புதிய ரேஞ்ச்ரோவர் மற்றும் ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்!!
புதிய ரேஞ்ச்ரோவர் மற்றும் ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி மாடல்கள் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இரண்டு பெட்ரோல் மற்றும் இரண்டு டீசல் மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கும்.
புதிய ரேஞ்ச்ரோவர் மற்றும் ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி மாடல்கள் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பிரத்யேக படங்கள் மற்றும் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

லேண்ட்ரோவர் நிறுவனத்தின் புதிய ரேஞ்ச்ரோவர் மற்றும் ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவிகள் ஜெர்ரி மெகவர்னின் புதிய டிசைன் கொள்கையின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. பழைய மாடலைவிட வடிவமைப்பில் மிகச் சிறப்ாபக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் விற்பனைக்கு வந்த ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவியின் டிசைன் அம்சங்கள் இந்த மாடல்களில் காண முடிகிறது.

வடிவமைப்பில் மட்டுமின்றி, தொழில்நுட்ப அம்சங்களிலும் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவி மாடல்களில் எலக்ட்ரானிக் ஏர் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டெர்ரெயின் ரெஸ்பான்ஸ் 2 என்ற மேம்படுத்தப்பட்ட ஆஃப்ரோடு தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. ஆஃப்ரோடு சாகசங்களின்போது அதிகபட்ச பாதுகாப்பு மற்றும் ஓட்டுதல் முறையை தரும் தொழில்நுட்பங்களும் உள்ளன.

புதிய ரேஞ்ச்ரோவர் மாடல்களில் டச் புரோ டூவோ டியூவல் திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கின்றது. பல தொழில்நுட்ப வசதிகளை ரோட்டரி நாப் மூலமாக கட்டுப்படுத்தும் வசதிகளும் உள்ளன.

இந்த கார்களில் 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. கார் இயங்கும் நிலை குறித்து நிகழ்நேர தகவல்களை இந்த இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மூலமாக தெரிந்து கொண்டு செயல்பட முடியும்.

புதிய ரேஞ்ச்ரோவர் மற்றும் ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் மாடல்கள் 4 எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும். இந்த எஸ்யூவி மாடல்கள் 335 பிஎச்பி பவரையும், 450 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின் மற்றும் 518 பிஎச்பி பவரையும், 625 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 5.0 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

அதேபோன்று, டீசல் மாடல்களில் 3.0 லிட்டர் வி6 எஞ்சின் 190 பிஎச்பி பவரையும், 255 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. 4.4 லிட்டர் வி8 எஞ்சின் 250 பிஎச்பி பவரையும், 740 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கிறது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. 4 வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளது.

புதிய ரேஞ்ச்ரோவர் எஸ்யூவி ரூ.1.74 கோடி ஆரம்ப விலையிலும், ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி ரூ.99.48 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.

2018 மாடலாக வெளியிடப்பட்ட புதிய ரேஞ்ச்ரோவர் மற்றும் ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி மாடல்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் முன்பதிவு துவங்கப்பட்டது. லேண்ட்ரோவர் இணையதளத்தில் இந்த கார்களுக்கு ஆர்டர் செய்யும் வசதியும் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








