2018 மினி கன்ட்ரிமேன் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!
இந்தியாவில் புதிய மினி கன்ட்ரிமேன் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் புதிய மினி கன்ட்ரிமேன் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கடந்த பிப்ரவரி மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடந்த சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் புதிய மினி கன்ட்ரிமேன் கார் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. டிசைனில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு கூடுதல் பொலிவுடன் இந்த கார் காட்சிக்கு வந்தது. இந்த நிலையில், இன்று முறைப்படி விற்பனைக்கு களமிறக்கப்பட்டது.

புதிய மினி கன்ட்ரிமேன் கார் இந்தியாவில் மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்ககும். கூப்பர் எஸ், கூப்பல் எஸ் ஜேசிடபிள்யூ மற்றும் கூப்பர் எஸ்டி ஆகிய மூன்று மாடல்களில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ள முடியும்.

கன்ட்ரிமேன் கூப்பர் எஸ் மற்றும் கூப்பர் ஜேசிடபிள்யூ மாடல்களில் 2.0 லிட்டர் ட்வின் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது இந்த எஞ்சின் அதிகபட்சமாக 190 பிஎச்பி பவரையும், 280 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது.

கூப்பர் எஸ்டி மாடலில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 188 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்க ல்லது. அனைத்து வேரியண்ட்டுகளிலுமே 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய மினி கன்ட்ரிமேன் காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன. புதிய பம்பர் அமைப்பு மற்றும் க்ரில் அமைப்பு புதிய பொலிவை கொடுத்துள்ளது. முன்புறம், பின்புற பம்பர்களுக்கு கீழே ஸ்கிட் பிளேட் பொருத்தப்பட்டு இருக்கிறது. எல்இடி டெயில் லைட்டுகள் மற்றும் இரட்டைக் குழல் புகைப்போக்கிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த காரில் ஸ்போர்ட்ஸ் இருக்கைகள் இடம்பெற்றுள்ளன. 8.8 அங்குல திரையுடன் கூடிய புதிய ஐ-ட்ரைவ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. டியூவல் ஸோன் ஆட்டோமேட்டிக் ஏர் கண்டிஷன் சிஸ்டம் , மல்டி ஃபங்ஷன் பட்டன்களுடன் ஸ்டீயரிங் வீல் உள்ளிட்டவை முக்கிய சிறப்பம்சங்கள்.

புதிய மினி கன்ட்ரிமேன் கார் ரூ.34.9 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ, ஆடி க்யூ3 மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்1 ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

புதிய மினி கன்ட்ரிமேன் காரின் உற்பத்தி சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் ஏற்கனவே துவங்கப்பட்டு விட்டது. வரும் ஜூன் மாதம் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்பட இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








