டாடா டியாகோ காரின் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்!
அண்மையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் வருகையால் டாடா டியாகோ காருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில், டாடா டியாகோ காரில் அதிக வசதி
டாடா டியாகோ காரில் அதிக வசதிகள் நிறைந்த புதிய டாப் வேரியண்ட் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

அண்மையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் வருகையால் டாடா டியாகோ காருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில், டாடா டியாகோ காரில் அதிக வசதிகள் கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

டாடா டியாகோ XZ+ என்ற பெயரில் இந்த புதிய வேரியண்ட் வந்துள்ளது. இந்த புதிய வேரியண்ட்டுக்கு ரூ.5.57 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

டியாகோ எக்ஸ்இசட் ப்ளஸ் வேரியண்ட்டில் கேன்யோன் ரெட் மற்றும் ஓசியன் புளூ ஆகிய இரண்டு புதிய இரட்டை வண்ணங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த இரட்டை வண்ண மாடலில் கூரை கருப்பு வண்ணத்தில் இருப்பதுடன் ரியர் ஸ்பாய்லர் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த புதிய மாடலில் பக்கவாட்டில் பாடி கிளாடிங் சட்டங்கள், க்ரோம் அலங்காரத்துடன் பின்புற டெயில் கேட் கதவு, இரட்டை வண்ணத்திலான 15 அங்குல அலாய் வீல்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

தவிரவும், கரும் பூச்சு பின்னணியுடன் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய சைடு மிரர்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்த மாடலில் புதிய 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. கனெக்ட் நெக்ஸ்ட், ஆன்ட்ராய்டு ஆட்டோ, வாய்ஸ் கமாண்ட் மற்றும் டிஜிஸ்ட்டர் கன்ட்ரோல் சுவிட்சுகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகிய பல வசதிகள் உள்ளன.

டாடா டியாகோ காரின் புதிய வேரியண்ட் அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்துள்ள டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன சந்தைப்படுத்துதல் பிரிவு அதிகாரி எஸ்என்.பர்மன்," 2016ம் ஆண்டு எமது இம்பேக்ட் டிசைன் தாத்பரியத்தில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் மாடலான டியாகோ வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. புதுமையான, அதிக வசதிகள் நிறைந்த இந்த கார் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

வாடிக்கையாளர் தரும் ஆதரவை தக்க வைக்கும் விதத்தில், அதிக வசதிகள் நிறைந்த எக்ஸ்இசட் ப்ளஸ் வேரியண்ட்டை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம். இந்த ரக கார்களில் அதிக வசதிகள் நிறைந்த இந்த புதிய வேரியண்ட்டும் வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் என்று நம்புகிறோம்," என்று கூறியுள்ளார்.

டாடா டியாகோ கார் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.05 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 85 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் மாடல் 70 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் மட்டுமே கிடைக்கும். ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்காது.

முழு விலை விபரம்
- டாடா டியாகோ XZ+ பெட்ரோல் - Rs 5.57 lakhs
- டாடா டியாகோ XZ+ பெட்ரோல் இரட்டை வண்ணக் கலவை - Rs 5.64 lakhs
- டாடா டியாகோ XZ+ டீசல் - Rs 6.31 lakhs
- டாடா டியாகோ XZ+ டீசல் இரட்டை வண்ணக் கலவை - Rs 6.38 lakhs
அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை


Click it and Unblock the Notifications