உலகின் சிறந்த கார் விருதிற்கான இறுதிப்பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்த 2018 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்.

உலகின் சிறந்த கார் விருதிற்கான இறுதிப்பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்த 2018 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்..!!

By Azhagar

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு அறிமுகமான பின்னும் 2018 மாருதி ஸ்விஃப்ட் காருக்கான அலை அதிகமாகிக்கொண்டே வருகிறது. தற்போது மேலும் ஒரு முத்தாய்ப்பாக இந்த கார் சர்வதேச அரங்கில் பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது.

உலகின் சிறந்த கார் விருது பெறும் முனைப்பில் மாருதி ஸ்விஃப்ட்

இந்தியாவில் மாருதி ஸ்விஃப்ட் என்ற பெயரில் விற்பனையாகும் இந்த கார், சர்வதேச அளவில் பல நாடுகளில் சுஸுகி ஸ்விஃப்ட் என்ற பெயரில் விற்பனையில் உள்ளது.

ஆண்டுதோறும் நகரத்திற்கான சிறந்த காரை தேர்ந்தெடுக்க போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இதில் ’உலகத்தின் சிறந்த கார்’ என்ற விருதுப்பிரிவு மிக முக்கியமானது.

உலகின் சிறந்த கார் விருது பெறும் முனைப்பில் மாருதி ஸ்விஃப்ட்

இந்தாண்டு நடைபெறும் போட்டியில் இந்த பிரிவில் மொத்தம் 4 கார் மாடல்கள் போட்டியில் உள்ளன. அவை ஃபோர்டு ஃபியஸ்டா ஹேட்ச்பேக், ஹூண்டாய் கோனா, நிஸான் மைக்ரா புதிய தலைமுறை போலோ மற்றும் 2018 சுஸுகி ஸ்விஃப்ட் கார்.

உலகின் சிறந்த கார் விருது பெறும் முனைப்பில் மாருதி ஸ்விஃப்ட்

இந்தியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த 2018 ஆட்டோ எக்ஸ்போவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 3ம் தலைமுறை ஸ்விஃப்ட் காரை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

உலகின் சிறந்த கார் விருது பெறும் முனைப்பில் மாருதி ஸ்விஃப்ட்

ரூ. 4.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்துள்ள கார் தொடர்ந்து சரவெடி விற்பனையை பெற்று வருகிறது. இந்த காரை வாங்க பல வாடிக்கையாளர்கள்மாருதி சுஸுகி ஷோரூம்களில் குவிந்து வருகின்றனர்.

Recommended Video

New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
உலகின் சிறந்த கார் விருது பெறும் முனைப்பில் மாருதி ஸ்விஃப்ட்

2018 நகரத்தின் சிறந்த காருக்கான விருது போட்டியில், உலகத்தின் சிறந்த கார் பிரிவு ஆங்கிலத்தில் WCOTY (World Car of the Year) என்று குறிப்பிடப்படுகிறது.

உலகின் சிறந்த கார் விருது பெறும் முனைப்பில் மாருதி ஸ்விஃப்ட்

இந்த பிரிவிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து கார்களும் குறிப்பிட்ட செக்மென்ட் மற்றும் தேர்வுகளில் சரிநிகர் போட்டியாக உள்ளது.

2017ம் ஆண்டில் இதே போட்டியில் இறுதிவரை இடம்பெற சுஸுகி நிறுவனத்திற்கு பாலம் அமைத்துக்கொடுத்த மாடல் இக்னிஸ்.

உலகின் சிறந்த கார் விருது பெறும் முனைப்பில் மாருதி ஸ்விஃப்ட்

தற்போது பலருக்கும் விருப்பமான கார் செக்மென்டாக இருப்பது எஸ்யூவி என்பதால்2018 உலகின் சிறந்த காருக்கான விருதிற்கு பல்வேறு எஸ்யூவி மாடல் கார்களும் இடம்பெற்றுள்ளது.

உலகின் சிறந்த கார் விருது பெறும் முனைப்பில் மாருதி ஸ்விஃப்ட்

WCOTY 2018 விருதின் இறுதிப்பட்டியலில் ஆல்ஃபா ரோமியோ கியூலியா, பிஎம்டபுள்யூ எக்ஸ்3, கியா ஸிடிங்கர், லேன்ட் ரோவர் டிஸ்கவரி, மஸ்டா சி.எக்ஸ்-5, நிஸான் லீஃப், ரேஞ்ச் ரோவர் வேலார், டொயோட்டா கேம்ரி, ஃபோக்ஸ்வேகன் டி-ராக் மற்றும் வால்வோ எக்ஸ்.சி60 கார்கள் உள்ளன.

உலகின் சிறந்த கார் விருது பெறும் முனைப்பில் மாருதி ஸ்விஃப்ட்

குறிப்பாக ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் மீண்டும் இந்தாண்டின் WCOTY 2018 விருதிற்கான இறுதிப்பட்டியல் வரை முன்னேறியுள்ளது. இம்முறை லேண்ட் ரோவர் நிறுவனத்தின் வேலார் மற்றும் டிஸ்கவரி ஆகிய இரண்டு எஸ்யூவி கார்கள் இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

உலகின் சிறந்த கார் விருது பெறும் முனைப்பில் மாருதி ஸ்விஃப்ட்

ஒவ்வொரு ஆண்டும் வால்வோ நிறுவனத்தின் தயாரிப்புகள் WCOTY விருதிற்காக தொடர்ந்து இடம்பிடித்து வருகிறது. இந்த பட்டியலில் சர்ப்ரைஸ் அளித்தது நிஸானின் மைக்ரா கார் தான்.

உலகின் சிறந்த கார் விருது பெறும் முனைப்பில் மாருதி ஸ்விஃப்ட்

ஆடம்பர கார் மாடல்களுக்கான பிரிவில் புதிய தலைமுறை ஆடி ஏ8, பிஎம்டபுள்யூ 6 ஜிடி, லக்சஸ் எல்.எஸ், போர்ஷே கேயென் மற்றும் போர்ஷே பானமேரா ஆகிய கார் இடம்பெற்றுள்ளன.

உலகின் சிறந்த கார் விருது பெறும் முனைப்பில் மாருதி ஸ்விஃப்ட்

அதிக செயல்திறன் பெற்ற கார்களுக்கான பட்டியலில் ஆல்ஃபா ரோமியா ஜியூலியா குவாடரிஃபோகிலியோ, ஆடி ஆர்.எஸ்3, பிஎம்டபுள்யூ எம்5, ஹோண்டா சிவிக் டைப் ஆர் மற்றும் லக்சஸ் எல்.சி 500 போன்ற கார்கள் இடம்பெற்றுள்ளன.

Most Read Articles
English summary
Read in Tamil: New Suzuki Swift Makes It To The Final Of World Car Awards (WCOTY) 2018. Click for Details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X