புதிய மாருதி ஸ்விஃப்ட் காருக்கு குவியும் முன்பதிவு... மலைக்க வைக்கும் வெயிட்டிங் பீரியட்!

Written By:

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் காருக்கு முன்பதிவு குவிந்து வருகிறது. இதனால், இந்த காருக்கான காத்திருப்பு காலம் வெகுாக அதிகரித்து வருகிறது.

புதிய மாருதி ஸ்விஃப்ட் காருக்கு புக்கிங் குவிகிறது...!

வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் கார் வரும் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. விலை உள்ளிட்ட முக்கிய விபரங்கள் அப்போது வெளியிடப்படும்.

புதிய மாருதி ஸ்விஃப்ட் காருக்கு புக்கிங் குவிகிறது...!

இந்த நிலையில், புதிய மாருதி ஸ்விஃப்ட் காருக்கு கடந்த 11ந் தேதி முதல் டீலர்களில் முன்பதிவு துவங்கப்பட்டு நடந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் காருக்கு 6 முதல் 8 வாரங்கள் காத்திருப்பு காலம் நீண்டுள்ளது தெரிய வந்துள்ளது.

Recommended Video - Watch Now!
Andhra Pradesh State Transport Bus Crashes Into Bike Showroom - DriveSpark
புதிய மாருதி ஸ்விஃப்ட் காருக்கு புக்கிங் குவிகிறது...!

டீம் பிஎச்பி தளத்தின் உறுப்பினர் ஒருவர் புதிய மாருதி ஸ்விஃப்ட் காருக்கு முன்பதிவு செய்த ஆவணத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், காத்திருப்பு காலம் வெகுவாக நீண்டுள்ளது உறுதியாகி உள்ளது.

புதிய மாருதி ஸ்விஃப்ட் காருக்கு புக்கிங் குவிகிறது...!

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படாத நிலையில், புதிய மாருதி ஸ்விஃப்ட் காருக்கு வாடிக்கையாளர்கள் முண்டியடித்து முன்பதிவு செய்து வருவது இந்த செய்தியின் மூலமாக உணர்ந்து கொள்ள முடிகிறது.

புதிய மாருதி ஸ்விஃப்ட் காருக்கு புக்கிங் குவிகிறது...!

புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. டிசைனிலும் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தாலும், அந்த துள்ளலான டிசைன் தொடர்கிறது.

புதிய மாருதி ஸ்விஃப்ட் காருக்கு புக்கிங் குவிகிறது...!

மூன்றாம் தலைமுறை மாடலாக வெளிவரும் புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் 12 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வருகிறது. முதல்முறையாக ஆட்டோமேட்டட் மேனுவல் கியர்பாக்ஸ் [ஏஎம்டி] ஆப்ஷன்களிலும் வருகிறது.

புதிய மாருதி ஸ்விஃப்ட் காருக்கு புக்கிங் குவிகிறது...!

இசட்எக்ஸ்ஐ ப்ளஸ் என்ற டாப் வேரியண்ட்டில்ல 15 அங்குல டியூவல் டோன் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கும். புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் இருக்கும்.

புதிய மாருதி ஸ்விஃப்ட் காருக்கு புக்கிங் குவிகிறது...!

உட்புறத்தில் தொடுதிரை வசதியுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் போன்றவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

புதிய மாருதி ஸ்விஃப்ட் காருக்கு புக்கிங் குவிகிறது...!

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரில் இபிடி நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், இரண்டு ஏர்பேக்குகள், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட் போன்றவை முக்கிய பாதுகாப்பு வசதிகளாக இருக்கின்றன.

புதிய மாருதி ஸ்விஃப்ட் காருக்கு புக்கிங் குவிகிறது...!

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரில் வாடிக்கையாளர்களிடத்தில் அதீத நம்பிக்கையை பெற்ற 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வருகிறது. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

புதிய மாருதி ஸ்விஃப்ட் காருக்கு புக்கிங் குவிகிறது...!

டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 74 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்கள் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 5 ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

புதிய மாருதி ஸ்விஃப்ட் காருக்கு புக்கிங் குவிகிறது..!

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரை வாங்குவதற்கு விருப்பமுடையவர்கள், இப்போதே முன்பதிவு செய்து வைத்துக் கொண்டால் விரைவாக டெலிவிரி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இல்லையெனில், பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

English summary
New Maruti Swift Waiting Period Crosses 8 Weeks.
Story first published: Tuesday, January 23, 2018, 12:09 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark