2018 மாருதி வேகன் ஆர் காரின் விற்பனைக்கு வருவது குறித்து புதிய தகவல்!!
மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய மாருதி வேகன் ஆர் கார் தீபாவளிக்கு முன்னதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய மாருதி வேகன் ஆர் கார் தீபாவளிக்கு முன்னதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த காரின் சிறப்பம்சங்கள், மாற்றங்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்று வேகன் ஆர். மாதத்திற்கு சராசரியாக 13,000 கார்களுக்கு மேல் விற்பனையாகி வருகிறது. இந்த சூழலில், அதிகரித்து வரும் சந்தைப் போட்டியை மனதில் வைத்து மாருதி வேகன் ஆர் காரில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

மாருதி வேகன் ஆர் கார் தொடர்ந்து டால் பாய் டிசைனிலேயே வெளிவர இருக்கிறது. அதேநேரத்தில், சேஸீ அதிக உறுதிமிக்கதாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அத்துடன், முகப்பில் புதிய க்ரில் அமைப்பு, ஹெட்லைட் அமைப்புடன் வர இருக்கிறது.

புதிய வீல் கவர்கள், புதிய டெயில் லைட் க்ளஸ்ட்டர் அமைப்புடன் வர இருக்கிறது. ஒட்டுமொத்த டிசைனில் பெரிய மாற்றங்கள் இல்லை என்றாலும், புதுப்பொலிவுடன் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும்.

உட்புறத்தில் கூடுதல் இடவசதி கொண்டதாக வடிவமைப்பில் சில மாறுதல்கள் செய்யப்பட்டு இருக்கும். தொடுதிரை வசதியுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற இருக்கிறது. அப்ஹோல்ஸ்ட்ரியும் உயர்தரமானதாக இருக்கும்.

புதிய மாருதி வேகன் ஆர் காரில் மூன்று சிலிண்டர்கள் கொண்ட 1.0 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் தொடர்ந்து தக்க வைக்கப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாகஸ் தவிர்த்து, ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் வரும்.

தற்போது புதிய மாருதி வேகன் ஆர் கார் தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆய்வுகளின் அடிப்படையில் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு, இன்னும் சில மாதங்களில் உற்பத்திக்கு தயாராகிவிடும்.
ரூ.4.5 லட்சம் முதல் ரூ.5.5 லட்சம் இடையிலான விலைப் பட்டியலில் புதிய மாருதி வேகன் ஆர் கார் எதிர்பார்க்கப்படுகிறது. டாடா டியாகோ, ரெனோ க்விட் கார் மற்றும் விரைவில் வரும் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications