ஹேட்ச்பேக் கார்களுக்கு இணையான மைலேஜ்... கலக்க வரும் புது எர்டிகா!

அராய் சான்றுபடி, புதிய மாருதி எர்டிகா காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 19.34 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் எர்டிகா கார் லிட்டருக்கு 25.47 கிமீ மைலேஜையும் தரும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

புதிய தலைமுறை மாருதி எர்டிகா கார் இந்தியாவில் நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், இந்த புதிய மாருதி எர்டிகா காரின் பல முக்கியத் தகவல்கள் இணையதளங்களில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், புதிய எர்டிகா காரின் மைலேஜ் விபரம் சில ஹேட்ச்பேக் கார்களையே விஞ்சும் அளவுக்கு இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹேட்ச்பேக் கார்களுக்கு இணையான மைலேஜ்... கலக்க வரும் புது எர்டிகா!

பொதுவாக 7 பேர் செல்வதற்கான இருக்கை வசதியுடன் வரும் எம்பிவி மற்றும் எஸ்யூவி ரக கார்களின் மைலேஜ் குறைவாக இருப்பது இயல்பு. ஆனால், மாருதி கார்கள் மைலேஜில் கில்லி என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறது. மாருதி கார்களின் விற்பனைக்கு பெரும் வலு சேர்ப்பதில் மைலேஜ் என்பதும் முக்கிய விஷயமாக இருந்து வருகிறது.

ஹேட்ச்பேக் கார்களுக்கு இணையான மைலேஜ்... கலக்க வரும் புது எர்டிகா!

இந்த நிலையில், நாளை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் புதிய மாருதி எர்டிகா காரின் மைலேஜ் நிச்சயம் வாடிக்கையாளர்களை திக்குமுக்காட செய்யும் என்பதில் ஐயமில்லை. தற்போது விற்பனையில் உள்ள எர்டிகாவின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 17.03 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 24.52 கிமீ மைலேஜையும் தரும் என தெரிவிக்கப்பட்டது.

ஹேட்ச்பேக் கார்களுக்கு இணையான மைலேஜ்... கலக்க வரும் புது எர்டிகா!

இந்த நிலையில், அராய் அமைப்பின் சோதனை அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரங்களில், புதிய மாருதி எர்டிகா காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 19.34 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் எர்டிகா கார் லிட்டருக்கு 25.47 கிமீ மைலேஜையும் தரும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஹேட்ச்பேக் கார்களுக்கு இணையான மைலேஜ்... கலக்க வரும் புது எர்டிகா!

இதன் மூலமாக, ஹேட்ச்பேக் மற்றும் காம்பேக்ட் செடான் கார்களுக்கு இணையான எரிபொருள் செலவு கொண்ட மாடலாக இருக்கும் என்பதால் பாக்கெட்டை பதம் பார்க்காது. மேலும், தினசரி பயன்பாட்டுக்கும் அதிகம் யோசிக்க வேண்டியதில்லை. 7 சீட்டர் கார்களில் டீசல் மாடல்தான் பலரின் தேர்வாக இருக்கும்.

ஹேட்ச்பேக் கார்களுக்கு இணையான மைலேஜ்... கலக்க வரும் புது எர்டிகா!

ஆனால், புதிய மாருதி எர்டிகா காரில் பெட்ரோல் மாடலின் மைலேஜும் மிக சிறப்பாக இருப்பது குறிப்பிடத்தக்க விஷயம். மேலும், பழைய காரில் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்ட நிலையில், புதிய மாருதி எர்டிகா காரில் 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல சக்திவாய்ந்த 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

ஹேட்ச்பேக் கார்களுக்கு இணையான மைலேஜ்... கலக்க வரும் புது எர்டிகா!

பழைய மாடலைவிட புதிய எர்டிகா பெட்ரோல் மாடல் அதிக மைலேஜ் வழங்குவதற்கு மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கிறது. ஏற்கனவே, இந்த மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் டீசல் மாடலில் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், பெட்ரோல் மாடலிலும் வர இருப்பது முக்கிய விஷயம்.

ஹேட்ச்பேக் கார்களுக்கு இணையான மைலேஜ்... கலக்க வரும் புது எர்டிகா!

மைலேஜில் மட்டுமல்ல, சிறப்பான வடிவமைப்பு, அதிக இடவசதியுடன் புதிய தலைமுறை மாருதி எர்டிகா கார் வர இருக்கிறது. பழைய மாடலைவிட நீளத்தில் 99 மிமீ, அகலத்தில் 40 மிமீ, உயரத்தில் 5 மிமீ அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், உட்புற இடவசதி மேம்பட்டு இருக்கிறது.

ஹேட்ச்பேக் கார்களுக்கு இணையான மைலேஜ்... கலக்க வரும் புது எர்டிகா!

புதிய மாருதி எர்டிகா காரில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றிருக்கும். அத்துடன், ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் இடம்பெற இருக்கின்றன.

ஹேட்ச்பேக் கார்களுக்கு இணையான மைலேஜ்... கலக்க வரும் புது எர்டிகா!

ரூ.6.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா மராஸ்ஸோவுக்கு நேர் போட்டியாகவும், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு எம்பிவி ரக அடிப்படையில் போட்டியாகவும் களமிறங்குகிறது.

Source: AutocarIndia

More from DriveSpark

Article Published On: Tuesday, November 20, 2018, 19:08 [IST]
English summary
New Maruti Suzuki Ertiga Mileage Details Revealed
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+