2018 மினி கூப்பர் கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விபரம்!!

2018 மினி கூப்பர் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய மினி கூப்பர் காரின் வடிவமைப்பில் சின்ன சின்ன மாற்றங்களுடன் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

By Saravana Rajan

2018 மினி கூப்பர் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

2018 மினி கூப்பர் கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விபரம்!!

வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்ட புதிய மினி கூப்பர் கார் இரண்டு மாடல்களில் வந்துள்ளது. மினி கூப்பர் டி மாடலானது 3 கதவுகள் மற்றும் 5 கதவுகள் கொண்ட மாடல்களில் கிடைக்கும். கூப்பர் எஸ் மாடல் 3 கதவுகள் கொண்ட மாடலாகவும், கன்வெர்ட்டிபிள் எனப்படும் திறந்து மூடும் கூரை அமைப்புடைய மாடலிலும் கிடைக்கும்.

2018 மினி கூப்பர் கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விபரம்!!

புதிய மினி கூப்பர் காரின் வடிவமைப்பில் சின்ன சின்ன மாற்றங்களுடன் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு இருக்கிறது. பளபளப்பு மிகுந்த கருப்பு வண்ண க்ரில் அமைப்பு, எல்இடி பகல்நேர விளக்குகளுடன் கூடிய வட்ட வடிவ ஹெட்லைட் ஹவுசிங். சற்று பெரிய அளவிலான டெயில் லைட் க்ளஸ்ட்டர் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

2018 மினி கூப்பர் கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விபரம்!!

இந்த காரில் 6.5 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. விருப்பத்தின் அடிப்படையில் 8.8 அங்குல தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்ஷனலாக கிடைக்கிறது. இந்த ஆப்ஷனல் மாடலில் டச்பேடு வசதி, விசேஷ நேவிகேஷன் சிஸ்டம், 20 ஜிபி ஹார்டு டிஸ்க் போன்றவற்றுடன் கிடைக்கிறது.

2018 மினி கூப்பர் கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விபரம்!!

இந்த காரில் வயர்லெஸ் சார்ஜர், 12 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஆடியோ ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம், ஆம்பியன்ட் லைட்டிங், மல்டி பங்ஷனல் லெதர் ஸ்டீயரிங் வீல், க்ரூஸ் கன்ட்ரோல், பார்க் அசிஸ்டென்ட், ரியர் வியூ கேமரா, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, ஆட்டோ ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் சன்ரூஃப் வசதிகள் உள்ளன.

2018 மினி கூப்பர் கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விபரம்!!

புதிய மினி கூப்பர் எஸ் மாடலில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 189 பிஎச்பி பவரையும், 280 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

2018 மினி கூப்பர் கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விபரம்!!

மினி கூப்பர் டி மாடலில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 112 பிஎச்பி பவரையும், 270 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் 3 விதமான நிலைகளில் இயக்கக்கூடிய டிரைவிங் மோடு வசதியை பெற்றிருக்கிறது.

2018 மினி கூப்பர் கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விபரம்!!

புதிய மினி கூப்பர் காரில் இரண்டு ஏர்பேக்குகள், பிரேக் அசிஸ்ட் வசதியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கார்னரிங் பிரேக் கன்ட்ரோல், டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ரன் ஃப்ளாட் டயர்கள் நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக இருக்கின்றன.

2018 மினி கூப்பர் கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விபரம்!!

புதிய மினி கூப்பர் கார் ரூ.29.70 லட்சம் முதல் ரூ.37.10 லட்சம் எக்ஸ்ஷோரூம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் வந்துள்ளது.

Variant Price
3-door Cooper D (Diesel) ₹29,70,000
3-door Cooper S (Petrol) ₹33,20,000
5-door Cooper D (Diesel) ₹35,00,000
Convertible Cooper S (Petrol) ₹37,10,000

More from DriveSpark

Article Published On: Friday, May 25, 2018, 10:17 [IST]
English summary
2018 Mini Cooper launched in India: Mini has launched the new 2018 Cooper S and Cooper D in the Indian market
மேலும்... #மினி #mini
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+