2018 ரெனோ க்விட் கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!!

ரூ.2.66 லட்சம் விலையில் 2018 ரெனோ க்விட் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. வடிவமைப்பில் மாறுதல்கள் மற்றும் கூடுதல் அம்சங்களுடன் புதிய ரெனோ க்விட் கார் 8 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு க

By Saravana Rajan

2018 ரெனோ க்விட் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரில் இடம்பெற்றிருக்கும் கூடுதல் சிறப்பம்சங்கள், விலை விபரத்தை இந்த செய்தியில் காணலாம்.

2018 ரெனோ க்விட் கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!!

காரில் ஏனைய பகுதிகளில் சிறிய மாற்றங்களுடன் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் சி வடிவிலான ஹெட்லைட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. புதிய க்ரோம் க்ரில் அமைப்பு இடம்பிடித்துள்ளது. முழுமையான வீல் கவர், பாடி கலர் பம்பர்கள் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

2018 ரெனோ க்விட் கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!!

புதிய ரெனோ க்விட் கார் 8 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். போட்டியாளர்களைவிட கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்டதாக இந்த வேரியண்ட்டுகள் விற்பனைக்கு வந்துள்ளன. குறிப்பாக, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, 12வோல்ட் சார்ஜர், பின் இருக்கையில் ஆர்ம் ரெஸ்ட் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

2018 ரெனோ க்விட் கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!!

புதிய ரெனோ க்விட் காரில் 7 அங்குல திரையுடன் கூடிய தொடுதிரை இன்ஃபோடெயிமென்ட் சிசஸ்டம், நேவிகேஷன் வசதி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், லேன் சேஞ்ச் இண்டிகேட்டர், லோடு லிமிட்டர் நுட்பத்துடன் கூடிய சீட்பெல்ட் ப்ரீ டென்ஷனர் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

2018 ரெனோ க்விட் கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!!

விலை உயர்ந்த மாடலில் பவர் ஸ்டீயரிங், எஞ்சின் இம்மொபைலைசர், 4 ஸ்பீடு மேனுவல் ஏசி, பவர் விண்டோஸ், டிராஃபிக் அசிஸ்ட், ரிமோட் சென்ட்ரல் லாக்கிங் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.

2018 ரெனோ க்விட் கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!!

புதிய ரெனோ க்விட் காரில் 800சிசி மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்கள் தக்க வைக்கப்பட்டுள்ளன. 800 சிசி எஞ்சின் அதிகபட்சமாக 52 பிஎச்பி பவரையும், 72 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 1.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 91 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

2018 ரெனோ க்விட் கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!!

018 மாடலாக வந்திருக்கும் புதிய ரெனோ க்விட் கார் ரூ.2.66 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. வழக்கம்போல் ஆரம்ப ரக ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் சிறந்த தேர்வாக அமையும்.

2018 ரெனோ க்விட் கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!!

விலை பட்டியல்

Kwid 2018 Range Price (ex-showroom, New Delhi)
Standard - 0.8L SCe Rs 266,700
RXE - 0.8L SCe Rs 309,800
RXL - 0.8L SCe Rs 335,900
RXT-O (MT) - 0.8L SCe Rs 382,500
RXT-O (MT) - 1.0 L SCe Rs 404,500
RXT-O- (AMT) - 1.0 L SCe Rs 434,500
KWID Climber MT- 1.0 L SCe Rs 429,500
KWID Climber AMT- 1.0 L SCe Rs 459,500

More from DriveSpark

Article Published On: Monday, August 6, 2018, 11:05 [IST]
English summary
Renault has announced the launch of their new 2018 Kwid. The new 2018 Renault Kwid 'Feature Loaded Range' comes with prices starting from Rs 2.66 lakh, ex-showroom (Delhi).
மேலும்... #ரெனால்ட் #renault
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+