நாள் ஒன்றுக்கு 689 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை... புதிய சாதனை

அறிமுகம் செய்யப்பட்டு 145 நாட்களில் ஒரு லட்சம் யூனிட்டுகள் என்ற இமாலய சாதனையை படைத்திருக்கிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 689 கார்கள் என்ற வீதத்தில் புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் விற்பனை சென்று கொண்டி

By Saravana Rajan

எதிர்பார்த்தது போலவே புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் விற்பனையில் கலக்கி வருகிறது. அறிமுகம் செய்யப்பட்டு 145 நாட்களில் விற்பனையில் ஒரு லட்சம் யூனிட்டுகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

நாள் ஒன்றுக்கு 689 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை... புதிய சாதனை

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. வடிவமைப்பு, வசதிகளில் முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக மாற்றம் செய்யப்பட்ட இந்த கார் எதிர்பார்த்தது போலவே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

நாள் ஒன்றுக்கு 689 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை... புதிய சாதனை

அறிமுகம் செய்யப்பட்டு 145 நாட்களில் ஒரு லட்சம் யூனிட்டுகள் என்ற இமாலய சாதனையை படைத்திருக்கிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 689 கார்கள் என்ற வீதத்தில் புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் விற்பனை சென்று கொண்டிருக்கிறது. இது மாருதிக்கு பெரும் உற்சாகத்தை தந்துள்ளது.

நாள் ஒன்றுக்கு 689 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை... புதிய சாதனை

புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் ஹார்ட்டெக் என்ற நவீன கட்டமைப்பில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பழைய மாடலைவிட அதிக வலுவானதாகவும், குறைவான எடை கொண்டதாகவும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள், 15 அங்குல அலாய் வீல்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

நாள் ஒன்றுக்கு 689 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை... புதிய சாதனை

உட்புற டிசைனும் முற்றிலும் புதிது. டேஷ்போர்டு அமைப்பு மாறி இருப்பதுடன், புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி உள்ளிட்ட பல நவீன வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

நாள் ஒன்றுக்கு 689 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை... புதிய சாதனை

இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் தக்க வைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 83 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டீசல் எஞ்சின் 74 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

நாள் ஒன்றுக்கு 689 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை... புதிய சாதனை

பெட்ரோல் மாடல் லிட்ேடருக்கு 22 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 28.4 கிமீ மைலேஜையும் தரும் என்று மாருதி நிறுவனம் தெரிவிக்கிறது. நடைமுறையிலும் மிகச் சிறப்பான மைலேஜை வழங்கும் என்ற நம்பகத்தன்மையை பெற்றிருக்கிறது

நாள் ஒன்றுக்கு 689 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை... புதிய சாதனை

இதர சிறப்பம்சங்கள் மட்டுமின்றி, மிக சவாலான விலையில் புதிய மாருதி ஸ்விஃப்ட் விற்பனைக்கு வந்ததும் வாடிக்கையாளர்களிடத்தில் தொடர்ந்து பேராதரவை பெற முக்கிய காரணம். புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் பெட்ரோல் மாடல் ரூ.4.99 லட்சம் ஆரம்ப விலையிலும், டீசல் மாடல் ரூ.5.99 லட்சம் ஆரம்ப விலையிலும் விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
The Maruti Suzuki Swift has recorded one lakh sales in just 145 days. This is the fastest sales of any car in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X