தொடங்கியதா 2018 ஸ்விஃப்ட் கார் முன்பதிவு..?? விற்பனையகங்களில் குவியும் வாடிக்கையாளர்கள் கூட்டம்..!!
தொடங்கியதா 2018 ஸ்விஃப்ட் கார் முன்பதிவு..?? விற்பனையகங்களில் குவியும் வாடிக்கையாளர்கள் கூட்டம்..!!
டெல்லி நகரத்தில் பிப்ரவரி மாதம் நடக்கும் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி சுஸுகி புதிய தலைமுறைக்கான ஸ்விஃப்ட் காரை அறிமுகம் செய்கிறது.

நாட்டில் பல வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த கார், இந்திய ஹேட்ச்பேக் கார் டிரென்டில் புதிய மைல்கல்லை படைக்கலாம் என்று தெரிகிறது.
Recommended Video


இந்தியாவில் இயங்கும் சில குறிப்பிட்ட டீலர்கள் புதிய ஸ்விஃப்ட் காருக்கான முன்பதிவு செய்யும் பணிகளை தொடங்கியுள்ளார்கள்.
ஆனால் இதுவரை மாருதி சுஸுகி இந்த காருக்கான முன்பதிவு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காருக்கான முன்பதிவு விவரங்களை திரட்டிய போது, பெங்களூருவில் உள்ள சில டீலர்கள் புக்கிங் குறித்த தகவல்களை டிரைவ்ஸ்பார்க்கிடம் உறுதி செய்தனர்.

வாடிக்கையாளர்கள் ரூ. 11,000 முன்பணமாக செலுத்தி புதிய ஸ்விஃப்ட் காரை புக்கிங் செய்யலாம் என்றும், பழைய மாடல் ஸ்விஃப்ட் கார் எங்கும் கையிருப்பில் இல்லை என டீலர்கள் தெரிவித்தனர்.
Trending On Drivespark Tamil:

மாருதி சுஸுகி புதிய தலைமுறைக்கான ஸ்விஃப்ட் கார் தயாரிப்பு பணிகளை ஏற்கனவே நிறைவு செய்துவிட்டதாக நாங்கள் அறிவித்திருந்தது. அதனால் இந்தக்கார் எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம் என இருந்த நிலையில், தற்போது புக்கிங் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெங்களூரை சேர்ந்த டீலர் ஒருவர் புதிய ஸ்விஃப்ட் காரில் டிரிம் அளவுகள் அப்படியே இருப்பதாக கூறினார்.
மேலும் காரில் முன்பக்க ஏர்பேகுகள் மற்றும் ஏபிஎஸ் உடன் கூடிய பிரேக்கிங் போன்ற கட்டமைப்புகள் சாதாரணமாகவே இருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஸ்விஃப்ட் காருக்கான அதிகாரப்பூர்வ முன்பதிவு பணிகள் இம்மாத இறுதியில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் புக்கிங் செய்து காரை டெலிவெரி எடுக்க குறைந்தது இரண்டு முதல் மூன்று கால மாதங்கள் ஆகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், புதிய தலைமுறைக்கான ஸ்விஃப்ட் காரின் புக்கிங் மற்றும் டெலிவெரி தொடர்பான அனைத்து விவரங்களும் விரைவில் மாருதி சுஸுகி அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளது.

2018 ஸ்விஃப்ட் காரின் முன்பக்க மற்றும் ரியர் பகுதிகள் அனைத்தும் புதுமையான வடிவமைப்பை பெற்றுள்ளன. ஆனால் ஸ்விஃப்டிற்கான தனிப்பட்ட டிசைன் அமைப்பான கூர்மையான கூரை வடிவமைப்பு புதிய மாடலிலும் தொடர்வது சிறப்பு.

காரில் இடம்பெற்றுள்ள ப்ரொஜக்டர் முகப்பு விளக்குகள் மற்றும் டெயில் விளக்குகள், புதிய ஸ்விஃப்ட் ஒரு ப்ரீமியம் தர அம்சத்தை பெற்ற கார் என்பதை உறுதிசெய்கிறது.
புதிய மாருதி டிசையர் மாடலை போலவே ஸ்விஃப்ட் காரின் உள்கட்டமைப்பில் பல்வேறு தேவைகள் மற்றும் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, ஸ்போர்ட் ரகத்திலான புதிய ஃபிளாட்-பாட்டம் ஸ்டீயரிங் வீல் இதில் உள்ளது, புதிய இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் உயர் தர லெதர்களாலான இருக்கை தேர்வுகள் இதில் உள்ளன.

2018 ஸ்விஃப்ட் கார் ஹார்டெக்ட் பிளாட்பாரமின் கீழ் தயாராகியுள்ளது. இதன் கீழ் தான் முன்னர் மாருதி சுஸுகி பலேனோ மற்றும் புதிய டிசையர் கார்களை தயாரித்திருந்தது.

தற்போதைய மாடலை விட மிகவும் குறைந்த எடையில் தயாராகியுள்ள இந்த கார், கையாள்வதில் எளிமையாக இருக்க பல்வேறு கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என இருவேறு தேர்வுகள் கொண்ட எஞ்சினில் இது வெளிவருகிறது. எஞ்சின் தேர்வுகளுக்கு ஏற்றவாறு 82 பிஎச்பி மற்றும் 74 பிஎச்பி ஆற்றலை இது வழங்கும்.

5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ள புதிய ஸ்விஃப்ட் கார் ஏஎம்டி தேவையிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2018ம் ஆண்டில் இந்திய வாகன சந்தையில் நடக்கும் முதலாவது பெரிய கார் வெளியீடாக புதிய ஸ்விஃப்ட் காரின் அறிமுக விழா அமையவுள்ளது.

இந்தியாவின் ஆகச்சிறந்த பெரிய விற்பனை திறனை பெற்றுள்ள ஹேட்ச்பேக் மாடலான ஸ்விஃப்ட் கார், தனது புதிய பதிப்பில் தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் வடிவமைப்பில் பல வாடிக்கையாளர்களை வசியம் செய்துவிட்டது.
Trending On Drivespark Tamil:

2018ம் ஆண்டு தொடக்கத்தில் அதிரடியாக வெளிவரும் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் கார், இந்தியாவில் ஹூண்டாய் கிரான்டு ஐ10 மற்றும் ஃபோர்டு ஃபிகோ கார்களுக்கு சரிநகர் போட்டியாக இருக்கும்.
Trending DriveSpark YouTube Videos


Click it and Unblock the Notifications