புதுப்பொலிவுடன் வருகிறது மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவி... ஏஎம்டி மாடலும் உறுதி!!

கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி விரைவில் விற்பனைக்கு வருகிறது. முக்கிய விஷயமாக, மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவியில் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் வருவது உறுதியாகி இருக்கிறது.

By Saravana Rajan

4 மீட்டருக்கும் குறைவான நீளமுடைய காம்பேக்ட் எஸ்யூவி கார் மார்க்கெட்டில், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி விற்பனையில் நம்பர்-1 இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில், அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா நெக்ஸான் மற்றும் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகளின் வருகையால் மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

புதுப்பொலிவுடன் வருகிறது மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவி... ஏஎம்டி மாடலும் உறுதி!!

இந்த நிலையில், வாடிக்கையாளர் கவனம் திசை திரும்புவதை தவிர்க்கும் விதத்தில், கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புதுப்பொலிவுடன் வருகிறது மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவி... ஏஎம்டி மாடலும் உறுதி!!

முக்கிய விஷயமாக, மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவியில் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் வருவது உறுதியாகி இருக்கிறது. மேலும், பல கூடுதல் விபரங்களும் வெளியாகி இருக்கின்றன. அந்த விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

புதுப்பொலிவுடன் வருகிறது மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவி... ஏஎம்டி மாடலும் உறுதி!!

விரைவில் வரும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் டியூவல் ஏர்பேக்குகள் அனைத்து வேரியண்ட்டுகளிலும் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக வழங்கப்பட உள்ளது. இதனால், ஏபிஎஸ் மற்றும் ஏர்பேக்குடன் தற்போது விற்பனையில் உள்ள எல்டிஐ ஆப்ஷனல் பேஸ் மாடல் விற்பனையிலிருந்து விலக்கப்படும் என்று தெரிகிறது.

புதுப்பொலிவுடன் வருகிறது மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவி... ஏஎம்டி மாடலும் உறுதி!!

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியானது LDi,VDi,ZDi மற்றும் ZDi+ ஆகிய 4 மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட்டுகளிலும், ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலானது VDi, ZDi மற்றும் ZDi+ ஆகிய 3 வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும்.

புதுப்பொலிவுடன் வருகிறது மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவி... ஏஎம்டி மாடலும் உறுதி!!

எஞ்சின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இருக்காது. ஃபியட் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் தொடர்ந்து விற்பனைக்கு கிடைக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

புதுப்பொலிவுடன் வருகிறது மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவி... ஏஎம்டி மாடலும் உறுதி!!

தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் பெட்ரோல் மாடலுக்கு இப்போது வாய்ப்பில்லை என்பது தெரியவந்துள்ளது. ஏஎம்டி மாடல் நிச்சயம் அதிக வரவேற்பை பெறும் வாய்ப்பு இருக்கிறது.

புதுப்பொலிவுடன் வருகிறது மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவி... ஏஎம்டி மாடலும் உறுதி!!

தற்போது டாடா நெக்ஸான் எஸ்யூவியானது பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் மாடல்களில் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஆனால், ஏஎம்டி மாடல் ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. இந்த நிலையில், மாருதி பிரெஸ்ஸா கார் மூன்று ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலில் வர இருப்பது நிச்சயம் அதிக வரவேற்பை பெறும் வாய்ப்பு உள்ளது.

புதுப்பொலிவுடன் வருகிறது மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவி... ஏஎம்டி மாடலும் உறுதி!!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டீசலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் இல்லாததும் மாருதி பிரெஸ்ஸாவுக்கு சாதகமான விஷயமாக இருக்கும். ஏனெனில், மாருதி பிரெஸ்ஸாவின் டீசல் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் மிக சவாலான விலையில் விற்பனைக்கு வரும் வாய்ப்புள்ளது.

புதுப்பொலிவுடன் வருகிறது மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவி... ஏஎம்டி மாடலும் உறுதி!!

இவை தவிர்த்து, மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் புதிய கோல்டன் பிரவுன் வண்ணமும் அறிமுகம் செய்யப்பட இருப்பதும் தெரிய வந்துள்ளது. பழைய மாருதி ஸ்விஃப்ட் காரில் பிரபலமான இந்த வண்ணத்தை இப்போது விட்டாரா பிரெஸ்ஸா காரிலும் வழங்க இருக்கிறது மாருதி கார் நிறுவனம்.

புதுப்பொலிவுடன் வருகிறது மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவி... ஏஎம்டி மாடலும் உறுதி!!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட்டுகளைவிட ரூ.50,000 கூடுதல் விலையில் ஏஎம்டி கியர்பாக்ஸ் வேரியண்ட்டுகளை மாருதி விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Monday, May 7, 2018, 14:20 [IST]
English summary
GaadiWaadi reports that Maruti Suzuki is readying the 2018 Vitara Brezza with mild updates.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+