விரைவில் வரும் புதிய மாருதி வேகன் ஆர் காரின் 'ஸ்பை' படங்கள்!

புதிய மாருதி வேகன் ஆர் காரின் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளன. அதனை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

பட்ஜெட் கார் மார்க்கெட்டில் அதிக வரவேற்புடைய மாடல் மாருதி வேகன் ஆர். இந்த நிலையில், கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய வேகன் ஆர் காரை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது மாருதி கார் நிறுவனம். இந்த புதிய வேகன் ஆர் காரின் ஸ்பை படங்களை ரஷ் லேன் தளம் வெளியிட்டு இருக்கிறது.

விரைவில் வரும் புதிய மாருதி வேகன் ஆர் காரின் 'ஸ்பை' படங்கள்!

புதிய மாருதி வேகன் ஆர் காரின் முகப்பு க்ரில் அமைப்பும், ஹெட்லைட் டிசைனும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. க்ரோம் பட்டைகளுடன் கூடிய புதிய க்ரில் அமைப்பு வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

விரைவில் வரும் புதிய மாருதி வேகன் ஆர் காரின் 'ஸ்பை' படங்கள்!

பக்கவாட்டிலும், பின்புறத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. எல்இடி டெயில் லைட்டுகள் உள்ளது சிறப்பு. பின்புற கதவில் ஐட்லிங் ஸ்டாப் பேட்ஜ் கொடுக்கப்பட்டிருப்பதால், இப்போதைய மாடலைவிட அதிக எரிபொருள் சிக்கனம் கொண்ட மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் வரும் புதிய மாருதி வேகன் ஆர் காரின் 'ஸ்பை' படங்கள்!

சுஸுகி நிறுவனத்தின் புதிய ஹார்ட்டெக் பிளாட்ஃபார்மில் புதிய மாருதி வேகன் ஆர் கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதே பிளாட்ஃபார்மில்தான் அண்மையில் வந்த புதிய மாருதி ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்கள் உருவாக்கப்பட்டன.

விரைவில் வரும் புதிய மாருதி வேகன் ஆர் காரின் 'ஸ்பை' படங்கள்!

முந்தைய மாடலைவிட டிசைன் மேம்பட்டு சற்றே பிரிமியம் மாடலாக மாறி இருக்கிறது. அதேநேரத்தில், பழைய 'டால் பாய்' டிசைன் கான்செப்ட்டில் எந்த மாற்றமும் இல்லை.

விரைவில் வரும் புதிய மாருதி வேகன் ஆர் காரின் 'ஸ்பை' படங்கள்!

புதிய மாருதி வேகன் ஆர் காரில் தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும் என்று தெரிகிறது. முன்புற இருக்கைகளுக்கு இரண்டு ஏர்பேக்குகள் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றிருக்கும்.

விரைவில் வரும் புதிய மாருதி வேகன் ஆர் காரின் 'ஸ்பை' படங்கள்!

புதிய ஹார்ட்டெக் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருப்பதால், உட்புறத்தில் அதிக இடவசதியை எதிர்பார்க்கலாம். ஓட்டுதல் தரமும், கையாளுமையும் சிறப்பாக மேம்பட்டிருக்கும் என்றும் நம்பலாம்.

விரைவில் வரும் புதிய மாருதி வேகன் ஆர் காரின் 'ஸ்பை' படங்கள்!

புதிய மாருதி வேகன் ஆர் காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தொடர்ந்து பயன்படுத்தப்பட உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

விரைவில் வரும் புதிய மாருதி வேகன் ஆர் காரின் 'ஸ்பை' படங்கள்!

புதிய மாருதி கார் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய மாடலைவிட சற்றே கூடுதல் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். கூடுதல் வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் மாருதி வேகன் ஆர் காரில் வரவேற்கத்தக்க அம்சங்களாக இருக்கும்.

Article Published On: Saturday, February 17, 2018, 15:59 [IST]
English summary
Rushlane has shared the new Maruti Wagon R spy images without camouflage for the first time in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+