புதிய மாருதி ஸ்விஃப்ட், டிசையர் கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன!

குறைபாடுடைய சாதனத்தை பரிசோதிப்பதற்காக புதிய மாருதி ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்கள் திரும்ப அழைக்கப்பட இருக்கின்றன. ஏர்பேக்கை கட்டுப்படுத்தும் கன்ட்ரோலர் சாதனத்தில் தொழில்நுட்ப பிரச்னை இருப்பது தெரி

By Saravana Rajan

குறைபாடுடைய சாதனத்தை பரிசோதிப்பதற்காக புதிய மாருதி ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்கள் திரும்ப அழைக்கப்பட இருக்கின்றன. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய மாருதி ஸ்விஃப்ட், டிசையர் கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன!

புதிய மாருதி ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்கள் விற்பனையில் கொடி கட்டி பறக்கின்றன. அந்தந்த செக்மென்ட்டுகளில் இரண்டு கார்களும் விற்பனையில் முன்னிலை வகிக்கின்றன. இந்த நிலையில், இந்த கார்களின் ஏர்பேக் சிஸ்டத்தில் தொழில்நுட்ப குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.

புதிய மாருதி ஸ்விஃப்ட், டிசையர் கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன!

ஏர்பேக்கை கட்டுப்படுத்தும் கன்ட்ரோலர் சாதனத்தில் தொழில்நுட்ப பிரச்னை இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால், ஏர்பேக் விரிவடைவதில் பிரச்னை ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே, குறைபாடுடைய ஏர்பேக் கன்ட்ரோலரை பரிசோதித்து மாற்றித் தருவதற்கு மாருதி கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

புதிய மாருதி ஸ்விஃப்ட், டிசையர் கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன!

கடந்த மே 7ந் தேதியிலிருந்து ஜூலை 5ம் தேதி வரை உற்பத்தி செய்யப்பட்ட குறிப்பிட்ட மாருதி ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்களில் இந்த பிரச்னை இருப்பது தெரிய வந்துள்ளது. சம்பந்தப்பட்ட கார் உரிமையாளர்களுக்கு இதுகுறித்து விரைவில் தகவல் அனுப்பப்படும்.

புதிய மாருதி ஸ்விஃப்ட், டிசையர் கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன!

பிரச்னைக்குரிய உதிரிபாகத்தை கட்டணமில்லாமல் மாற்றித் தருவதற்கு மாருதி கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அருகிலுள்ள டீலர் அல்லது மாருதி இணையதளத்தில் வின் நம்பரை கொடுத்து வாடிக்ககையாளர்கள் தங்களது கார் இந்த ரீகால் பட்டியலில் இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ளலாம்.

புதிய மாருதி ஸ்விஃப்ட், டிசையர் கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன!

இது இரண்டாவது ரீகால் அறிவிப்பு. கடந்த மே மாதம் பாதுகாப்பு குறைபாடுகளை களைவதற்காக புதிய ஸ்விஃப்ட் மற்றும் பலேனோ கார்கள் ரீகால் செய்யப்பட்டது நினைவிருக்கலாம். இது வாடிக்கையாளர்களின் நலன்கருதி செய்யப்பட்டுள்ளதாக மாருதி கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 25, 2018, 12:12 [IST]
English summary
Maruti Suzuki has issued recall notice for Swift and Dzire in India over faulty airbag controller.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+