய எர்டிகா கார் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய எர்டிகா கார் அறிமுக தேதி வெளியானது... மாருதி சுஸுகி டீலர்ஷிப்களில் புக்கிங் தொடக்கம்...

இந்த சூழலில் ஆல் நியூ எர்டிகா காருக்கான புக்கிங் நாடு முழுவதும் உள்ள மாருதி சுஸுகி டீலர்ஷிப்களில் தற்போது தொடங்கியுள்ளது. ரூ.11 ஆயிரம் முன் பணம் செலுத்தி புதிய எர்டிகா காருக்கு புக்கிங் செய்து கொள்ளலாம்.

புதிய எர்டிகா கார் அறிமுக தேதி வெளியானது... மாருதி சுஸுகி டீலர்ஷிப்களில் புக்கிங் தொடக்கம்...

எம்பிவி செக்மெண்ட்டில் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா மற்றும் சமீபத்தில் அறிமுகமான மஹிந்திரா மராஸ்ஸோ உள்ளிட்ட கார்களுக்கு புதிய மாருதி சுஸூகி எர்டிகா கார் கடுமையான போட்டியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி சுஸுகி எர்டிகா காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

Article Published On: Wednesday, November 14, 2018, 17:42 [IST]
English summary
New Maruti Suzuki Ertiga India Launch on November 21: Bookings Commenced. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+