மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி டீலர்களில் தரிசனம்... விரைவில் அறிமுகமாகிறது!

அடுத்த மாதம் புதிய மிட்சுபிஷி எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த புதிய மாடலுக்கு ஏற்கனவே மிட்சுபிஷி டீலர்களில் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

By Saravana Rajan

இந்த நிலையில், இந்த புதிய எஸ்யூவி மிட்சுபிஷி ஷோரூம்களை வந்தடைந்துள்ளது. இந்த வார இறுதியிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும் வாய்ப்பும் வழங்கப்பட இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.

மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி டீலர்களில் தரிசனம்... விரைவில் அறிமுகமாகிறது!

மூன்றாம் தலைமுறை மாடலான புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி பெட்ரோல் மாடலில் மட்டுமே விற்பனைக்கு வர இருக்கிறது. டீசல் மாடல் இல்லை. இந்த எஸ்யூவியில் 2.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 164 பிஎச்பி பவரையும், 222 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வருகிறது. பேடில் ஷிஃப்ட் வசதியும் உள்ளது.

மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி டீலர்களில் தரிசனம்... விரைவில் அறிமுகமாகிறது!

புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி அதிகபட்ச வசதிகள் கொண்ட ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த மாடலில் டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, சன்ரூஃப், புஷ் பட்டன் ஸ்டார்ட், கீ லெஸ் என்ட்ரி, டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், லெதர் இருக்கைகள், பார்க்கிங் பிரேக் வசதியுடன் வர இருக்கிறது.

மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி டீலர்களில் தரிசனம்... விரைவில் அறிமுகமாகிறது!

புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி இந்தியாவில் 7 வண்ணங்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. பிளாக் பியர்ல், காஸ்மிக் புளூ, ஓரியண்ட் ரெட், கூல் சில்வர், ஒயிட் சாலிட், ஒயிட் பியர்ல் மற்றும் டைட்டானியம் க்ரே ஆகிய வண்ணத் தேர்வுகளில் வருகிறது.

மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி டீலர்களில் தரிசனம்... விரைவில் அறிமுகமாகிறது!

புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவியில் 7 ஏர்பேக்குகள், இபிடி மற்றும் பிரேக் வசதி, ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஆக்டிவ் ஸ்டெடபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஆட்டோமேட்டிக் எல்இடி ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்களுடன் வருகிறது.

மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி டீலர்களில் தரிசனம்... விரைவில் அறிமுகமாகிறது!

பழைய மாடலைவிட பரிமாணத்தில் சற்று கூடி இருக்கிறது. முக்கிய உதிரிபாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு சென்னை, திருவள்ளூரில் உள்ள ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆலையில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது.

மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி டீலர்களில் தரிசனம்... விரைவில் அறிமுகமாகிறது!

ரூ.32 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் ஆகிய எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Source: TeamBHP

More from DriveSpark

Article Published On: Tuesday, May 15, 2018, 10:26 [IST]
English summary
Mitsubishi is all set to launch the new 2018 Outlander in the country. Now, TeamBHP reports that the 2018 Mitsubishi Outlander has started arriving at dealerships and the test drive vehicles will be available this week. The bookings for the 2018 Outlander is already open and the deliveries will begin from June 2018.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+