புதிய எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்கும் ஃபோக்ஸ்வேகன்!!

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு நேரடி போட்டியான ரகத்தில் புதிய எஸ்யூவி மாடலை களமிறக்க ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது. இந்த எஸ்யூவியின் டீசரும் இப்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.ஃபோக்ஸ்வேகன் டி கிராஸ் கா

By Saravana Rajan

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு நேரடி போட்டியான ரகத்தில் புதிய எஸ்யூவி மாடலை களமிறக்க ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது. இந்த எஸ்யூவியின் டீசரும் இப்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.

புதிய எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்கும் ஃபோக்ஸ்வேகன்!!

இந்திய மார்க்கெட்டில் இருக்கும் வளமான வர்த்தக வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள ஃபோக்ஸ்வேகன் குழுமம் துடிதுடியாய் துடித்து வருகிறது. தற்போது இந்திய மார்க்கெட்டை ஒரு கைப் பார்க்கும் விதத்தில், புராஜெக்ட் 2.0 என்ற திட்டத்துடன் ரூ.8,000 கோடி முதலீட்டை கொட்ட இருக்கிறது.

புதிய எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்கும் ஃபோக்ஸ்வேகன்!!

இதன்படி, இந்திய மார்க்கெட்டுக்கு சாதகமான அம்சங்கள் பொருந்திய புதிய கார் மாடல்களை வரிசை கட்ட அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. அந்த வகையில், க்ரெட்டாவுக்கு நிகரான புதிய எஸ்யூவி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

புதிய எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்கும் ஃபோக்ஸ்வேகன்!!

ஃபோக்ஸ்வேகன் டி கிராஸ் கான்செப்ட் அடிப்படையில் இந்த புதிய எஸ்யூவி தயாரிப்பு மாடலாக மேம்படுத்தப்படுகிறது. ஃபோக்ஸ்வேகன் எஸ்யூவி கான்செப்ட் மாடலானது 4,133 மிமீ நீளமும், 1,798மிமீ அகலமும், 1,563 மிமீ உயரமும், 2,565 மிமீ வீல் பே் கொண்டதாக இருந்தது. தயாரிப்பு நிலை மாடலும் இதே பரிமாணத்தில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்கும் ஃபோக்ஸ்வேகன்!!

மாருதி பிரெஸ்ஸா, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் போன்று 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட மாடலாக இல்லாமல், சற்றே பிரிமியம் காம்பேக்ட் எஸ்யூவியாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் டீசரில் பின்புற டிசைன் அம்சங்கள் மட்டுமே தெரிய வருகிறது.

புதிய எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்கும் ஃபோக்ஸ்வேகன்!!

எல்இடி டெயில் லைட்டுகள், வசீகரமான பம்பர் அமைப்பு, எல்இடி பனி விளக்குகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக டீசர் மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது. உட்புறத்தில் டேஷ்போர்டு மிகவும் பிரிமியமாக இருப்பதுடன், தொடுதிரைகள் மூலமாக கட்டுப்படுத்தும் வசதிகள் கொடுக்கப்பட்டு இருக்கும் என்பதும் எதிர்பார்ப்பு. வழக்கமான சுவிட்சுகளுக்கு குட்பை சொல்லப்படும் என்பதும் கணிப்பு.

புதிய எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்கும் ஃபோக்ஸ்வேகன்!!

இந்த புதிய எஸ்யூவி ஃபோக்ஸ்வேகன் எம்க்யூபி பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. 1,300 கிலோ எடை கொண்டதாக இருக்கும். ஃபோக்வேகன் வென்ட்டோ மற்றும் ஸ்கோடா ரேபிட் கார்களின் பெட்ரோல், டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் இதிலும் பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது.

புதிய எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்கும் ஃபோக்ஸ்வேகன்!!

ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி எஸ் க்ராஸ், ரெனோ டஸ்ட்டர் உள்ளிட்ட மாடல்கள் மட்டுமின்றி, விரைவில் வர இருக்கும் டாடா எச்5எக்ஸ் எஸ்யூவிக்கும் இது நேரடி போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ரூ.10 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 4, 2018, 13:07 [IST]
English summary
Volkswagen has released official teaser of all new SUV that will rival the likes of Hyundai Creta in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+